Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சொற்பொருள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

“ஒவ்வொரு பூக்களுமே”  என்னும் பாடலைப் புனைந்ததற்காகப் பாடலாசிரியருக்கு விருது வழங்கப்பட்டது.

a)

பாடியததற்காக

b)

இசை அமைத்ததற்காக

c)

தயாரித்ததற்காக

d)

எழுதியதற்காக

2.

சீனப் பெருநாளையொட்டி பொருட்கள் மலிவான விலைகளில் விற்கப்பட்டன.

a)

குறைவான

b)

அதிகமான

c)

சிறப்பான

d)

சராசரியான

3.

ஒரு செயலைச் செய்வதற்கு முன் சிறிது நேரமாவது அதைப்பற்றி அலசிப் பார்க்க வேண்டும்.

a)

ஆராய்ந்து

b)

பிரித்து

c)

யோசித்து

d)

சிந்தித்து

4.

கருணை உள்ளம் கொண்டவர்களே மற்றவர்களால் புகழப்படுகிறார்கள்.

a)

நல்ல

b)

இரக்க

c)

கொடை

d)

உயர்ந்த

5.

போட்டிகளில் பங்கெடுப்பவர்கள் துணிச்சல் உடையவர்களாக இருக்க வேண்டும்.

a)

வேகம்

b)

வலிமை

c)

தைரியம்

d)

உறுதி

6.

வாழ்வில் நமக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்பை நழுவவிடக் கூடாது.

a)

நேரத்தை

b)

சந்தர்ப்பத்தை

c)

பொழுதை

d)

நிலமையை

7.

குடிமைத் தற்காப்புப் படைவீரர்கள் துரிதமாகச் செயல்பட்டதால் பலர் உயிர் தப்பினர்.

a)

சுறுசுறுப்பாக

b)

சிறப்பாக

c)

விரைவாக

d)

பொறுமையாக

8.

நம் நாட்டிலுள்ள தொன்மை வாய்ந்த கட்டடங்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றன.

a)

புகழ்

b)

பழமை

c)

அழகு

d)

பெருமை

9.

புகைபிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி அரசாங்கம் மக்களுக்கு எச்சரிக்கை செய்தது.

a)

அறிவிப்பு

b)

முன்னறிவிப்பு

c)

விளம்பரம்

d)

ஒளிபரப்பு

10.

இறந்து கிடந்த இளைஞரின் உடலில் கொலை செய்ததற்குரிய எவ்விதத் தடயமும் காணப்படவில்லை.

a)

காயமும்

b)

சாட்சியமும்

c)

தகவலும்

d)

அடையாளமும்

11.

முகுந்தன் செய்த துரோகச் செயல் அவனுடைய நண்பனின் மனத்தில் நீங்காத வடுவாக நிலைத்துவிட்டது.

a)

கீறலாக

b)

தழும்பாக

c)

காயமாக

d)

ஊனமாக

12.

பனிக்கட்டியின் பளுவைத் தாங்க முடியாமல் கட்டிடத்தின் கூரை சரிந்து விழுத்தது.

a)

அளவை

b)

தரத்தை

c)

எடையை

d)

கனத்தை

13.

விஞ்ஞானியின் அரிய ஆராய்ச்சிக்காக அரசாங்கம் உன்னத விருதை அளித்தது.

a)

பெரிய

b)

சிறந்த

c)

தரமான

d)

உயரிய

14.

சான்றோர்கள் ஒரு போதும் ஆணவம் கொள்ளமாட்டார்கள்.

a)

சினம்

b)

பெருமை

c)

கர்வம்

d)

பொறாமை

15.

மன உளைச்சல் தற்போது தீராத நோயாகப் பரவி வருகிறது.

a)

மாறாத

b)

புரியாத

c)

நீங்காத

d)

அழியாத

16.

விவேகானந்தரின் சொல்லுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.

a)

வரவேற்பு

b)

மதிப்பு

c)

மரியாதை

d)

தகுதி

17.

சிங்கப்பூர் நாணய வாரியம் அண்மையில் பிளாஸ்டிக் பத்து வெள்ளி நோட்டுக்களை வெளியிட்டது.

a)

அருகில்

b)

தூரத்தில்

c)

சமீபத்தில்

d)

நாளடைவில்

18.

ஒவ்வொரு மாணவரும் தனக்கென ஓர் இலக்கை வகுத்துக்கொண்டு உழைக்க வேண்டும்.

a)

முடிவை

b)

வழிகாட்டியை

c)

பாதையை

d)

குறிக்கோளை

19.

போருக்குப் பின், மக்களின் கதி இன்னும் மோசமாகிவிட்டதை நன்கு காண முடிகின்றது.

a)

நிலமை

b)

வாழ்க்கை

c)

தொழில்

d)

துன்பம்

20.

மலேசியக் காட்டில் காணாமல் போன இரு ஜப்பானியர்கள் நேற்று மீட்கப்பட்டனர்.

a)

கண்டுபிடிக்கப் பட்டனர்

b)

காப்பாற்றப் பட்டனர்

c)

கைவிடப் பட்டனர்

d)

கைப்பற்றப் பட்டனர்