wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருடள்கள் - 8 வகுப்பு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்க்கண்டவற்றில் தனிமங்களின் குறியீடு பற்றிய வரலாற்றின் சரியான வரிசை எது ?

a)

பெர்சீலியஸ் குறியீடுகள், கிரேக்க குறியீடுகள், இரசவாதிகளின் குறியீடுகள், டால்டனின் குறியீடுகள்

b)

பெர்சீலியஸ் குறியீடுகள், டால்டனின் குறியீடுகள், கிரேக்க குறியீடுகள், இரசவாதிகளின் குறியீடுகள்

c)

கிரேக்க குறியீடுகள், பெர்சீலியஸ் குறியீடுகள், இரசவாதிகளின் குறியீடுகள், டால்டனின் குறியீடுகள்

d)

கிரேக்க குறியீடுகள், இரசவாதிகளின் குறியீடுகள், டால்டனின் குறியீடுகள், பெர்சீலியஸ் குறியீடுகள்

2.

தனிமங்களைக் குறிப்பதற்கு படங்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தும் முறையை உருவாக்கியவர்

a)

கிரேக்கர்கள்

b)

பெர்சீலியஸ்

c)

இரசவாதிகள்

d)

டால்டன்

3.

கூற்று: ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியான வேதியல் அமைப்பு, அளவு மற்றும் நிறை ஆகியவற்றை கொண்டுள்ளன.

காரணம்: இது அந்த தனிமத்தின் அணுவின் உட்கருவில் இருக்கும் புரோட்டான்களின் எண்ணிக்கையை பொறுத்தது.

a)

கூற்று சரி

காரணம் தவறு

b)

கூற்று தவறு காரணம் தவறு

c)

கூற்று தவறு காரணம் சரி

d)

கூற்று சரி

காரணம் சரி

4.

இப்படங்களை குறிக்கும் சரியான தனிமங்களின் பெயர்களை தேர்ந்தெடுக்க.

a)

நிக்கல் , ஆர்சனிக் , ஆண்ட்டிமனி , நீர்

b)

நீர், நிக்கல் , ஆர்சனிக் , ஆண்ட்டிமனி

c)

ஆண்ட்டிமனி , நீர், நிக்கல் , ஆர்சனிக்

d)

நிக்கல் , நீர், ஆர்சனிக் , ஆண்ட்டிமனி

5.

கீழ்க்கண்ட லத்தீன் பெயருக்கு பொருத்தமான சரியான தனிமத்தின் பெயரைக் கண்டறிக.

1. நேட்ரியம்

2. ஸ்டேனம்

3. உல்ஃப்ரம்

4. ஸ்டில்பியம்

a)

சோடியம்

டங்ஸ்டன்

ஆண்ட்டி மணி

வெள்ளீயம்

b)

சோடியம்

வெள்ளீயம்

ஆண்ட்டி மணி

டங்ஸ்டன்

c)

சோடியம்

வெள்ளீயம்

டங்ஸ்டன்

ஆண்ட்டி மணி

d)

வெள்ளீயம்

டங்ஸ்டன்

ஆண்ட்டி மணி

சோடியம்

6.

குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மின்சாரத்தை கடத்துபவை குறை கடத்திகள் என அழைக்கப்படுகிறது. குறை கடத்திகளுக்கு கீழ்க்கண்டவற்றுள் எதுசரியான எடுத்துக்காட்டு அல்ல.

a)

சிலிக்கான் ஜெர்மனியம்

b)

சிலிக்கான் ஆர்சனிக்

c)

ஆர்சனிக்

போரான்

d)

ஆர்சனிக் அலுமினியம்

7.

கீழ்க்கண்டவற்றை குறிக்கும் சரியான தனிமங்கள் எது?

1. வேதிவினைகளில் குறைப்பானாக பயன்படுகிறது.

2. பட்டாசு தொழிற்சாலையில் பற்ற வைக்கும் பொருளாக பயன்படுவது.

3. எலி மருந்து தயாரிக்க பயன்படுவது

4. ரப்பரை கெட்டிப்படுத்த பயன்படுவது.

a)
  1. 1. ஹைட்ரஜன்

  2. 2. கந்தகம்

  3. 3. பாஸ்பரஸ்

  4. 4. போரான்

b)
  1. 1. கந்தகம்

  2. 2. போரான்

  3. 3. பாஸ்பரஸ்

  4. 4. ஹைட்ரஜன்

c)
  1. 1. ஹைட்ரஜன்

  2. 2. போரான்

  3. 3. பாஸ்பரஸ்

  4. 4. கந்தகம்

d)
  1. 1. ஹைட்ரஜன்

  2. 2. பாஸ்பரஸ்

  3. 3. போரான்

  4. 4. கந்தகம்

8.

கூற்று: தாவரங்கள் விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள் கரிமசேர்மங்கள் என அழைக்கப்படுகின்றன.

காரணம்: கார்போஹைட்ரேட் , ரொட்டி சோடா போன்றவை கரிம சேர்மத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

a)

கூற்று தவறு காரணம் சரி

b)

கூற்று தவறு காரணம் தவறு

c)

கூற்று சரி

காரணம் சரி

d)

கூற்று சரி

காரணம் தவறு

9.

கந்தக அமிலத்தில் உள்ள தனிமங்கள்

a)

ஹைட்ரஜன்

சல்பர்

ஆக்சிசன்

b)

கந்தகம் துத்தநாகம்

கார்பன்

c)

கந்தகம் ஹைட்ரஜன் நைட்ரஜன்

d)

கந்தகம் ஹைட்ரஜன் காப்பர்

10.

கீழ்க்கண்ட பொது பெயர்களை குறிக்கும் சரியான சேர்மத்தை தேர்ந்தெடுக்க.

  1. 1. பச்சை துத்தம்

  2. 2. சால்ட் பீட்டர்

  3. 3. விட்ரியால் எண்ணை

  4. 4. பாரிஸ் சாந்து

a)
  1. 1. இரும்பு சல்பேட்

  2. 2. பொட்டாசியம் நைட்ரேட்

  3. 3. கந்தக அமிலம்

  4. 4. கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்

b)
  1. 1. இரும்பு சல்பேட்

  2. 2. கந்தக அமிலம்

  3. 3. கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்

  4. 4. பொட்டாசியம் நைட்ரேட்

c)
  1. 1. கந்தக அமிலம்

  2. 2. கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்

  3. 3. பொட்டாசியம் நைட்ரேட்

  4. 4. இரும்பு சல்பேட்

d)
  1. 1. கந்தக அமிலம்

  2. 2. கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்

  3. 3. இரும்பு சல்பேட்

  4. 4. பொட்டாசியம் நைட்ரேட்

11.

ஒரு மூலக்கூறு நீரில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அணுக்களின் கன அளவு மற்றும் நிறையின் சரியான விகிதங்கள்

a)

1:2

8:1

b)

2:1

1:8

c)

2:1

8:1

d)

8:1

1:2

12.

கூற்று 1: கடினமான பளபளப்புள்ள தனிமங்கள் அலோகங்கள் என அழைக்கப்படுகின்றன.

கூற்று 2: அலோகங்கள் வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்துபவை அல்ல.

a)

கூற்று 1 சரி

கூற்று 2 தவறு

b)

கூற்று 1 சரி

கூற்று 2 சரி

c)

கூற்று 1 தவறு

கூற்று 2 தவறு

d)

கூற்று 1 தவறு

கூற்று 2 சரி

13.
  1. 1. மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றை கெடாமல் பாதுகாப்பது

  2. 2. கேக் ரொட்டி தயாரிப்பில் பயன்படுவது

  3. 3. குடிநீராக மற்றும் கரைப்பானாக பயன்படுவது

  4. 4. கடின நீரை மென்னீராக மாற்ற பயன்படுவது

a)

1. சோடியம் குளோரைடு

2. சோடியம் பை கார்பனேட்

3. நீர்

4. சோடியம் கார்பனேட்

b)

1. சோடியம் பை கார்பனேட்

2. சோடியம் குளோரைடு

3. நீர்

4. சோடியம் கார்பனேட்

c)

1. சோடியம் கார்பனேட்

2. சோடியம் பை கார்பனேட்

3. நீர்

4. சோடியம் குளோரைடு

d)

1. சோடியம் குளோரைடு

2. சோடியம் பை கார்பனேட்

3. சோடியம் கார்பனேட்

  1. 4. நீர்

14.

காலமைன் என்பது கீழ்க்கண்ட எந்த தனிமங்களின் ஆக்க கூறுகளாக உள்ளன.

a)

துத்தநாகம், கார்பன், ஆக்சிஜன்

b)

பொட்டாசியம், ஹைட்ரஜன், ஆக்சிஜன்

c)

சிலிக்கான்,

ஆக்சிசன்

d)

சோடியம் ஹைட்ரஜன் ஆக்சிஜன்

15.

கீழ்க்கண்டவற்றுள் எது தவறு அல்ல.

1. வெப்பநிலைமாணிகள் மற்றும் காற்றழுத்தமானிகளில் காரியம் பயன்படுகிறது.

2. தானியங்கி வாகனங்களின் மின்கலன்கள் மற்றும் எக்ஸ் கதிர் எந்திரங்கள் தயாரிக்க பாதரசம் பயன்படுகிறது.

3. மின் கம்பிகள் சிலைகள் நாணயங்கள் ஆகியவை தயாரிக்க தாமிரம் பயன்படுகிறது.

4. அலங்கார நகைகள் மற்றும் புகைப்படத் துறையில் ஜெர்மனியம் பயன்படுகிறது.

a)

1& 2

b)

1,2&3

c)

3 மட்டும்

d)

அனைத்தும் சரி