wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விடுகதை

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

a)

தேள்

b)

பாம்பு

2.

பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

a)

மரம்

b)

தலைமுடி

3.

உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?

a)

வெங்காயம்

b)

பூண்டு

4.

கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?

a)

சட்டை

b)

கரும்பு

5.

மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?

a)

விழுது

b)

காய்

6.

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

a)

பட்டாசு

b)

மத்தாப்பு

7.

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?

a)

மூச்சு

b)

மனிதன்

8.

கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?

a)

வடை

b)

பூரி

9.

கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?

a)

காகம்

b)

குயில்

10.

வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?

a)

சோளம்

b)

பலா

11.

இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?

a)

வாழை

b)

தென்னை

12.

வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன?

a)

நாய்

b)

பூனை

13.

வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?

a)

சிரிப்பு

b)

உறைப்பு

14.

யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?

a)

கதவு

b)

இமை

15.

உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?

a)

பெயர்

b)

கை

16.

எப்போதும் மழையில் நனைவான் ஆனால் காய்ச்சல் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?

a)

வீடு

b)

குடை

17.

தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?

a)

தொலைபேசி

b)

வானொலி

18.

பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன?

a)

தேங்காய்

b)

மாங்காய்

19.

தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?

a)

மீன்

b)

மீன் வலை

20.

நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?

a)

சிலந்தி

b)

நெசவாளி