Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 20
Worksheet time: 14mins
திருக்குறளை இயற்றியவர் யார்?
பாரதியார்
திருவள்ளுவர்
ஔவையார்
திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன?
வாசுகி
அமிர்தா
பாஞ்சாலி
திருக்குறள் மொத்தம் எத்தனை?
13330
133
1330
திருக்குறளில் மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளன?
10
5
3
ஒவ்வொரு பிரிவுகளிலும் இருக்கும் சரியான அத்தியாயங்களின் எண்ணிக்கையைத் தெரிவு செய்க.
அறத்துப்பால் - 38 அத்தியாயங்கள்
பொருட்பால் - 70 அத்தியாயங்கள்
அறத்துப்பால் - 70 அத்தியாயங்கள்
பொருட்பால் - 38 அத்தியாயங்கள்
திருக்குறளின் முதல் வரியில் ______ சொற்களும் இரண்டாவது வரியில் ______ சொற்களும் இருக்கும்.
3 மற்றும் 4
4 மற்றும் 3
5 மற்றும் 4
திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
133
13
1333
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
என்ற திருக்குறளின் பொருள் யாது?
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.
நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றை பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்து தின்பதற்கு ஒப்பாகும்.
எழுத்துக்கள் எல்லாம் ‘அ’ எனும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.
என்ற பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இனிய உளவாக இன்னாத ________
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
விடுப்பட்ட இடத்திலுள்ளா சொல் யாது?
கூறல்
ஆதி
நிற்க
ஒருவர் நமக்குச் செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல. அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது.
என்ற பொருளுக்கேற்ற திருக்குறள் யாது?
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழஅர் எனின்.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
கண்ணுடையர் ___________ கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
விடுப்பட்ட இடத்திற்கான விடையைத் தெரிவு செய்க.
என்றவர்
என்பவர்
என்கின்றவர்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
என்ற திருக்குறளின் பொருள் யாது?
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்செய்யும்; முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.
நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.
ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாக்க கருதிக் காக்க வேண்டும்.
என்ற பொருளுக்கேற்ற திருக்குறள் யாது?
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
முயற்சி திருவினை ____________ முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
கோடிட்ட இடத்திற்க்கேற்ற விடையைத் தெரிவு செய்க.
ஆக்கும்
யாக்கும்
மாக்கும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
பொருள்:
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை.
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
ஒரு துறையைச் சார்ந்து இருக்க எண்ணங்கொண்டவர்கள் அத்துறையில் பிறர் புகளும்படியாகச் சிறந்து விளங்க வேண்டும். இல்லையேல் அத்துறையில் ஈடுபடாதிருத்தல் நல்லது.
எந்த அளவுக்கு தோண்டுகின்றோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் கூறும். அதுபோல எந்த அளவுக்கு கல்வி கற்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளரும்.
திருக்குறள் :
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
______________ அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
அழுக்காறு
அறவாழி
அறத்தாறு
தோன்றின் புகழோடு தோன்றுக ______________
தோன்றலின் தோன்றாமை நன்று
அக்திலார்
அஃதிலார்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு .
பொருள் :
எந்த அளவுக்கு தோண்டுகின்றோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் கூறும். அதுபோல எந்த அளவுக்கு கல்வி கற்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளரும்.
திருக்குறளும் அதன் பொருளும் சரியாக இணைக்கப்பட்டுள்ளது.
தவறு
சரி
