Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ BAHASA TAMIL (MENENGAH ATAS)

Total questions: 50

Worksheet time: 2hrs 6mins

Name
Class
Date
1.

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

6

2.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்?

a)

முதுகு

b)

அச்சு

3.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது நெடில்தொடர்க் குற்றியலுகரம்?

a)

பாகு

b)

தெரியாது

4.

ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

a)

4

b)

6

5.

கொடுக்கப்படும் சொற்களில் எது பொருளாகு பெயர்?

a)

உலகம் அழுதது

b)

வாழைக் கறி

6.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது தொழிலாகு பெயர்?

a)

வறுவல் உண்டான்

b)

நாடு போற்றியது

7.

கொடுக்கப்பட்ட சொற்களில் எவை காலவாகு பெயர்?

a)

கார் அறுத்தான்

b)

நீலம் சூடினாள்

c)

கார்த்திகை மலர்ந்தது

8.

கொடுக்கப்பட்ட புணர்ச்சியில் எது சரியாகப் புணர்ந்துள்ளது?

a)

பத்து+பத்து = பப்பத்து

b)

எட்டு+பத்து = என்பது

9.

கொடுக்கப்பட்ட சொற்களில் எவை சரியானவை?

a)

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு

b)

தெற்கு + திசை = தெற்குதிசை

c)

தெற்கு + மேற்கு = தென்மேற்கு

d)

பத்து + நான்கு = பதிநான்கு

10.

கொடுக்கப்பட்ட சொற்களில் எவை சரியானவை?

a)

செய்யாதத் தொழில்

b)

காணாக் காட்சி

11.

கொடுக்கப்பட்ட சொற்களில் பண்புத்தொகையைத் தெரிவு செய்க?

a)

செவ்வானம்

b)

வாழைப்பழம்

12.

கொடுக்கப்பட்ட சொற்களில் இருப்பெயரொட்டுப் பண்புத்தொகையைத் தெரிவு செய்க?

a)

கயல்விழி

b)

ஆடித்திங்கள்

13.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது உவமைத்தொகை?

a)

பவளவாய்

b)

சாரைப்பாம்பு

14.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது சரியாது?

a)

நாய்க்குட்டி

b)

கண்ணகிச் சிலை

15.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது வினைத்தொகை?

a)

குடிநீர்

b)

கனி தின்றான்

16.

திரை கடல் ஓடியும் _____________________________________.

a)

திரவியம் தேடு

b)

திரவியம் தோடு

c)

திரைவியம் தேடு

d)

திரையம் தேடு

17.

கற்றது கைம்மண் அளவு ________________________________

a)

கற்றது உலகளவு

b)

கல்லாதது உலகளவு

c)

கல்லாதது கடலளவு

d)

கற்றது கடலளவு

18.

குந்தித் தின்றால் __________________________

a)

மலையும் மாளும்

b)

குன்றும் மாளும்

c)

கடலும் மாளும்

d)

மழையும் மாளும்

19.

தீட்டின மரத்திலே _________________________

a)

மரம் பார்ப்பதா?

b)

கூர் பார்ப்பதா?

c)

கத்தி பார்ப்பதா?

d)

வேர் பார்ப்பதா?

20.

ஒருவரிடமிருந்து நாம் ஒன்றைப் பெற விரும்பினால் அவருக்கு ஏற்ற வழியிலேயே அணுகி அல்லது செயல்பட்டு அதைப் பெற வேண்டும்.

a)

அகல உழுவதினும் ஆழ உழுவது மேல்

b)

ஆடிக்கறப்பதை ஆடிக்கற பாடிக்கறப்பதைப் பாடிக்கற

c)

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

d)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

21.

நொறுங்கத் தின்றால் _______________

a)

பத்து வயது

b)

நூறு வயது

c)

ஆறு வயது

d)

மூன்று வயது

22.

திக்கற்றவனுக்கு ___________________________

a)

கடவுளே துணை

b)

இறைவனே துணை

c)

தெய்வமே துணை

d)

சாமியே துணை

23.

அகல உழுவதினும் ஆழ உழுவது மேல்

a)

மேலோட்டமாகப் பலவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதே சிறப்பு.

b)

உணவை நன்கு மென்று தின்றால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

c)

துன்பத்திலிருந்து மீள வழி தெரியாதவருக்கு ஆண்டவந்தான் துணை.

d)

நாம் கற்றறிந்தது மிகச்சிலவே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன.

24.

______________________ காரம் போகாது

a)

கடுகு சிறுத்தாலும்

b)

மிளகாய் சிறுத்தாலும்

c)

உப்பு சிறுத்தாலும்

d)

உருவம் சிறுத்தாலும்

25.

___________________ ஒருமிக்கக் கெடும்.

a)

ஒற்றுமையில்லாக் குடும்பம்

b)

ஒற்றுமையான குடும்பம்

c)

அன்பில்லாக் குடும்பம்

d)

அன்பான குடும்பம்

26.

திருடன் __________________ அந்த குழந்தையை ஏமாற்றினான்

a)

அ. ஓய்து ஒழித்து

b)

ஆ. ஒத்து பாடி

c)

இ. இனிப்புக் காட்டி

d)

ஈ. நெளிவு சுழிவு

e)

உ. வெள்ளிடைமலை

27.

பாலன் தன் குடும்பத்திற்காக ______________________ இன்றி உழைத்தார்.

a)

அ. ஓய்து ஒழிச்சல்

b)

ஆ. ஒத்து பாடுதல்

c)

இ. இனிப்புக் காட்டுதல்

d)

ஈ. நெளிவு சுழிவு

e)

உ. வெள்ளிடைமலை

28.

ராமு என்ன சொன்னாலும் சீதா _______________________ அதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

a)

அ. ஓய்து ஒழிச்சல்

b)

ஆ. ஒத்து பாடுதல்

c)

இ. இனிப்புக் காட்டுதல்

d)

ஈ. நெளிவு சுழிவு

e)

உ. வெள்ளிடைமலை

29.

கணக்குப் பாடத்தின் _______________________ தெரிந்ததால், கோமதியால் முழு மதிப்பெண்கள் பெற முடிந்தது.

a)

அ. ஓய்து ஒழிச்சல்

b)

ஆ. ஒத்து பாடுதல்

c)

இ. இனிப்புக் காட்டுதல்

d)

ஈ. நெளிவு சுழிவு

e)

உ. வெள்ளிடைமலை

30.

ஏமாற்றுதல் பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடர் என்ன?

a)

அ. ஓய்து ஒழிச்சல்

b)

ஆ. ஒத்து பாடுதல்

c)

இ. இனிப்புக் காட்டுதல்

d)

ஈ. நெளிவு சுழிவு

e)

உ. வெள்ளிடைமலை

31.

உதைத்த பந்து

a)

எதிர்மறை பெயரெச்சம்

b)

பெயரெச்சம்

c)

ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

32.

பறக்காத பறவை

a)

எதிர்மறை பெயரெச்சம்

b)

பெயரெச்சம்

c)

ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

33.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் பெயரெச்ச சொல்லை அடையாளங்காண்க.

a)

அ. குடித்த நீர்

b)

ஆ. கடித்துத் தின்றான்

c)

இ. கூடிப் பேசினர்

d)

ஈ. ஆடிப் பாடு

34.

படித்த சிறுவன்

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

35.

________________________________ இல்லாப் பரம்பொருளாகிய இறைவனை நாம் தினமும் காலையும் மாலையும் வணங்க வேண்டும்.

a)

சண்டை சச்சரவு

b)

விருப்பு வெறுப்பு

c)

தயவு தாட்சணியம்

d)

ஆதி அந்தம்

36.

சிறு வயது முதல் நம்மைச் _______________________ வளர்த்த நம் தாயை என்றும் மறக்கக் கூடாது.

a)

சண்டை சச்சரவு

b)

விருப்பு வெறுப்பு

c)

தயவு தாட்சணியம்

d)

சீராட்டிப் பாராட்டி

37.

எவ்வளவுதான் நண்பர்களுடன் பகை இருந்தாலும் பள்ளியில் ______________________________ களில் ஈடுபடாமல் பாடத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

a)

சண்டை சச்சரவு

b)

விருப்பு வெறுப்பு

c)

தயவு தாட்சணியம்

d)

ஆதி அந்தம்

38.

இறைவன் தம் பக்தர்களுக்கு ________ பார்க்காமல் அருள் புரிவான்.

a)

சீராட்டிப் பாராட்டி

b)

விருப்பு வெறுப்பு

c)

சண்டை சச்சரவு

d)

தயவு தாட்சணியம்

39.

நண்பர்களிடையே ஏற்படும் வாக்கு வாதம் __________ மாறி நட்பிற்குப் பங்கம் விளைவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

a)

சீராட்டிப் பாராட்டி

b)

விருப்பு வெறுப்பு

c)

சண்டை சச்சரவு

d)

தயவு தாட்சணியம்

40.

கொடுக்கப்பட்டுள்ள பிறவினை வாக்கியத்திற்கேற்ற தன்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்த மதியழகனுக்குப் பள்ளி முதல்வர் பரிசு வழங்குவிப்பார்.

b)

ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்த மதியழகனுக்குப் பள்ளி முதல்வர் பரிசு வழங்கினார்.

c)

ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்த மதியழகனுக்குப் பள்ளி முதல்வர் பரிசு வழங்கப்பட்டது.

d)

ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்த மதியழகனுக்குப் பள்ளி முதல்வரால் பரிசு வழங்கப்பட்டது.

41.

பின்வருவனவற்றில் சரியான பிறவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கவிதா பாடுகிறாள்.

b)

சிறுவர்கள் விளையாடுகின்றனர்.

c)

அக்காள் சமைக்கிறாள்.

d)

அண்ணன் படிப்பித்தான்.

42.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல் ______ ஆகும்.

a)

பிறவினை

b)

தன்வினை

c)

வினையெச்சம்

d)

பெயரெச்சம்

43.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களுள் பிறவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தம்பி படித்தான்

b)

ஆசிரியர் எழுதினார்

c)

அமுதா ஆட்டுவித்தாள்

d)

தாத்தா உண்டார்

44.

சரியான தன்வினை பிறவினை இணையைத் தெரிவு செய்க.

a)

கற்றார் - கற்கிறார்

b)

சென்றார் - செல்கிறார்

c)

பாடினார் - பாடுவார்

d)

செய்தார் - செய்துவித்தார்

45.

கொடுக்கப்பட்டுள்ள படங்களுள் பிறவினையைக் காட்டும் படத்தினைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
46.

கீழ்க்காண்பவற்றுள் எது தன்வினை வாக்க்கியம்?

a)

தம்பி படிப்பித்தான்

b)

மாதவி நடனம் ஆடினாள்

c)

தாத்தா உண்பித்தார்

d)

கலைஞர் பாடுவித்தார்

47.

கோபு நல்ல பண்பாளர். எப்பொழுதும் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வார். அவருடைய அரவணைப்பில் வளர்ந்ததால் சுட்டித்தனமாகத் திரிந்த மணி இன்று அனைவரும் போற்றும் வண்ணம் வளர்ந்து நின்றான்.

a)

தர்மம் தலை காக்கும்

b)

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்

c)

துணை போனாலும் பிணை போகாதே

d)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

48.

"வாலிப வனப்பில் இரத்தம் சூடாக இருக்கும் போது செய்த தீமைகள்தான் முதுமையில் நீ நிம்மதி இன்றி வாழ்வதற்கு மூலக்காரணமாக நிற்கின்றன. எனவே, இனி வருந்தி பயனில்லை. விதைத்ததை நீ அறுவடை செய்தே ஆகவேண்டும்," என்று அந்த ஞானி தன்னைக் காண வந்தவரிடம் கூறினார்.

a)

தர்மம் தலை காக்கும்

b)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

c)

துணை போனாலும் பிணை போகாதே

d)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

49.

பாடல் போட்டி ஒன்றில் மல்லிகாவின் குரல் இசையோடு சேர்ந்து இதமாக இருந்தது.

a)

தர்மம் தலை காக்கும்

b)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

c)

துணை போனாலும் பிணை போகாதே

d)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

50.

மோகனா, தேர்வில் தோற்றுவிட்டாய் என்று மன வருத்தம் கொள்ளாதே! கவலையோடு இருந்தால் நம் மனமும் உடலும் சோர்வடைந்து, நோய் நம்மை தாக்க நேரிடும். ஆகவே, எழுந்து வா! முயற்சி செய்தால் அடுத்தத் தேர்வில் நல்ல புள்ளிகளைப் பெறலாம்," எனத் தன் தோழியைத் தேற்றினாள் அரியமாலா.

a)

தர்மம் தலை காக்கும்

b)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

c)

துணை போனாலும் பிணை போகாதே

d)

மனக்கவலை பலக் குறைவு