wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

UPSR தமிழ்மொழி (தொகுதி 8) - உமா பதிப்பகம்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்தைச் செயப்பாட்டுவினை வாக்கியமாக மாற்றுக.


குமுதா சிறப்பாக நடனம் ஆடினாள்.

a)

சிறப்பான நடனத்தைக் குமுதா ஆடினாள்.

b)

சிறப்பாக நடனம் ஆடினாள் குமுதா.

c)

நடனம் குமுதாவால் சிறப்பாக ஆடப்பட்டது.

d)

சிறப்பாக ஆடப்பட்ட நடனம் குதாவுடையது.

2.

தவறாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

ஒப்புக் கொண்டான்

b)

போவதாய்ச் சொன்னான்

c)

ஓடிச் சென்றான்

d)

கலந்துக் கொண்டார்

3.

சேர்த்து எழுதுக.


மரம் + கொத்தி =

a)

மரக்கொத்தி

b)

மரங்கொத்தி

c)

மரந்கொத்தி

d)

மரகொத்தி

4.

பிரித்தெழுதுக.


கற்சிலை =

a)

கல் + சிலை

b)

கள் + சிலை

c)

கட் + சிலை

d)

கழ் + சிலை

5.

நேற்று அவனிடமிருந்து எனக்கொரு கடிதம் ____________ . நாளை நான் அதற்குப் பதில் __________________.

a)

வந்தது / அனுப்புவேன்

b)

வருகிறது / அனுப்பினேன்

c)

வருகின்றது / அனுப்புகிறேன்

d)

வரும் / அனுப்பிக்கொண்டிருப்பேன்

6.

இச்செய்வினை வாக்கியத்தைச் செயப்பாட்டுவினை வாக்கியமாக மாற்றுக.


ஐயர் அத்திருமணத்தைச் சிறப்புற நடத்தி வைத்தார்.

a)

சிறப்புற அத்திருமணத்தை ஐயர் நடத்தி வைத்தார்.

b)

அத்திருமணத்தைச் சிறப்புற நடத்தி வைத்தார் ஐயர்.

c)

அத்திருமணம் ஐயரால் சிறப்புற நடத்தி வைக்கப்பட்டது.

d)

நடத்தி வைக்கப்பட்ட அத்திருமணம் ஐயரால் சிறப்புற்றது.

7.

குழந்தை அழுதது.


இவ்வாக்கியத்தில் செயப்படுபொருள் விடுபட்டுள்ளது. அப்படியானால், இது எந்த இலக்கணப் பிரிவைச் சார்ந்தது?

a)

குன்றாவினை

b)

குன்றியவினை

c)

செய்வினை

d)

செயப்பாட்டுவினை

8.

சேர்த்து எழுதுக.


பாடா + குருவி =

a)

பாடா குருவி

b)

பாடாத குருவி

c)

பாடாக் குருவி

d)

பாடு குருவி

9.

பிரித்தெழுதுக.


சிற்றூர் =

a)

சிறிய + ஊர்

b)

சிறி + ஊர்

c)

சின்ன + ஊர்

d)

சிறுமை + ஊர்

10.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களுள் திசைப்புணர்ச்சியைக் காட்டும் சொல் யாது?

a)

பொன்னாடு

b)

தென்னாடு

c)

தன்னாடு

d)

இந்நாடு