wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மொழியணிகள் (SET 1)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பனிக்கூழ் வியாபாரியைக் கண்ட சிறுவர்கள் ______________________ என அவரை நோக்கி ஓடினர்

a)

சல சல

b)

குடு குடு

c)

கிலு கிலு

d)

கல கல

2.

பின்வரும் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்வு செய்க.


எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் செல்லிவிடுகிற இயல்வு உள்ள் ஒரு நபர்.

a)

கிணற்றுத் தவளை

b)

நாக்கு நீளுதல்

c)

அவசரக் குடுக்கை

d)

ஓட்டை வாய்

3.

திருக்குறளின் இரண்டாவது அடியை எழுதுக.


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

______________________________________________________

a)

செயற்கரிய செய்கலா தார்

b)

தீயினும் அஞ்சப் படும்

c)

செயற்கரிய செய்க லாதார்

d)

செயற்கரிய செய் கலாதார்

4.

இணைமொழிக்கான சரியான பொருளைத் தேர்வு செய்க.

a)

மூலை முடுக்கு = ஓர் இடத்தில்

b)

நன்மை தீமை = உயர்வு

c)

தான தர்மம் = கொடை தருதல்

d)

பழக்கவழக்கம் = புதிய நடைமுறைகள்

5.

புதுமைப்பித்தன் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். ஆயினும், அவர் விளம்பரங்களை விரும்பாததால் __________________________________ அமைதியாக இருந்து இலக்கியப்பணியை ஆற்றினார்.

a)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

b)

இலைமறை காய் போல

c)

கண்ணினைக் காக்கும் இமை போல

d)

மலரும் மணமும் போல

6.

திருமண வீட்டில் அடுக்கப்பட்டிருந்த வெள்ளிப் பாத்திரங்கள் _________________________ என மின்னின.

a)

தட தட

b)

மினு மினு

c)

தக தக

d)

பள பள

7.

உயிரியல் தொழில்நுட்பத்தில் அறிவியல் ஆளுமையாகத் தேர்வு செய்யப்பட்ட மலேசிய மருத்துவர் மஹாலெட்சுமி தனக்குக் கிடைத்த ____________________ தன் தந்தையையே சாறும் என்று பெருமைப்பட கூறினார்.

a)

கல்வி கேள்வி

b)

அருமை பெருமை

c)

வரவு செலவு

d)

பேரும் புகழும்

8.

திரு அசோகன் __________டன் தொழிற்திறன் கல்வி பயின்றதால் இன்று சொந்தமாகப் பட்டறையை வெற்றிகரமாக நிறுவகிக்க முடிகிறது

a)

கிணற்றுத் தவளை

b)

முழுமூச்சு

c)

தெள்ளத் தெளிதல்

d)

முயக் கொம்பு

9.

மரபுத் தொடரின் பொருளை தேர்வு செய்க


நாக்கு நீளுதல்

a)

அதிகம் பேசுதல்

b)

மகிழ்ச்சியாகப் பேசுதல்

c)

வரம்பு மீறிப் பேசுதல்

d)

பொய் பேசுதல்

10.

கோவிட்-19 தொடர்பான தகவலகள் __________________ மக்களுக்குச் சென்று சேர்ந்தன.

a)

எலியும் பூனையும் போல

b)

சிலை மேல் எழுத்து போல

c)

மலரும் மணமும் போல

d)

காட்டுத் தீ போல

11.

அப்பா கோபத்தில் அம்மாவிடம் _________வெனப் பேசினார்.

a)

பள பள

b)

தக தக

c)

கடுகடு

d)

சர சர

12.

பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


கரைத்துக் குடித்தல்

a)

நிறைவேறுதல்

b)

ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்

c)

மனக்கசிவு

d)

ஒரு கலையை அல்லது துறையைப் பற்றி முழுக்கப் படித்து அறிதல்

13.

கீழ்காணும் சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


நாம் வளர்ப்புப் பிராணிகளைக் கருணையின்றி வதைப்பது பெரிய குற்றமாகும்.

a)

கை கூடுதல்

b)

தட்டிக் கழித்தல்

c)

ஈவிரக்கம்

d)

கரைத்துக் குடித்தல்

14.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


தேர்வுக்கு முன்பாகவே எல்லாப் பாடங்களையும் மீள்பார்வை செய்து நம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டால் தோல்வி என்பது நம்மை நெருங்காது.

a)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

b)

வெள்ளம் வருமுன் அணைபோடு

c)

புத்திமான் பலவான்

d)

வருந்தினால் வாராதது இல்லை

15.

கீழ்காணும் உலகநீதியைப் பூர்த்தி செய்க.


மனம்போன போக்கெல்லாம் ______________________

a)

நம்ப வேண்டாம்

b)

டிணங்க வேண்டாம்

c)

போக வேண்டாம்

d)

தேட வேண்டாம்