NEW
Font size
WorksheetsPT3 தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்
Total questions: 10
Worksheet time: 50mins
கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடருக்கு ஏற்ற விளக்கத்தினைக் கொண்டுள்ள சரியான விடையைத் தெரிவு செய்க.
வாழையடி வாழை – மீண்டும் மீண்டும்
வெட்டிப் பேச்சு – எதிர்த்துப் பேசுதல்
அளவளாவுதல் – கூடிப் பேசுதல்
உடும்புப் பிடி – பிடித்ததை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுதல்
பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான மரபுத்தொடர் எது?
மாவீரன் நெப்போலியன் : முடியாது என்பது என் அகராதியில் கிடையாது. இந்தத் தாரக மந்திரமே என் வெற்றியின் அடிப்படையாகும்.
உடும்புப் பிடி
இடித்துரைத்தல்
தலை வணங்குதல்
கானல் நீர்
கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு மிகப் பொருத்தமான பழமொழி எது?
நடந்து முடிந்த ஒரு காரியத்தை நினைத்து வருந்திப் பயனில்லை.
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.
தன் கையே தனக்கு உதவி.
அடாது செய்பவன் படாது படுவான்.
பின்வரும் சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
போலிஸ்காரர் : தற்போது நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருந்தும் நீங்கள் ஏன் ஊரைச் சுற்றித் திரிகிறீர்கள்? உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேவையற்ற பிரச்சனை உங்களுக்கு!
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை.
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்.
அடாது செய்பவன் படாது படுவான்.
பின்வரும் பனுவலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இளம் வயதிலேயே சட்டப்படிப்பு பயில இங்கிலாந்துக்குச் சென்றார். காந்தியின் தாயார் மது, மாது, சூது ஆகியவற்றைக் காந்தி கனவிலும் தொடக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பினார். அன்று முதல் காந்தி தமது இறுதிக்காலம் வரை தம் அன்னையின் அறிவுரையின்படியே வாழ்ந்து காட்டி மகாத்மாவானார்.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்.
கீழ்க்காணும் திருக்குறளின் கருத்து யாது?
இனிமையாகப் பேசக்கூடியவர் இடும் வேலையைப் பிறர் உடனே செய்வர்.
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
கீழ்க்காணும் திருக்குறளில் கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
காத்துக் கொள்வதானால்
காத்துக் கொள்ளவேண்டும்
காக்காவிட்டால்
காப்பாற்ற வேண்டுமானால்
பின்வரும் திருக்குறளில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது ____________ மற்று
உடையர்
உடையேர்
உடையரே
உடையரோ
கீழ்க்காணும் செய்யுளின் விடுபட்டுள்ள வரிகளைத் தெரிவு செய்க.
__________________________
__________________________
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் – வரிசையால்
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று
தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு
இராமலிங்க அடிகளார் இறைவனிடம் எவற்றை வேண்டுகிறார்?
I. இறைவனின் திருவடியை நினைக்கின்ற உத்தமர்களின் உறவைப் பெற இறைவனிடம் வேண்டுகிறார்.
II. வஞ்சகர்களின் உறவு தம்மை அடையாதவாறு இருக்க இறைவனிடம் வேண்டுகிறார்.
III. இறைவனின் பெருமைகளைப் பேசுபவனாக இருக்க வேண்டுமென இறைவனிடம் வேண்டுகிறார்.
IV. பொய்மை மொழிகளைப் பேசாதவனாக இருக்க இறைவனிடம் வேண்டுகிறார்.
I, II, III
I, II, IV
II, III, IV
I, II, III, IV
