Worksheetsதமிழ்மொழி வார புதிர் போட்டி படிநிலை 2 (2026)
Total questions: 25
Worksheet time: 13mins
கீழ்க்காணும் பொருளுக்கேற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
கொடை தருதல்
பழக்க வழக்கம்
ஒளிவு மறைவு
பேரும் புகழும்
தான தர்மம்
கீழ்க்காணும் உவமைத்தொடரில் விடுபட்ட சொல் யாது?
பசுத்தோல் போர்த்திய ________________ போல
தவளை
காளை
மான்
புலி
சரியான பொருளைத் தெரிவு செய்க.
மினுமினு
சாட்டையால் அடிக்கும்போது ஏற்படும் ஒலி
சினக்குறிப்புக் காட்டுதல்
விட்டு விட்டுப் பிரகாசத்துடன் ஒளிர்தல்
கன்னத்தில் தொடர்ச்சியாய் விழும் அறை
சரியான பொருளைத் தெரிவு செய்க.
பளார்பளார்
சாட்டையால் அடிக்கும்போது ஏற்படும் ஒலி
சினக்குறிப்புக் காட்டுதல்
விட்டு விட்டுப் பிரகாசத்துடன் ஒளிர்தல்
கன்னத்தில் தொடர்ச்சியாய் விழும் அறை
‘பரதம்’ எந்த வகை கலைக்கு உட்பட்டது?
காட்சி கலை
நடனக் கலை
எழுத்து கலை
பேச்சு கலை
கீழ்கண்டவற்றில் இசைக்கருவி எது?
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடரை தெரிவு செய்க.
தொழில்நுட்பதைச் சிறப்புறக் கற்ற விமலன் பல புதிய உருவாக்கங்களை உருவாக்கிப் பலரின் பாராட்டுகளைப் பெற்றான்.
ஈடு கட்டுதல்
கை கழுவுதல்
கரை கண்டவர்
வெளுத்து வாங்குதல்
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடரை தெரிவு செய்க.
தங்களுக்கு ஆண் குழந்தை இல்லாத நிலையைக் குழந்தை தத்தெடுப்பு மூலம் அத்தம்பதிகள் நிறைவு செய்தனர்.
ஈடு கட்டுதல்
கை கழுவுதல்
கரை கண்டவர்
வெளுத்து வாங்குதல்
கீழ்கண்டவற்றில் பாரம்பரிய தற்காப்பு கலை எது?
பரதநாட்டியம்
கால்பந்து
சிலம்பம்
ஹாக்கி
கலைகள் மனிதனுக்கு என்ன கொடுக்கின்றன?
மகிழ்ச்சி
சண்டை
சோர்வு
பயம்
கீழ்க்காணும் பழமொழியில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.
முன் வைத்த _________ பின் வைக்காதே
விரலைப்
காலைப்
கையைப்
தலையைப்
பின்வரும் பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
எதை அடக்கியாளாவிட்டாலும் நாக்கை அடக்கியாள வேண்டும். அவ்வாறு அடக்கியாளாவிட்டால் குற்றமான சொல்லைப் பேசித் துன்பப்படும் நேரிடும்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
தமிழர் பாரம்பரியத்தை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்?
மறந்து விடுவதற்கு
நம் கலாச்சாரத்தை காக்க
மகிழ்ச்சியாக இருக்க
நேரத்தை வீணாக்க
கீழ்க்காணும் கவிதைக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.
பூமி செழிக்க நீ வேண்டும்!
வறட்சியைப் போக்க நீ வேண்டும்!
என்னைப் போன்ற விவசாயிகளுக்கு நீ வேண்டும்!
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
வெற்றி வேற்கையின் பொருளைத் தெரிவு செய்க.
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.
எத்தகைய நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது.
எத்தகைய வறுமை நிலையிலும் பேசுவதை விடலாகாது.
எத்தகைய வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது.
எத்தகைய வறுமை நிலையிலும் விளையாடுவதை விடலாகாது.
வினையடையைக் கொண்ட சொற்றொடரைத் தெரிவு செய்க.
எழுதிய கவிதை
உயரமான மலை
வேகமாக ஓடினான்
விளையாடி மகிழ்ந்தாள்
சரியான இலக்கண விதியை ஏற்று வந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
அறிந்துக் கொண்டான்
வருவதாய் கூறினான்
போய் பார்த்தான்
எனப் பேசினான்
பெயரெச்சத்தை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கழுகு வானத்தில் வட்டமிட்டுப் பறந்தது.
பீமன் தன் தாயை வாழ்த்தி வணங்கினான்.
அக்காள் கீரையைத் தண்ணீரில் கொட்டி அலசினார்.
வானத்தில் பறந்த புறாவை அனைவரும் பார்த்தனர்.
கீழ்க்காணும் காலியிடத்திற்கு ஏற்ற வினையெச்சத்தைத் தெரிவு செய்க.
சுவையான உணவுகள் அனைத்தையும் அம்மா _____________ முடித்தார்.
சமைத்து
உண்டு
விற்று
வீசி
வலிமிகா இலக்கண விதிக்கு ஏற்ற சொற்றொடரைத் தெரிவு செய்க.
வென்று குவித்தான்
அத்துணை பேர்
அப்படி சொல்
அங்கு பார்
தமிழ் மொழியின் மிகப் பழமையான இலக்கண நூல் எது?
சிலப்பதிகாரம்
தொல்காப்பியம்
திருக்குறள்
மணிமேகலை
“அகர முதல எழுத்தெல்லாம்…” என்று தொடங்கும் நூல் எது?
நாலடியார்
திருக்குறள்
ஐங்குறுநூறு
புறநானூறு
திருக்குறளை இயற்றியவர் யார்?
கம்பர்
பாரதியார்
திருவள்ளுவர்
ஔவையார்
தமிழ் எந்த வகை மொழி என அழைக்கப்படுகிறது?
புதிய மொழி
சமகால மொழி
செம்மொழி
கலப்பு மொழி
தமிழில் உயிர் மற்றும் மெய் சேர்ந்து உருவாகும் எழுத்து என்ன?
உயிரெழுத்து
மெய்யெழுத்து
உயிர்மெய்யெழுத்து
ஆய்த எழுத்து
