wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PT3 தமிழ்மொழி (தொகுதி 7) - உமா பதிப்பகம்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

பொருத்தமான இரட்டைக்கிளவியைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.


கனத்த மழையில் நனைந்ததால் வேலனுடைய ஆடைகள் ________ இருந்ததோடு அவன் குளிர் தாங்க முடியாமல் ________ நடுங்கினான்.

a)

சிலுசிலுவென – வெடவெடவென

b)

நசநசவென – சிலுசிலுவென

c)

நசநசவென – வெடவெடவென

d)

கிடுகிடுவென – சிலுசிலுவென

2.

கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


மலர் : எப்போதும் ____________ பேசிக் கொண்டிருக்காதே! எனக்குக் காது வலிக்கிறது.

அரசி : என்னை மன்னித்துவிடு மலர்.

a)

சடசடவென

b)

துருதுருவென

c)

கடகடவென

d)

தொணதொணவென

3.

பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான இரட்டைக்கிளவி எது?


சீலன் கிஞ்சிற்றும் தவறாமல் ஒப்புவித்த வாய்பாட்டைக் கேட்டு மற்ற மாணவர்கள் மலைத்துப் போயினர்.

a)

கடகடவென

b)

கிடுகிடுவென

c)

பரபரவென

d)

விறுவிறுவென

4.

இணைமொழிக்குப் பொருத்தமான விளக்கத்தைத் தெரிவு செய்க.

a)

தங்குதடை – இடையூறு

b)

உயர்வு தாழ்வு – மேடுபள்ளம்

c)

அகமும் புறமும் – மன உணர்வும் மனத்தின் வெளிப்பாடும்

d)

உள்ளும் புறமும் – வீட்டின் உட்புறமும் வெளிப்புறமும்

5.

கீழ்க்காணும் மருத்துவரின் கூற்றுக்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.


மருத்துவர்: கோவிட் – 19 ஓர் உயிர்க்கொல்லி நோய். இந்நோயால் பாதிக்கப்படும் முதியவர்கள் எளிதில் பலியாகிவிடுகிறார்கள். ஆகவே, முதியவர்களை நோயில்லாமல் பாதுகாப்பது அனைவரது கடமையாகும்.

a)

தங்குதடை

b)

கள்ளங்கபடு

c)

உள்ளும் புறமும்

d)

நோய்நொடி

6.

பின்வரும் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று

a)

குழந்தைகள் ஈடு இணை அற்றவை.

b)

குழந்தைகள் சீரும் சிறப்பும் மிக்கவை.

c)

குழந்தைகள் கள்ளங்கபடு அற்றவை.

d)

குழந்தைகள் உயர்வு தாழ்வு பார்க்காதவை.

7.

பின்வருபனவற்றுள் சரியான இணைமொழியைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சிறுவர்கள் மாலை நேரத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

b)

மலைப்பகுதியில் உள்ள பாதை உயர்வு தாழ்வாக இருந்ததால் நடப்பதற்குச் சிரமமாக இருந்தது.

c)

கள்ளங் கபடு கொண்டு சாலையில் பயணித்த பயணிகளைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

d)

தன்னைத் திட்டிய பாட்டியைக் கண்டதும், அபிஷேக் நாணிக் கோணினான்

8.

பின்வரும் பொருளுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


* விட்டுப் பிரியாமை


I. பசுமரத்தாணி போல

II. மலரும் மணமும் போல

III. மணியும் ஒலியும் போல

IV. உள்ளங்கை நெல்லிக்கனி போல

a)

I, II

b)

I, III

c)

II, III

d)

II, IV

9.

பின்வரும் சூழலுக்குப் பொருத்தமான உவமைத்தொடர் எது?


நிருபர் : நீங்கள் அனைவரும் ஏன் உங்கள் தலைவருக்கு எதிராகப் போராட்டம் செய்கிறீர்கள்?

தொண்டர்கள் : எங்களுடைய சேமிப்புப் பணத்தை அவர் முறைகேடு செய்துவிட்டார். அதனால்தான்…

a)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

b)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

10.

பின்வரும் வாக்கியத்திற்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


* தைப்பூசத் திருவிழாவின்போது மக்கள் கூட்டம் கடல் அலைபோலத் திரண்டிருந்தது.

a)

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

b)

அழகுக்கு அழகு செய்வது போல

c)

புற்றீசல் போல

d)

மணியும் ஒலியும் போல