wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Culture & Food Quiz1 - IOCL (Tamil)

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.
தமிழக ராஜவம்சங்களில் மிகமுக்கியமானது இராம்நாடு அரச குடும்பம். ராம்நாடு அரசக் குடும்பத்தில், பெண் ஆட்சியாளர்களுக்கு 'நாச்சியார்' என்ற பட்டம் வழங்கப்படுகிறது. அதேபோல், ஆண் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்படும் பட்டம் என்ன?
a)
தொண்டைமான்
b)
வர்மா
c)
சேதுபதி
d)
சேரன்
2.

நடனக்கலைஞர்கள் வண்ணக் கைக்குட்டைகளை விரல்களில் கட்டி, காலில் சலங்கை அணிந்து ஆடும் நாட்டுப்புற நடனக்கலையின் பெயர் என்ன?

a)

ஒயிலாட்டம்

b)

பாவை கூத்து

c)

கரகாட்டம்

d)

தப்பாட்டம்

3.
இந்திய வரலாற்றில் மிகப்பெரும் இதிகாசங்களாக போற்றப்படும் ராமாயணம் மற்றும் மகாபாரதம். இரண்டிலும் தோன்றும் கதாபாத்திரம் இவர்களில் யார்?
a)
தசரதன்
b)
பீஷ்மர்
c)
ஜாபாலி
d)
ஹனுமன்
4.

தமிழர்களின் பெருமை மிகு பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ் இலக்கியத்தின்படி எந்த நிலத்துடன் / திணையுடன் தொடர்புடையது?

a)

முல்லை

b)

மருதம்

c)

நெய்தல்

d)

பாலை

5.
நாம் வீட்டில் தினசரி உபயோகிக்கும் எந்த பொருளுக்கு திண்டுக்கல் நகரம் பிரபலமானது?
a)
பூட்டு
b)
வெட் கிரைண்டர்
c)
ஜவுளி
d)
மர சிற்பங்கள்
6.
மதம் பிடித்த காட்டுயானைகளை நெறிப்படுத்த பயிற்சியளிக்கப்பட்ட யானைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
கும்கி
b)
கொம்பன்
c)
மருது
d)
ராஜன்
7.
நல்லெண்ணை சமையல் மட்டுமில்லாமல் மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது இவற்றுள் எதிலிருந்து நல்லெண்ணெய் பெறப்படுகிறது?
a)
வேர்கடலை
b)
எள்ளு
c)
சூரியகாந்தி
d)
பேரீச்சம்பழம்
8.
இந்தியாவில் பல முறைகளில் தயாரிக்கப்பட்டு பல்வேறு உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படும் ஒரு சுவைமிகு பண்டம் ஊறுகாய். இவற்றுள், எந்த வகை ஊறுகாய் தயாரிக்க மாங்காய் பயன்படுத்தப்படுவதில்லை?
a)
ஆவக்காய்
b)
மாவடு
c)
கோங்குரா
d)
மா இஞ்சி
9.
தமிழ் இலக்கியத்தில் ஊண்சோறு என அழைக்கப்பட்ட உணவுவகை, தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
சாம்பார் சாதம்
b)
தயிர் சாதம்
c)
பிரியாணி
d)
புலவு சோறு
10.
துரித உணவுகளில் மிகவும் பிரபலமான செஸ்வான் ஃபிரைடு ரைஸில் செஸ்வான் என்பது இவற்றுள் எதைக்குறிக்கும்?
a)
சீன சமையல்காரர் பெயர்
b)
சீன மாகாணத்தின் பெயர்
c)
சீன மிளகாயின் பெயர்
d)
ஒரு சீன காய்கறி பெயர்
11.

இவற்றுள் எது ‘நவதானிய’ வகையைச் சேர்ந்தது அல்ல ?

a)

கேழ்வரகு

b)

அரிசி

c)

கொள்ளு

d)

மொச்சை

12.

தினமும் உணவுடன் ஏதேனும் ஒரு கீரை வகையை சேர்த்துக்கொள்வது உடலுக்கு நன்மை தரும். இவற்றுள் எந்த வகை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது?

a)

முளைக்கீரை

b)

வல்லாரைக்கீரை

c)

மணத்தக்காளி கீரை

d)

பொன்னாங்கண்ணிக் கீரை

13.
மொழி , கலை பண்பாட்டை உயர்த்துவதற்காகவும் அதில் ஆராய்ச்சிகளை செய்வதற்காகவும் தமிழ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இவற்றுள் எங்கு தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது?
a)
தஞ்சாவூர்
b)
மதுரை
c)
கோவை
d)
கன்னியாகுமரி
14.
முதலாம் நரசிம்மவர்மன் நிர்மாணித்த நகரம் மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரம். அம்மன்னன் இவற்றுள் எந்த கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவராக திகழ்ந்தார்?
a)
குத்துசண்டை
b)
வாள்சண்டை
c)
மல்யுத்தம்
d)
வில் - அம்பு எய்தல்
15.
நோய்வாய்ப்படாமல் குழந்தைகள் இருக்க தாய்மார்களுக்கு பெரிதும் உதவுவதால் இவற்றுள் எந்த மூலிகையை “பிள்ளை வளர்ப்பான்” என்பார்கள்?
a)
வசம்பு
b)
நில வேம்பு
c)
பிரண்டை
d)
துளசி