Font size
Worksheetsஉம்/அல்லது ஆண்டு 5
Total questions: 30
Worksheet time: 23mins
'உம்' என்கிற இடைச்சொல் கொண்டு இணைக்கப்பட்ட சொற்றொடர் எது?
(இரண்டு விடைகள் உள்ளன)
முகிலனும் நானும்
சிவா மற்றும் சுப்பு
பாலும் பழமும்
சுற்றுச் சூழல்
பள்ளியின் போட்டி விளையாட்டு இவ்வார இறுதியா ________ அடுத்த வார இறுதியா?
உம்
அல்லது
___________ என் __________ சுற்றுலா செல்ல உள்ளோம்.
நான், தந்தை
நானும் தந்தையும்
உன் அப்பா _______ அம்மாவை நாளை என்னைச் சந்திக்க அழைத்து வா.
அல்லது
உம்
நேர்த்திக் கடனைச் செலுத்த அடுத்த வாரம் _________ __________ பழனி கோவிலுக்குச் செல்ல உள்ளனர்.
அம்மாவும் அப்பாவும்
அம்மா அப்பா
என் தோழன் என்னிடம் உனக்குத் தமிழ்மொழிப்பாடம் பிடிக்குமா ________ ஆங்கிலப் பாடம் பிடிக்குமா எனக் கேட்டான்.
அல்லது
இன்னும்
நான் இவ்வாரம் வெள்ளிக்கிழமை _____ சனிக்கிழமை ஊருக்குத் திரும்பி விடுவேன்.
அல்லது
மற்றும்
உம்(யும்)
கீழ்க்காணும் விடைகளில் எது சரி ?
தமிழர்களின் சிறப்பான உணவுகளில் தோசை அல்லது இட்லி உண்டு.
தமிழர்களின் சிறப்பான உணவுகளில் தோசையும் இட்லியும் உண்டு.
இந்தத் தவணை விடுமுறைக்கு ________ அல்லது ________ போகலாம எனத் தந்தை தன் மகனிடம் கேட்டார்.
இலங்காவிக்கும், கேமரன் மலைக்கும்
இலங்காவியும்
கேமரன் மலை
இலங்காவி , கேமரன் மலைக்கு
சீதா, கீதா மற்றும் தேவி______ ஆரம்பப்பள்ளி முதலே நெருங்கிய நண்பர்கள்.
-யும்(உம்)
-(ஆல்)னால்
-யுடன்(உடன்)
அனிதா, அமுதா மற்றும் இனியா____ சிறு வயது முதலே நண்பர்கள். ஆயினும், இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்துவிட்டனர். இப்பிரிவுக்குப் பிறகு இனியாவிற்கு அனிதாவிடம் பழகுவதா______அமுதாவிடம் பழகுவதா என்று தெரியவில்லை.
ம்,அல்லது
அல்லது,வும்(உம்)
வும்(உம்), அல்லது
பாடம் போதிக்கும் போது நமது (கண்)____ (காது)____ ஆசிரியரை நோக்கி இருக்க வேண்டும். அப்போதுதான் போதிப்பது நமக்கு முழுமையாகப் புரியும்.
களும்--களும்
கள்--கள்
களே--களே
காலை___மாலை____ குளிப்பது நம் உடல் தூய்மையைக் காக்கும்.
அல்லது, யும்(உம்)
யும்(உம்), யும்(உம்)
யும்(உம்), அல்லது
கீழ்க்கண்ட வாக்கியங்களை இணைப்பதற்குப் பொருத்தமான இடைச்சொல் எது?
உனக்குக் கவிதை எழுத ஆர்வமா?
உனக்குச் சிறுகதை எழுத ஆர்வமா?
உம்
ஆனால்
அல்லது
கீழ்க்கண்ட வாக்கியங்களை இணைப்பதற்குப் பொருத்தமான இடைச்சொல் எது?
அஞ்சல் தலைகள் சேகரிப்பது எனது பொழுதுப்போக்காகும்.
பழைய நாணயங்கள் சேகரிப்பது எனது பொழுதுப்போக்காகும்.
ஆயினும்
உம்
அல்லது
கீழ்க்கண்ட வாக்கியங்களை இணைப்பதற்குப் பொருத்தமான இடைச்சொல் எது?
மரக்கூழில் காகிதம் செய்யப்படும்.
மரக்கூழில் தீக்குச்சி செய்யப்படும்.
மரக்கூழில் காகிதம் அல்லது தீக்குச்சி செய்யப்படும்.
மரக்கூழில் காகிதமும் தீக்குச்சியும் செய்யப்படும்.
இடைச்சொல்லுடன் இணைக்கப்பட்ட சரியான வாக்கியம் எது?
(சுமதி சிறந்த பாடகி.) (ஈஸ்வரி சிறந்த பாடகி.)
சுமதி ஈஸ்வரி சிறந்த பாடகி.
சுமதியும் ஈஸ்வரியும் சிறந்த பாடகிகள்.
இக்காற்பந்தாட்டத்தில் சிறந்த ஆட்டக்காரன் கேசவனா________ சீலனா?
மற்றும்
உம்
அல்லது
கீழ்க்கண்ட சொல்லைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல் யாது?
(நான் கூடாரம் அமைத்தேன்). (என் நண்பன் கூடாரம் அமைத்தான்.)
உம்
அல்லது
உடன்
இருவர்__வீட்டின் முன்புறத்தில் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்களுள் வெற்றி பெற்றது கிரணா_____தருணா என்று எனக்குத் தெரியவில்லை.
அல்லது, உம்
உம், அல்லது
அல்லது, அல்லது
உம், உம்
வாக்கியத்தில் சரியான இடைச்சொல் ஏற்ற விடையைத் தேர்ந்தெடுக.
உனக்கு ஓர் (அண்ணன்-)_________ஓர் (அக்காள்-)______உள்ளனர் என்பது உண்மையா?
உம், உம்
அல்லது, உம்
உம், அல்லது
கீழ்க்காணும் வாக்கியங்களை இணைக்கும் இடைச்சொல் யாது?
(முறையான உடற்பயிற்சி நோயை ஓட்டிவிடும் .)
(சரிவிகித உணவு நோயை ஓட்டிவிடும்.)
ஆகையால்
எனவே
உம்
அல்லது
கீழ்க்காணும் வாக்கியங்களை இணைக்கும் இடைச்சொல் யாது?
(மூங்கிலால் கூடை பின்னப்படுகிறது.)
(பிரம்பால் கூடை பின்னப்படுகிறது. )
(பனையோலையால் கூடை பின்னப்படுகிறது.)
ஆகவே
அல்லது
இருப்பினும்
உம்
ஏனெனில்
இவ்வாக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இடைச்சொல் யாது?
வெற்றியும் தோல்வியும் மனிதனின் வாழ்வில் ஏற்படுவது வழக்கம்.
அல்லது
உம்
ஆகவே
ஆனால்
இப்பாடல் வரிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள இடைச்சொல் யாது?
"பாலும் பழமும் கைகளில் ஏந்தி.....".
அல்லது
உம்
மேலும்
ஆகையால்
கீழ்க்காணும் வாக்கியங்களை இணைக்கும் இடைச்சொல் யாது?
(குபேரன் வரலாறு பாடத்தை மீள்பார்வைச் செய்தான்.)
(கபிலன் வரலாறு பாடத்தை மீள்பார்வைச் செய்தான்.)
அல்லது
உம்
ஆனால்
கீழ்க்காணும் பத்தியில் 'அல்லது' மற்றும் 'உம் ' இடைச்சொற்கள் எத்தனை அமைந்துள்ளது எனக் குறிப்பிடுக.
பள்ளியின் பரிசளிப்பு விழாவிற்கு அம்மா அல்லது அப்பா இருவரில் யாரவது ஒருவர் கண்டிப்பாக வரவேண்டும் என ஆசிரியர் கூறியிருந்தார். ஆனால், பரிசளிப்பு விழாவிற்கு இருவருமே வந்திருந்தனர். நானும் என் தங்கையும் வகுப்பில் முதல் நிலை வந்ததால் பரிசு பெற்றோம்.
அல்லது 2,உம் 2
அல்லது 1,உம் 3
அல்லது 2, உம் 3
அல்லது 1, உம் 2
கீழ்க்காணும் வக்கியங்களை இணைக்கும் இடைச்சொல் யாது?
(நீங்கள் இந்நிகழ்ச்சிக்குப் பண்பாட்டு உடை அணிந்து வரலாம்.)
(நீங்கள் இந்நிகழ்ச்சிக்கு மேல் நாட்டு உடை அணிந்து வரலாம்.)
மற்றும்
-உம்
அல்லது
கீழ்க்காணும் வாக்கியங்களை இணைக்கும் இடைச்சொல் யாது?
(எனக்கு அம்மா சமைத்த உணவு என்றால் பிடிக்கும்.)
(எனக்குச் சித்தி சமைத்த உணவு என்றால் பிடிக்கும்.)
அல்லது
உம்
மேலும்
வாக்கியத்தில் சரியான இடைச்சொல் ஏற்ற விடையைத் தேர்ந்தெடுக.
ஈருலக சுவாச உறுப்புக் கொண்ட தவளை (நீர்)____ (நிலம்)_____ வாழும் உயிரினம் ஆகும்.
நீராலும்,
நிலத்திலும்
நீரிலும், நிலத்திலும்,
நீரால், நிலத்துடனும்,
