NEW
Font size
Worksheetsபிதி3 மொழியணி 1
Total questions: 20
Worksheet time: 10mins
தமிழாசிரியர் கற்றுக்கொடுத்த திருக்குறளை மாணவர்கள் மனனம் செய்து …………………… வென ஒப்புவித்தார்கள்.
கிடுகிடு
நசநச
வெடவெட
கடகட
அதிகம் பேச விரும்பாத கலைவாணி ………………………. பேசிக்கொண்டிருக்கும் மாலதியைப் பார்த்தவுடன் ஒதுங்கிச்சென்றாள்.
சடசட
விறுவிறு
திமுதிமு
தொணதொண
……………………………வென ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென கீழே விழுந்ததால் இடது கால் முறிவு ஏற்பட்டது.
சிலுசிலு
தளதள
பரபர
துருதுரு
என் பெற்றோர்களின் வெளியூர் சுற்றுப்பயணம் எந்தவொரு ……………………….யுமின்றி பாதுகாப்பாக வீடு திரும்பினர்.
கள்ளங்கபடு
நோய்நொடி
தங்குதடை
உயர்வு தாழ்வு
கடந்த சில மாதங்களாகவே மழை பெய்யாததால் பயிர்கள் …………….. காணப்பட்டன.
ஆடிப்பாடி
வாடி வதங்கி
உள்ளும் புறமும்
நாணிக்கோணி
தங்கள் பிள்ளைகளின் ஊதாரித்தனத்தால் ___________________மாக வாழ்ந்த பணக்காரர் ஏழையானார்.
அடக்க ஒடுக்கம்
சீரும் சிறப்பும்
ஊண் உறக்கம்
ஈடு இணையற்ற
நண்பனின் மகிழுந்து பழுதாகி சாலையில் நின்றபோது சற்று தூரத்தில் அப்பாவின் வாகனத்தைக் கண்ட பிரவினுக்கு _________________ இருந்தது.
ஊமை கண்ட கனா போல
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல
மலரும் மணமும் போல
இலைமறை காய் போல
சூழலுக்கு ஏற்ப சரியான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
அரவினுக்குப் பாடும் திறமை இருந்த போதும் அவன் போட்டிகளில் கலந்து கொள்ளாததால் அவனுடைய திறமையை யாரும் அறிந்திருக்கவில்லை.
உள்ளங்கை நெல்லிக்கனி போல
மலரும் மணமும் போல
இலைமறை காய் போல
இலவு காத்த கிளி போல
உடன்பிறந்த சகோதரியே தன் தங்கையைக் கொடுமைப்படுத்தும் செயல் _________________ இருக்கின்றது.
புற்றீசல் போல
வேலியே பயிரை மேய்ந்தாற் போல
பசுமரத்தாணி போல
உள்ளங்கை நெல்லிக்கனி போல
அக்குடியிருப்புப் பகுதியில் சில இளைஞர்கள் மாலை வேளையில் ஓரிடத்தில் கூடி_________________ பேசிப் பொழுதை வீணாகக் கழித்தார்கள்.
அரைப்படிப்பு
வாழையடி வாழை
வெட்டிப் பேச்சு
அளவளாவுதல்
கடுமையாக உழைத்த ரகு பி.தி.3 தேர்வில் 10 ஏக்கள் பெற்றதால் அவனின் பெற்றோர்_________________.
இடித்துரைத்தனர்
பாட்டு வணங்கினர்
உச்சிக் குளிர்தனர்
தலை வணங்கினர்
ஆசிரியர் கற்றுக் கொடுக்கும்பொழுது நண்பருடன் கதை பேசிக் கொண்டிருந்த மாணவனை அவர்_________________.
பாட்டு வணங்கினார்
இடித்துரைத்தார்
அளவளாவினார்
தலை வணங்கினார்
அன்பை ஊட்டி வளர்த்த தம் மகள், தம்மை எடுத்தெறிந்து பேசிவிட்டுப் போனதைக் கண்ட கமலா, _________________ என்று மனதிற்குள் கூறி அழுதார்.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்
பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு
கருத்துக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தன் இயலாமையை மறைத்துப் பிறரைக் குறை கூறுதல்
தன் கையே தனக்கு உதவி
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்டு வந்த அகிலன், காவல் அதிகாரியால் கைது
செய்யப்பட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கிறான்.
அடாது செய்பவன் படாது படுவான்
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
கீழ்க்காணும் திருக்குறளில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ____________ _____________ சொல்
ஒழுங்க முடையார்வாய்ச்
ஒழுக்க முடையார்வாய்ச்
ஒளுக்க முடையார்வாய்ச்
ஓழுக்க முடையார்வாய்ச்
கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளுக்குப் பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
சொல்வது சுலபம், செய்வது கடினம்
சொல்வது கடினம், செய்வது சுலபம்
சொல்வது படி நடத்தல் வேண்டும்
சொல்வது படி செய்தல் சிறப்பாகும்
கீழ்க்காணும் திருக்குறளின் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
______________________________________
சான்றோன் எனக்கேட்ட தாய்
இழுக்கா இயன்றது அறம்
மிகைநாடி மிக்க கொளல்
தன்னையே கொல்லும் சினம்
கீழ்க்காணும் செய்யுளின் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க.
____________________________________
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று
விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
மக்கட் பிறப்பில் பிறிதில்லை – அப்பிறப்பில்
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
கீழ்க்காணும் செய்யுளில் கருமையாக்கப்பட்ட வரியின் பொருளைத் தெரிவு செய்க.
விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே
அவன்பால் உறவு எனும் கோலை ஊன்றி, உணர்வெனும் கயிற்றினால் மன உறுதியோடு பக்தி செலுத்தினால்.
பாலைக் கடையும்போது நெய் வெளிப்படுவது போல இறையருள் வெளிப்படும்.
விறகில் தீயும், பாலில் நெய்யும் மறைந்திருப்பதுபோல மிகப் பெரிய மாணிக்கத்தைப் போன்று பேரொளியாகிய இறைவன் எங்கும் எதிலும் மறைந்துள்ளான்.
பெரியோர், சிறியவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
