NEW
Font size
Worksheetsதமிழ்மொழி மீள்பார்வை ஆண்டு 6 (இலக்கியம்)
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்கண்ட செய்திக்கு ஏற்ற செய்யுளைத் தேர்ந்தெடுத்திடுக.
செய்தி 1 :
கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு அநேக தனிநபர்கள் தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றனர்.
செய்தி 2 :
ஆரம்பக் கல்வி எண்களையும் மொழியையும் மாணாக்கரிடையே வளப்படுவதில் பெரும் பங்காற்றுகின்றன.
இயல்வது கரவேல், எண்ணெழுத் திகழேல்
ஈவது விலக்கேல், எண்ணெழுத் திகழேல்
இயல்வது கரவேல், அறம் செய விரும்பு
உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
ஒருவரை போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக் கூறித் திரிதல் கூடாது.
கீழ்க்காணும் கவிதைக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
ஏவா மக்கள் மூவா மருந்து
வாக்கியங்களுக்குப் பொருந்தும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
தங்கையின் வளையல்களைத் திருடிய கண்ணன் ....... வென விழித்தான்.
பிடிபட்ட அத்திருடனைப் பொதுமக்கள் .......... வென இழுத்துச் சென்றனர்.
திரு திரு, தக தக
தக தக, திரு திரு
திரு திரு, தர தர
கீழ்க்கண்ட வாக்கியத்தில் கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
பல நாட்களாக ஊண் உறக்கம் இல்லாமல் பணி புரிந்த திரு இரமணி ........ காணப்பட்டார்.
அங்கும் இங்கும்
உருண்டு திரண்டு
அல்லும் பகலும்
எலும்பும் தோலுமாக
சிலாம்புசெல்வன் சிறு வயதிலிருந்து முழுக்கவனத்துடன் கல்வி கற்று, இன்று மருத்துவத் துறையில் பட்டதாரியாகி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை ஈட்டித் தந்துள்ளான்.
கண்ணும் கருத்துமாக
செவி சாய்த்தல்
கிணற்றுத் தவளை
நாக்கு நீளுதல்
கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
படிப்பது அவசியம். ஆனால், பிழையில்லாமல் பேசும்போதுதான் படித்தக் கல்விக்கு மதிப்பு
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
மேற்காணும் படத்திற்குப் பொருந்தும் பழமொழியைத் தெரிவு செய்யவும்.
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
இளங்கன்று பயமறியாது
படத்திற்குப் பொருந்தும் திருக்குறளைத் தெரிவு செய்க.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருக்கக் காய்கவர்ந் தற்று
அன்பின் வழியது உயிர்நிலை அஃதில்லார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
பின்வரும் செய்யுளை இயற்றியவர் யார்?
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு,
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
ஒளவியார்
சமண முனிவர்
பாரதியார்
குமரகுருபர சுவாமிகள்
