Font size
Worksheetsகொன்றை வேந்தன்
Total questions: 11
Worksheet time: 6mins
அன்பழகன் லண்டனில் பணிபுரிகிறான். நிறைய பணம் ஈட்டி தன் பெற்றோருக்கு அனுப்புகிறான்.
இச்சூழலுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
குமரன் சூதாடி வெறுமனே பொழுதைக் கழித்து வந்தான். அடிக்கடி தன் நண்பர்களுடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்வான். ஒரு நாள் அவன் காவல் அதிகாரிகளிடம் பிடிப்பட்டான்.
இக்கூற்றிற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
அன்பழகன் லண்டனில் பணிபுரிகிறான். நிறைய பணம் ஈட்டி தன் பெற்றோருக்கு அனுப்புகிறான்.
இச்சூழலுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
தன் தந்தையின் அறிவுரை கேட்டு வளர்ந்த அறிவழகன் இன்று சிறந்த மருத்துவராக பணிபுரிகிறான். அவனுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
படம் வெளிநாட்டில் பணிபுரியும் அன்பானந்தனைக் காட்டுகிறது. படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
அமினா நோன்புப் பெருநாளை முன்னிட்டு சொந்த பந்தங்களை அழைத்து விருந்து வைத்தாள். அவள் எப்பொழுதும் உறவினர்களுக்கு உதவி செய்வாள். படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
அன்பழகி தோட்டத்தில் மிளகாய் பயிரிட எண்ணம் கொண்டாள். அது தொடர்பாக இணையத்தில் சிறு ஆய்வு செய்து நல்ல விளைச்சலையும் கண்டாள்.
இச்சூழலுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
எவை மேற்காணும் கொன்றை வேந்தனுடன் பொருத்தமானது?
அகிலன் தாய் தந்தையின் சொல் கேட்டு நடப்பான்.
ரேவதி தன் பெற்றோரின் அறிவுரையைக் கேட்காமல் இரவில் வெளியே சென்றாள்.
ஆ சோங் ஆசிரியரின் அறிவுரைக்கு ஏற்ப உயர்கல்வியைத் தொடர்ந்தான்.
சுராலிசா அப்பெரியவர் கூறியும் செவிமடுக்காமல் காட்டு மாளிகைக்குச் சென்றாள்.
திரு. கலைமாறன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தம்மால் இயன்ற உதவியைச் செய்வார்.
பொருத்தமான கொன்றை வேந்தனை அடையாளம் காண்க.
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.
"கலைவேந்தன் எப்பொழுதும் பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பான்".
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
இயல்ஸ்ரீயும் யுவஸ்ரீயும் தங்களுடைய வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகள் பயிரிட எண்ணம் கொண்டனர். அது தொடர்பாக இணையத்தில் சிறு ஆய்வினை மேற்கொண்ட பிறகு பயிரிட தொடங்கினர்.
இச்சூழலுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
