wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி (இணைமொழி)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க

a)

கல்வியறிவு - கல்வி கேள்வி

b)

உடையும் ஆபரணமும் - ஆடை அணிகலன்

c)

தொடக்கமும் முடிவும் - இன்ப துன்பம்

d)

சீரும் சிறப்பும் - அருமை பெருமை

2.

கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

A. எலும்பும் தோலும் - ஒழுங்கற்றது

b)

B. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்

c)

C. கரடு முரடு - தாயும் குழந்தையும்

d)

D. குறை நிறை - எந்தக் காலத்திலும்

3.

கோடிட்ட இடங்களில் பொருத்தமான இணைமொழிகளைத் தெரிவு செய்க.


லங்காவியில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் உடல் -------------------------- இருந்தது.

a)

A. எலும்பும் தோலும்

b)

B. உருண்டு திரண்டு

c)

C. இன்ப துன்பம்

d)

D. மேடு பள்ளம்

4.

ஆதிசங்கரன் --------------------------------- முயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.

a)

A. அன்றும் இன்றும்

b)

B. அல்லும் பகலும்

c)

C. எலியும் பூனையும்

d)

D. ஆடை அணிகலன்

5.

இந்திய திருமணத்திற்கான கலாச்சார __________________ கண்காட்சி புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்றது.

a)

A. ஆடை அணிகலன்

b)

B. எலும்பும் தோலும்

c)

C. பழக்க வழக்கம்

d)

D. ஆடல் பாடல்

6.

புத்தர் பெருமானின் வாக்குப்படி மாந்தர்கள் தத்தம் செயலுக்கு ஏற்ப ___________ அடைவர்.

a)

A. மேடு பள்ளம்

b)

B. ஆடல் பாடல்

c)

C. நன்மை தீமை

d)

D. அருமை பெருமை

7.

கௌரி ___________ இறைவழிபாடு செய்யத் தவற மாட்டாள்.

a)

A. காலையும் மாலையும்

b)

B. பழக்க வழக்கம்

c)

C. அங்கும் இங்கும்

d)

D. அன்றும் இன்றும்

8.

சோமு கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபட விரும்பினான். இத்திட்டத்தின் ___i_____ எண்ணிக் குழப்பம் அடைந்தான். இறுதியில் கால் நடை வளர்ப்பு இலாகாவின் அதிகாரியின் ஆலோசனைப்படி கோழிகளை வளர்த்தான். கோழிகள் _______ii_____ காணப்படன.

a)

A. எலும்பும் தோலும் - நன்மை தீமைகளை

b)

B. நன்மை தீமைகளை - உருண்டு திரண்டு

c)

C. ஆடை அணிகலன்களை - உருண்டு திரண்டு

d)

D. துணி மணிகளை - எலும்பும் தோலும்

9.

______________ சிறந்து விளங்கிய யூ.பி.எஸ். ஆர் மற்றும் பி.எம்.ஆர் மாணவர்களைக் கல்வியமைச்சுப் பாராட்டி விருதுகள் வழங்கியது.

a)

A. ஆடல் பாடல்களில்

b)

B. நன்மை தீமைகளில்

c)

C. கல்வி கேள்விகளில்

d)

D. ஆடை அணிகலன்களில்

10.

அந்த அடையாளம் தெரியாத நபர் _______________ பார்த்துக் கொண்டே அந்தச் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தார்.

a)

A. சுற்றும் முற்றும்

b)

B. அன்றும் இன்றும்

c)

C. தாயும் சேயும்

d)

D. கல்வி கேள்வியும்