Worksheetsதிருக்குறள் ஆண்டு 4 (வையத்துள்)
Total questions: 10
Worksheet time: 2hrs 16mins
திருக்குறளை இயற்றியவர் யார்?
வள்ளலார்
கம்பர்
திருவள்ளுவர்
பாரதிதாசன்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
________________________________________
தெய்வத்துள் வைக்கப் படும்
ஆதிபகவன் முதற்றே உலகு
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
நாவினாற் சுட்ட வடு
'தெய்வத்துள் வைக்கப் படும்' என்பது எதைக் குறிக்கும்?
இறைவனாக மாறி விடுவான்
இறைவனுக்கு ஈடாக மதிக்கத் தக்கவன்
வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்
மற்றவர்களால் மதிக்கப்பட மாட்டான்.
'வாழ்வாங்கு வாழ்பவன்' என்பது எதைக் குறிக்கும்?
அறநெறி தவறாமல வாழ்பவன்
சந்தோஷமாக வாழ்பவன்
பிறருக்கு நன்மை செய்து வாழ்பவன்
மற்றவர்களுக்குக் கேடு விளைவிப்பவன்
வையம் எனும் சொல்லின் பொருள் யாது?
சொர்க்கம்
நரகம்
பூமி
தேவலோகம்
கீழ்க்காணும் செயல்களில் எது கடைப்பிடிக்க வேண்டியது?
அந்தப் பையன் தன் அக்காளைத் தள்ளி விட்டு திட்டினான்.
கண்ணன் எப்போதும் பெரியவர்களிடம் மரியாதையாகப் பேசுவான்
வருணன் தான் செய்த தவறை மறைக்கப் பொய் சொல்வான்.
சீதா தன் வீட்டின் பின்புறம் இருக்கும் பிராணிகளுக்கு எப்போதும் உணவிடுவாள்
ஆசிரியர் மற்றும் பெற்றோற் சொல்வதைக் கேட்ட சத்யா அனைவராலும் பாராட்டப்பட்டாள்
அறநெறியைக் காட்டும் செயல்கள் யாது?
பெரியவர்களை மதித்தல்.
பொய் பேசுதல்
கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுதல்
தன்னால் இயன்ற உதவிகள் செய்தல்
கடுமையான சொற்களைப் பேசுதல்.
நாம் ஏன் அறநெறி தவறாமல் வாழ வேண்டும்?
அனைவராலும் மதிக்கப்படுவோம்
மற்றவர்களுக்குத் தீங்கு செய்யலாம்.
இறைவன் கொடுத்த வாழ்க்கையை எப்படியும் வாழலாம்.
அறநெறியில் வாழ்ந்தால் தவறு செய்ய மாட்டோம்.
இன்றைய திருக்குறளுக்குப் பொருத்தமான சூழல் யாது?
அறம் தவறாமல் ஆட்சி புரிந்த தருமன் சிறந்த மன்னனாகக் கருதப்படுகிறார்
இராவணன் பல தவறுகள் புரிந்து ஆட்சி நடத்தியதால் இராமரால் வீழ்த்தப்பட்டான்.
வாழ்க்கையில் உண்மையே பேசி அரசு புரிந்த அரிச்சந்திரன் தலைசிறந்த மன்னன்.
அந்தப் பெரியவர் பல நற்காரியங்கள் செய்து வாழ்வதால் அனைவராலும் போற்றப்படுகிறார்.
வாழ்க்கையில் நாம் தவிர்க்க வேண்டிய செயல்கள் யாது?
பொய் பேசுதல்
பிறரை நிந்தித்தல்
உண்மை பேசுதல்
பிறருக்கு உதவுதல்
