wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கதை என்ன?

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
விறகுவெட்டி ஒருவன் காலையிலிருந்து மாலைவரை விறகு வெட்டச் செல்வான். அவன் வீட்டுக்குத் திரும்ப இரவு நேரமாகிவிடும். ஒருநாள் நண்பகல் நேரம்  ஆனது.  விறகுவெட்டியின்  மனைவி  அவர்களின்  மகன் மூலமாக  மதிய உணவை அனுப்பியிருந்தாள். 1. விறகுவெட்டியின் மனைவி எப்போது மதிய உணவை அனுப்பியிருந்தாள்?
a)
பகலில்
b)
நண்பகலில்
c)
மாலையில்
d)
இரவில்   
2.
விறகுவெட்டி கடுமையாக  உழைத்ததால் அவனுக்குப்  பசி  வயிற்றைக்  கிள்ளியது. அவன் விரைவாகச்  சாப்பிட்டுவிட்டு  மீண்டும்  தன் வேலையைச் செய்யத் தொடங்கினான். 

2. விறகுவெட்டிக்குப் பசி ஏற்படக் காரணம் என்ன?
a)
மதிய உணவைப் பார்த்ததால்
b)
மகன் உணவைக் கொண்டு வந்ததால் 
c)
கடுமையாக உழைத்ததால்
d)
சீக்கிரம் சாப்பிட விரும்பியதால்
3.
அப்பா விறகு வெட்டுவதை மகன் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். மகன் விளையாடுவதற்குச் சிறு  மரக்கட்டை ஒன்றை விறகுவெட்டி கொடுத்தான். அப்போது  ஈ ஒன்று விறகுவெட்டியையே சுற்றி மொய்த்தது. 

3. விறகுவெட்டி ஏன் மரக்கட்டை ஒன்றை மகனிடம் கொடுத்தான்?
a)
ஈயை விரட்ட 
b)
தன்னை அடிக்க 
c)
தன்னோடு சேர்ந்து வேலை செய்ய 
d)
மகன் விளையாட
4.
ஈ தந்த தொல்லையால் தன் அப்பா சிரமப்படுவதை மகன்  அறிந்தான். ஈ விறகுவெட்டியின் முதுகில் அமர்ந்தது. 
4. 
மகன் எதை அறிந்தான்?
a)
ஈ தன் அப்பாவையே சுற்றி மொய்ப்பதை
b)
அப்பா விறகு வெட்டுவதை 
c)
அப்பா ஈயின் தொல்லையால் சிரமப்படுவதை
d)
அப்பா தனியாக வேலை செய்வதை   
5.
மகன் தன் மரக்கட்டையை வைத்து அப்பாவின் முதுகில் ஓங்கி அடித்தான். விறகுவெட்டி வலியால் அலறினான். விறகுவெட்டி தன் மகனின் முட்டாள்தனத்தை எண்ணி மனம் வருந்தினான்.
5. 
விறகுவெட்டி ஏன் அலறினான்?
a)
 ஈ தன் முதுகில் அமர்ந்ததால்
b)
ஈ தனக்குச் சிரமம் உண்டாக்கியதால் 
c)
மகனின் முட்டாள்தனத்தை எண்ணியதால்   
d)
மகன் மரக்கட்டையை வைத்து முதுகில்   அடித்ததால்