NEW
Font size
Worksheets10th Science -Chemistry unit11
Total questions: 9
Worksheet time: 5mins
1. ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின்
மூலக்கூறு வாய்ப்பாடு C3H6 அந்தத் சேர்மத்தின்
வகை
அ. அல்கேன்
ஆ. அல்கீன்
இ. அல்கைன்
ஈ. ஆல்கஹால்
2. ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-
மெத்தில்பியூட்டன் - 1 – ஆல் இது எந்த வகைச்
சேர்மம்
அ. ஆல்டிஹைடு
ஆ. கார்பாசிலிக் அமிலம்
இ. கீட்டோன்
ஈ. ஆல்கஹால்
3. IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக
சேர்க்கப்படும் இரண்டாம் நிலை மின்னொட்டு
_________
அ. ஆல்
ஆ. ஆயிக் அமிலம்
இ. ஏல்
ஈ. அல்
4. பின்வரும் படி வரிசை சேர்மங்களில்,
தொடர்ச்சியாக வரும் இணை எது?
அ. C3H8 and C4H10
ஆ. C2H2 and C2H4
இ. CH4 and C3H6
ஈ. C2H5OH and C4H8OH
5. C2H5OH + 3 O2→2 CO2 + 3 H2O என்பது
அ. எத்தனால் ஒடுக்கம்
ஆ. எத்தனால் எரிதல்
இ. எத்தனாயிக் அமிலம் ஆக்சிஜனேற்றம்
ஈ. எத்தனேல் ஆக்சிஜனேற்றம்
6. எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள
எத்தனாலின் சதவீதம்-----
அ. 95.5 %
ஆ. 75.5 %
இ. 55.5 %
ஈ. 45.5 %
7. கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக
பயன்படுகிறது.
அ. கார்பாக்சிலிக் அமிலம்
ஆ. ஈதர்
இ. எஸ்டர்
ஈ. ஆல்டிஹைடு
8. TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக்
குறிக்கிறது.
அ. தாது உப்பு
ஆ. வைட்டமின் ‘
இ. கொழுப்பு அமிலம்
ஈ. கார்போஹைட்ரேட்
9. கீழ்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறான கூற்று எது?
அ. நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு
அமிலத்தின் சோடிய உப்பு
ஆ. சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு
இ. டிடர்ஜெண்ட்டின் அயனி பகுதி SO3- Na+
ஈ. கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.
