wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி மற்றும் குறில் நெடில் வேறுபாடு

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ரவிக்கு வில்வித்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆசை. ஆனால், யாரும் அவனுக்குப் பயிற்சி அளிக்கவில்லை. சுயமாகக் கற்றுக்கொள்ளலாம் என்று எண்ணி அவன் யாருக்கும் தெரியாமல் அருகில் இருக்கும் ஒரு __________ (பனை, பானை) மரத் தோட்டத்திற்குச் சென்று பயிற்சி செய்ய முடிவு செய்தான். ஒரு மரத்தைக் குறியாக வைத்துப் ________ (பணத்தை, பாணத்தை) எய்தான். அப்போது அது எதிர்பாராத விதமாக அம்மரத்தைத் தாண்டிச் சென்றவரின் மார்பைத் துளைத்தது.

a)

பனை

b)

பானை

c)

பணத்தை

d)

பாணத்தை

2.

சமயச் சார்பற்ற விழாவாகக் கருதப்படுவது பொங்கல் விழாவாகும். அது தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. அன்று தமிழர்கள் புதுப் _________ (பனையில், பானையில்) அரிசி, சர்க்கரை, பால் போன்றவற்றைப் _________ (பொட்டு, போட்டு) பொங்கல் செய்வார்கள். அதை அனைவரும் உண்டு மகிழ்வார்கள்.

a)

பனையில்

b)

பானையில்

c)

பொட்டு

d)

போட்டு

3.

சேலைக் கடைக்கு வந்திருந்த ஒரு __________(பெண், பேண்), அவர் வாங்கிய சேலையை எடுத்துச் செல்லாமல், தவறுதலாக ராணி வாங்கிய ___________ (பட்டு, பாட்டு) சேலையை எடுத்துச் சென்றுவிட்டார். ஆசையாய் வாங்கிய அந்தச் சேலை பறிபோய்விட்டதே என்று எண்ணி ராணி மிகவும் வருத்தமாக இருந்தாள்.

a)

பெண்

b)

பேண்

c)

பட்டு

d)

பாட்டு

4.

யார் அந்த ஸ்டார் ____________ (பட்டுப், பாட்டுப்) போட்டியில் கலந்துகொண்ட ராணி, அவளுக்குப் பிடித்த பாடலைச் சிறப்பாக பாடி முதல் பரிசு பெற்றாள். தனது வெற்றிக்கு முக்கியக் காரணம் அவளுடைய பெற்றோர்களின் ஊக்குவிப்பே என்று வசந்தம் தொலைக்காட்சி செய்தி நிருபரிடம் அவள் ______ (பெட்டி, பேட்டி) அளித்த போது கூறினாள்.

a)

பட்டுப்

b)

பாட்டுப்

c)

பெட்டி

d)

பேட்டி

5.

தந்தை தாய் ________ (பெண், பேண்) என்று ஔவையார் பாடியுள்ளார். அதை நம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பெற்றோரைப் புறக்கணிப்பது பிள்ளைகள் செய்யும் _________ (பிழை, பீழை) ஆகும். அத்தவறைச் செய்யாமல் இருக்க அவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே பெற்றோரின் அருமை பெருமைகளைச் சொல்லி வளர்க்க வேண்டும்.

a)

பெண்

b)

பிழை

c)

பீழை

d)

பேண்

6.

திரு வருண் ஒரு _______(பல், பால்) மருத்துவர். அவருக்குக் கவிதை எழுதுவதென்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், தனது உண்மை அடையாளத்தை அவர் வெளிக்காட்ட விரும்பாததால் பத்திரிக்கைக்கு அவர் கவிதைகளை அனுப்பும் போது அவருடைய _______ (புனை, பூனை) பெயரான லாரன்ஸ் என்று எழுதியே அனுப்பி வைப்பார்.

a)

பல்

b)

புனை

c)

பூனை

d)

பால்