Font size
Worksheetsவெற்றி வேற்கை
Total questions: 5
Worksheet time: 5mins
வெற்றி வேற்கையைப் பூர்த்திச் செய்க.
கல்விக் ....................................
வித்தவன் இறைவனாகும்
அழகு கசடற மொழிவது
கழகு கசடற மொழிதல்
கழகு செழுங்கினை தாங்குதல்
இன்றைய வெற்றி வேற்கையின் பொருளைச் சரியாகத் தேர்ந்தெடு.
உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.
எத்தகைய வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது.
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு.
சிறப்பாக பேச வேண்டும்.
'கல்விக் கழகு கசடற மொழிதல்' என்ற வெற்றிவேற்கைக்கேற்ற சரியான கூற்றைத் தெரிவு செய்க.
நாம் எப்பொழுதும் கல்வி கற்பதை நிறுத்தக் கூடாது.
நாம் அனைவரிடமும் பண்புடன் பேச வேண்டும்.
நாம் நமக்குத் தோன்றுவதை மட்டும் கவலைப்படாமல் பேசிவிட வேண்டும்.
நாம் கற்ற கல்விக்கேற்ப எப்பொழுதும் பிழையில்லாமல் பேசுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
'கல்விக் கழகு கசடற மொழிதல்' என்ற வெற்றி வேற்கைக்கேற்ற சரியான சூழலைத் தெரிவு செய்க.
பிரதமர் தமது தேசிய தின உரையில் மக்கள் பிளவுபட்டிருந்தால் நாடு முன்னேற்றம் காணாது; என்றும் எல்லாத் துறைகளிலும் முழுமூச்சாக ஈடுபட்டால்தான் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையும் என்றார்.
சுந்தர் அவர் ஊரில் பிரபலமான ஒருவர்.இருப்பினும், பலர் அவரோடு பேசுவதைத் தவிர்ப்பார்கள்; காரணம் ஒவ்வொரு முறையும் அவர் பேசுவதைப் புரிந்து கொள்ளவதற்குக் கடினமாக இருக்கும்.
டாக்டர் காதர் இப்ராஹிம் சொற்பொழிவிற்கு ஒவ்வொரு முறையும் மக்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதற்கு முக்கிய கரணியம் அவர் கற்ற கல்விக்கேற்ப தெளிவாகவும், பிழையில்லாமலும், பல நகைச்சுவை துணுக்குகளோடு பேசுவதேயாகும்.
'கல்விக் கழகு கசடற மொழிதல்' எனும் வெற்றிவேற்கைக்கேற்ப நம் வாழ்வில் நடந்து கொள்வது அவசியமா? காரணத்தை விளக்குக.
