NEW
Font size
WorksheetsKuiz Thirukkural oleh MUNIANDY RAJ.
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்வரும் கருத்தை மிகப் பொருத்தமாக உணர்த்தும் திருக்குறள் எது ?
கல்வியினும் உயர்ந்தது ஒன்றுமில்லை
A. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
B. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
C.கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
D. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக்கவும்.
A. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
B. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி
சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
C. கற்றதனா லாய பயனென்கோல் வாலறிவன்
நற்றால் தொழா அர் எனின்
D. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.
A. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
B. உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
C. எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
D. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு
படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கூற்றுக்குப் பொருத்தமான திருக்குறள் எது ?
A. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
B. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
C. காலத்திற் னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது
D. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.
மேற்கண்ட குறளில் கருமையாக்கப்பட்டுள்ள சொற்கள் எதனைக் குறிக்கின்றன?
A. பொறாமை , பேராசை , கோபம் , துரோகம்
B. கோபம் , பொறாமை , கடுஞ்சொல் , பேராசை
C. பொறாமை , பேராசை , கோபம் , கடுஞ்சொல்
D. கடுஞ்சொல் , பேராசை , துரோகம் , கோபம்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
குறளில் கோடிட்ட சொல்லின் பொருள் யாது ?
A. ஆசிரியர்கள்
B. மனிதர்கள்
C. குழந்தைகள்
D. பெற்றோர்கள்
சரியான இணையைத் தெரிவு செய்க
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும் இல்லையேல் பிறக்காமல் இருப்பதே சிறப்பு
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
உலகமும் எழுத்தும் இறைவனால் படைக்கப்பட்டவையாகும்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்
ஒரு செயலைச் செய்ய எண்ணுபவர்கள் உறுதியுடைவர்களாக இருந்தால் வெற்றியடைவர்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயெழுக்கம்
என்று இடும்பை தரும்.
நல்லொழுக்கமும் தீயொழுக்கமும் அனைவரிடமும் இருக்கும்.
தீயவர்களுடன் சேராதே என்று சிவபாலன் கூறினான். நான்தான் கேட்கவில்லை. திருடியதால் இப்பொழுது சிக்கிக் கொண்டேன்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பொருந்தும் சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.
A. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கன் களைவதாம் நட்பு
B. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்க லாதார்
C. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
D. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.
____________________________________________________
எண்ணுவம் என்பது இழுக்கு.
A. கற்றதனா பாய பயனின் கொல்
B. எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
C. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
D. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
இப்பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
A. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்
B. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
C. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
D. முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
