Worksheetsதமிழ் மொழி வாரம்
Total questions: 15
Worksheet time: 8mins
கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
அள்ளி விடுதல்
அவமானம் எற்படுத்துதல்
உறுதி பூணுதல்
ஏமாற்றித் தப்புதல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.
வல்லின எழுத்தைக் கொண்டு தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.
நண்டு
ஞாயிறு
கடவுள்
வண்டு
கீழ்க்காணும் வாக்கிய வகையைத் தெரிவு செய்க.
நீதி தவறா பாண்டிய மன்னன் பல்லாண்டு வாழ்க!
செய்தி வாக்கியம்
விழைவு வாக்கியம்
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
கீழ்க்காணும் படத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
சிறு துளி பெரு வெள்ளம்
சிக்கனம் சீரளிக்கும்
கீழ்க்காணும் ஆத்திசூடியில் கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
ஒளவியம் பேசேல்
முயற்சி
உழைப்பு
கோபம்
பொறாமை
கீழ்க்காணும் உலக நீதியை நிறைவு செய்க.
அடுத்தவரை _______________________ கெடுக்க வேண்டாம்.
ஒருநாளு
யொருநாளு
லொருநாளு
யொருநாளுங்
சரியாக வலிமுகுந்துள்ள சொற்றொடர்களைத் தெரிவு செய்க.
அதுத் தொட்டி
இங்குத் தேடினேன்
பலச் சொற்கள்
ஓடும்படிப் பணித்தேன்
கீழ்க்காண்பனவற்றுள் பண்புப்பெயரைக் கொண்டிராத வாக்கியத்தைத் தெரிவு செய்க.
திவ்யா பிராணிகளிடத்தில் அன்பாய் பழகுவாள்.
மலைப்பகுதி பசுமையாக இருக்கும்.
யாசினி பிறரிடம் பண்பாகப் பேசுவாள்.
காவியா கணினியை இயக்கினாள்.
கீழ்க்காண்பனவற்றுள் இயல்பு புணர்சியைத் தெரிவு செய்க.
கண் + காட்சி
கண்காட்சி
கண்க்காட்சி
கண்ணாட்சி
கண்ணில்காட்சி
கோடிடப்பட்டுள்ள சொல்லின் பெயர்ச்சொல் வகையைத் தெரிவு செய்க.
மருத்துவர் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தார்.
பொருட்பெயர்
பண்புப்பெயர்
கீழ்க்கண்ட திருக்குறளின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
யாண்டும் இயன்றது அறம்
கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைக் கண்டறிக.
முகிலன் தினமும் பள்ளிக்குத் தாமதமாகச் செல்வான்.தினமும் காலையில் அவன் தாமதமாக எழுவான்.அதனால்,அவசரமாய் கிளம்பி,பதற்றத்துடன் பள்ளிக்குச் செல்வான்.
ஆறப் போடுதல்
அரக்கப் பரக்க
கீழ்க்கண்ட இரட்டைக்கிளவின் பொருள் யாது?
நற நற
சினத்தால் பற்களைக் கடுக்கும் ஓசை
செந்நிறமான நிறம்
கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.
ஜன்னல்
புஷ்பம்
ஐந்து
ஸர்ப்பம்
மெல்லின உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
12
126
72
216
