wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 3

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

"வீட்டிற்கு வெளியே வெடித்த பட்டாசு சத்தம் எனக்குக் கேட்டது.

மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற சரியான உற்றறிதல் புலனைத் தெரிவு செய்க.

a)

கண்

b)

காது

c)

நாக்கு

d)

மூக்கு

2.

மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை பந்துகளை நிறத்திற்கு ஏற்ப மூன்று பெட்டிகளில் போடப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் செயற்பாங்கைக் குறிப்பிடுக.

a)

தொடர்பு கொள்ளுதல்

b)

ஊகித்தல்

c)

வகைப்படுத்துதல்

3.

தென்னை மரம் ...................

a)

உயிருள்ளது

b)

உயிரற்றது

c)

நடமாடும்

4.

கீழ்க்காணும் விலங்குகளுள் எது அவற்றின் வெளித்தோற்றத்துடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளது.

a)

மீன் - இறகு

b)

குரங்கு - செதில்

c)

ஆமை - உறுதியான ஓடு

5.

திமிங்கலத்தை ஒட்டிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

குட்டி போடும்.

b)

செதில் உடையது.

c)

உறுதியான ஓடு உடையது.

6.

பின்வரும் தாவரங்களில் எது நீரில் வாழும்?

a)

ரம்புத்தான் மரம்

b)

தாமரைச் செடி

c)

வாழை மரம்

7.

பினவருவனவற்றுள் எது மனிதனின் அடிப்படைத் தேவை அல்ல?

a)

தொலைப்பேசி

b)

காற்று

c)

நீர்

8.

ஒரு கோழி மண்ணில் மண்புழி இருக்கிறதா என்று தேடுகிறது. எந்த அடிப்படைத் தேவைக்காக அந்த கோழி அப்படிச் செய்கிறது?

a)

உணவு

b)

நீர்

c)

காற்று

d)

பாதுகாப்பிடம்

9.

தாவரங்கள் உயிர் வாழ நீர், காற்று, ........ தேவை.

a)

சூரிய ஒளி

b)

காற்று

c)

நாற்று

10.

பின்வரும் தாவரங்களில் எந்தத் தாவரம் தொடர்ந்து செழிப்பாக இருக்கும்?

a)

இரு முறை நீர் ஊற்றப்படும் தாவரம்

b)

நெகிழியால் மூடப்பட்ட தாவரம்

c)

அலமாரியில் வைக்கப்பட்ட தாவரம்

11.

குழந்தைகளுக்கு இருப்பவை ...... பற்கள் ஆகும்.

a)

பால்

b)

நிரந்தர

c)

அழகான

12.

ஒருவருக்கு ...... நிரந்தரப் பற்கள் உள்ளன.

a)

24

b)

28

c)

32

13.

தவறான அறிவியல் கைவினைத் திறன்களைத் தேர்ந்தெடுக.

a)

அறிவியல் கருவிகளை முறையாகப் பயன்படுத்துதல்.

b)

உருவரைவைச் சரியாக வரைதல்.

c)

அறிவியல் கருவிகளைப் பயன்படுத்திய பிறகு சுத்தப்படுத்தக் கூடாது.

14.

..... கொண் டு இறைச்சி போன்ற உறுதியான உணவுப் பொருள்களை உண்ணலாம்.

a)

வெட்டுப்பல்

b)

கடைவாய்ப்பல்

c)

கோரைப்பல்

15.
நமது பற்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றால்
a)
ஐஸ் கட்டிகளைக் கடிக்க வேண்டும்.
b)
சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்
16.
ஒவ்வொரு முறையும் உணவு உட்கொண்ட பிறகு,________ மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.
a)
வாயைக் கொப்பளிப்பதன்
b)
குளிர் பானத்தை அருந்துவதன்
17.
பற்களின் இடுக்கில் மாட்டிக் கொண்ட உணவை எவ்வாறு அகற்றலாம்
a)
ப்ஃலோஸ் (floss) நூலைக் கொண்டு
b)
பல் குத்தும் குச்சியைக் கொண்டு
18.
கிருமிகள் பற்களின் இடுக்கிலுள்ள உணவை ________மாற்றும்.
a)
எச்சிலாக
b)
அமிலமாக
19.
கிருமிகள் உருவாக்கும் அமிலம் பற்களைப்
a)
பாதுகாக்கும்
b)
பழுதடையச் செய்யும்
20.
பற்றூரிகையை __________ஒரு முறை மாற்ற வேண்டும்.
a)
மூன்று மாதத்திற்கு
b)
ஆண்டுக்கு