wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PT3 தமிழ்மொழி (தொகுதி 8) - உமா பதிப்பகம்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் வாக்கியத்தைப் பொருத்தமான மரபுத்தொடரைக் கொண்டு நிறைவு செய்க.


_____(i)_____ பேசிக் கொண்டிருப்பதில் _____(ii)_____ பயன் கிடையாது.

a)

வெட்டிப்பேச்சு, அரைப்படிப்பு

b)

அளவளாவுதல், எள்ளளவும்

c)

வெட்டிப் பேச்சு, எள்ளளவும்

d)

அளவளாவுதல், அரைப் படிப்பு

2.

பின்வரும் உரையாடலுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


பெரியவர் :மணமக்களே நீங்கள் இருவரும் நீடு வாழ்க. உங்களுக்குப் பிறக்கப் போகும் பிள்ளைகளும் பன்னெடுங்காலம் தலைமுறை தலைமுறையாக வாழ்வார்களாக!

மணமக்கள் : ஐயா, உங்களின் ஆசிக்கு மிக்க நன்றி.

a)

வாழையடி வாழை

b)

வீடுவாசல்

c)

தோள் கொடுத்தல்

d)

உச்சி குளிர்தல்

3.

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


எச்செயலைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே கவனம் செலுத்த வேண்டும்.

a)

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்.

b)

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

c)

தன் கையே தனக்கு உதவி.

d)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.

4.

கீழ்க்காணும் கூற்றுக்கு மிகப் பொருத்தமான பழமொழியைத் தேர்ந்தெடுத்திடுக.


நடிகர் புருஸ்லீ சிறந்த தற்காப்புக்கலை நிபுணர். அவர் தாமே உருவாக்கிய தற்காப்பு உத்திமுறைகளையும் நுணுக்கங்களையும் கண்டு உலகமே வியக்கிறது. அவர் அந்த உத்திமுறைகளைக் கொண்டு சிறந்த சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படங்களை உருவாக்கி வெற்றி கண்டார்.

a)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.

b)

தன் கையே தனக்கு உதவி.

c)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்.

d)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

5.

பின்வரும் பழமொழியை நிறைவு செய்க.


ஆலும் வேலும் _________ நாலும் இரண்டும் _________.

a)

சொல்லுக்குறுதி, பற்களுக்குறுதி

b)

சொற்களுக்குறுதி, பற்களுக்குறுதி

c)

பல்லுக்குறுதி, சொல்லுக்குறுதி

d)

சொற்களுக்குறுதி, பல்லுக்குறுதி

6.

கீழ்க்காணும் திருக்குறளுக்குப் பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க.


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

a)

பொறாமை குணத்தை விட்டொழிப்பதே அறமாகும்.

b)

பொறாமை, பேராசை, கோபம் கடுஞ்சொல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

c)

பொறாமை, ஆணவம், பேராசை, கடுங்கோபம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

d)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகியவை இல்லாமல் வாழ்வதே சிறந்ததாகும்.

7.

கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுத்திடுக.


வாழ்க்கையில் நெறி தவறும் சூழல் நேரும்போது

சான்றோரின் அறிவுரை கைகொடுக்கும்.

a)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

b)

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்

c)

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் முடையார்வாய்ச் சொல்

d)

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்

8.

கீழ்க்காணும் திருக்குறளில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

a)

அறிவுரை

b)

தெளிவுரை

c)

ஆலோசனை

d)

பதவுரை

9.

பின்வரும் செய்யுளடியை நிறைவு செய்க.


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத்

தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்கு

_________________________

a)

தானே சிறியார் தொடர்பு

b)

நிற்றலும் கூடப் பெறின்

c)

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

d)

சென்ற இடமெல்லாம் சிறப்பு

10.

பின்வரும் நாலடியார் செய்யுளடி உணர்த்தும் சரியான பொருளைத் தெரிவு செய்க.


வானூர் மதியம்போல வைகலும் தேயுமே.

a)

தீய குணங்கள் கொண்ட சிறியோரின் நட்பு, தேய்பிறை போன்று நாளுக்கு நாள் குறையும்.

b)

பண்பில் சிறந்த பெரியோரிடம் கொண்ட நட்பு, வளர்பிறைபோல் ஒவ்வொரு நாளும் வளரும்.

c)

கற்றறிந்தவர்கள் செல்லுகின்ற இடமெல்லாம் சிறப்புப் பெறுவர்.

d)

உள்ளத்திலொன்றும் புறத்திலொன்றுமாகப் பேசும் வஞ்சகர் உறவு என்னை அடையாதவாறு காக்க வேண்டும்.