NEW
Font size
Worksheetsவேற்றுமை உருபு
Total questions: 8
Worksheet time: 6mins
சரியான வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக்கவும்.
(கால்) ------------------- காயம் பட்டது.
கு
ஐ
இல்
ஆன்
சரியான வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக்கவும்.
(அந்தப் பெண்) ------------------ தங்க நகைகள் இருக்கின்றன.
இல்
இடம்
ஆல்
உடைய
சரியான வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக்கவும்.
(இறைவா) -------------------- எனக்கு அருள்வாயாக!
விளித்தல்
இருந்து
ஓடு
அது
மேற்காணும் கூற்றில் கருமையாக்கப்பட்ட சொற்கள் ஏற்றுள்ள வேற்றுமை உருபின் வகையைத் தெரிவு செய்க.
(i) முதலாம் வேற்றுமை உருபு
(ii) ஐந்தாம் வேற்றுமை உருபு
(i) முதலாம் வேற்றுமை உருபு
(ii) ஏழாம் வேற்றுமை உருபு
(i) மூன்றாம் வேற்றுமை உருபு
(ii) ஐந்தாம் வேற்றுமை உருபு
(i) எட்டாம் வேற்றுமை உருபு
(ii) ஏழாம் வேற்றுமை இருபு
கீழ்காணும் வாக்கியத்தில் ஏழாம் வேற்றுமை உருபு ஏற்று வந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.
வான்மதி தன் தோழியோடு ஹாக்கிப் போட்டியில் கலந்து கொள்கிறாள்.
(அ) வான்மதி
(ஆ) தோழியோடு
(இ) போட்டியில்
(ஈ) கொள்கிறாள்
கீழ்காணும் பட்டியலில் எது ஏழாம் வேற்றுமை உருபு ?
இடம், பால், கண்
கு
ஐ
ஆல், ஆன், உடன்
கோடிட்ட சொல்லில் இணைக்கப்பட்ட வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
அவன்கண் நான் நட்பு கொண்டேன்.
அது
இல்
உடைய
கண்
கீழ்காணும் வாக்கியங்களில் ஏழாம் வேற்றுமை உருபை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தலைமையாசிரியர் வெற்றிப் பெற்ற மாணவர்களைப் பாராட்டினார்.
அம்மா தங்கைக்குப் புதிய பொம்மை வாங்கித் தந்தார்.
பிராணிகளின்பால் அன்பு கொள்ள வேண்டும்.
விமலன் அகிலனோடு கடைக்கு சென்றான்.
