wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil பழமொழிகள் (படிவம் 1-3)

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. ஆராயாமல் செய்யும் செயல் ஆபத்தில் முடியும் என்ற பொருளுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

அடாது செய்பவன் படாது படுவான்

b)

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது

c)

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்

2.

உயர்ந்த பண்புடையவர்கள் சிறந்த காரியங்களையே செய்வார்களேயன்றி, எந்நிலையிலும் தங்களுக்கு இழிவு தரக்கூடிய காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.

எனும் பொருளுக்கேற்ற பழமொழி எது?

a)

அடாது செய்பவன் படாது படுவான்

b)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

3.

ஆடமாட்டாதவள் கூடம் (a)  

4.

தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால், எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாளடைவில் எளிதாகி விடும், எனும் பொருளுக்கேற்ற பழமொழி யாது?

a)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

b)

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

5.

அடாது செய்பவன் படாது படுவான், எனும் பழமொழியின் பொருள் என்ன?

a)

தகாத செயல்களைச் செய்பவர்கள் அதற்குரிய தண்டனைகளைப் பெற்றே தீருவர்.

b)

உயர்ந்த பண்புள்ளவர்கள் தங்களுக்கு இழிவு தரக்கூடிய காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.

c)

தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாளடைவில் எளிதாகி விடும்

6.

________________________ என்பதை உணர்ந்த கந்தன் தமது மேற்படிப்பிற்கான பணத்தைச் சிறு வயது முதலே சேமித்து வைக்கத் தொடங்கினான்.

a)

கண்டதைக் கற்க பண்டிதனாவான்

b)

ஆட மாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

c)

தன் கையே தனக்கு உதவி

7.

_______________________ என்பதற்கொப்ப ராணி எக்காரியத்தையும் நன்கு யோசித்து நிதானத்துடன் செய்து முடிப்பாள்.

a)

ஆட மாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

பதறாத காரியம் சிதறாது

8.

ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும், எனும் பொருளுக்கேற்ற பழமொழி எது?

a)

இளமையில் சோம்பல் முதுமையில் மிடிமை

b)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

c)

தன் கையே தனக்கு உதவி

9.

வியாபாரத்தில் நஷ்டம் அடைந்த கோவிந்தன் மீண்டும் தன் சுயமுயற்சியில் மற்றவரின் உதவியைப் எதிர்பாராமல் உழைத்து மீண்டும் மிகப் பெரிய தொழிலதிபர் ஆனார், எனும் பொருளுக்கேற்ற பழமொழி எது?

a)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

கண்டதைக் கற்க பண்டிதனாவான்

10.

வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. சில வேளைகளில் நாம் நினைப்பது நடக்கும். ஆனால் அதனால் கிட்டும் மகிழ்ச்சி நிலைக்காது. பல வேளைகளில் தோல்விதான் நம்மை அரவணைதுக் கொள்ளும். அச்சமயத்தில் நாம் மனம் தவறாமல் வாழ்க்கையில் நினைத்ததை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமாய் இருக்க வேண்டும், என்ற பொருளுக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடு.

a)

தன் கையே தனக்கு உதவி

b)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

c)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?