NEW
Font size
WorksheetsBT T1-செய்யுள் மொழியணி
Total questions: 20
Worksheet time: 10mins
கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளில் விடுபட்ட இடத்தை நிரப்பும் சொல் யாது?
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை
_________________ எனக்கேட்ட தாய்.
கெட்டிக்காரன்
சான்றோன்
நல்லவன்
பண்பாளன்
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை....என்ற குறளில் பெரிதுவக்கும் என்ற சொல்லின் பொருள் யாது?
பெரிதாக நினைக்கும்
போற்றப்படும்
மகிழ்ச்சியடையும்
புகழப்படும்
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை என தொடங்கும் திருக்குறளுக்கேற்ற சூழலைத் தெரிவு செய்க
பரிசளிப்பு விழாவில் பல பரிசுகளைப் பெற்ற மாறன் மகிழ்ச்சியுடன் தன் தாயை அணைத்துக் கொண்டான்
பரிசளிப்பு விழாவில் பல பரிசுகளைப் பெற்ற மாறனை அவன் தாய் மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டாள்
பரிசளிப்பு விழாவில் பல பரிசுகளைப் பெற்ற மாறனை அனைவரும் பாராட்டினர்
பரிசளிப்பு விழாவில் பல பரிசுகளைப் பெற்ற மாறனின் தாயாரை அனைவரும் பாராட்டினர்
வீட்டிற்கு வரும் விருந்தினரை_______________________ மலர வரவேற்க வேண்டும்
அகமும் முகமும்
உயர்வு தாழ்வு
தங்கு தடை
வாழையடி வாழை
நாம் எப்பொழுதும் மற்றவர்களிடம் _____________________ பாராமல் பழக வேண்டும்
கள்ளங்கபடு
உயர்வு தாழ்வு
அகமும் முகமும்
ஏட்டிக்குப் போட்டி
தாம் கூறும் கருத்துகளுக்கு ____________________ பேசிக்கொண்டிருந்த அந்த இளைஞர்களை அப்பெரியவர் கண்டித்தார்
வெட்டிப்பேச்சாக
ஏட்டிக்குப் போட்டியாக
கள்ளங்கபடாக
அரைப்படிப்பாக
தந்தையின் திடீர் மரணத்தால் கபிலன் _________________உடன் பள்ளியிலிருந்து விலகி குடும்பச் சுமையை ஏற்று வேலைக்குச் சென்றான்
தங்கு தடை
அரைப்படிப்பு
உயர்வு தாழ்வு
நோய் நொடி
___________________ கபிலனின் குடும்பத்தினர் கோயில் திருவிழாவில் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
வாழையடி வாழையாக
தங்கு தடையாக
ஏட்டிக்குப் போட்டியாக
வெட்டிப்பேச்சாக
வான்மதி ராணியுடன் ________________ பேசி நேரத்தைப் பயனற்ற வழியில் கழித்தாள்.
வெட்டிப்பேச்சு
தோள் கொடுத்து
தங்கு தடையாக
கள்ளங்கபடாக
முகிலன் அனைவரிடமும் _________________ இல்லாமல் பழகுவதால் பலரால்
விரும்பப்பட்டான்
அரைப்படிப்பு
நோய் நொடி
கள்ளங்கபடு
அகமும் புறமும்
________________ காணப்பட்ட இரமணனை அனைவரும் ஓய்வெடுக்கக் கூறினர்.
கள்ளங்கபடுடன்
தங்கு தடையுடன்
அரைபடிப்புடன்
நோய் நொடியுடன்
விடுமுறை நாட்களில் தந்தையின் பலசரக்குக் கடைக்குச் சென்று அவருக்குத்
_______________________ மாலனுக்குப் பிடித்த பொழுதுபோக்காகும்.
தங்கு தடையாக இருத்தல்
தோள் கொடுத்தல்
வெட்டிப்பேச்சு பேசுதல்
நோய் நொடி கொடுத்தல்
பாம்பைக் கண்டதும் கயல்விழியின் உடல் பயத்தால் _____________ வென ஆடியது.
கட கட
பர பர
வெட வெட
சட சட
மழைச்சாரல் அடித்ததால் ___________ வென்று ஆன தன் வீட்டு முற்றத்தைக் கழுவினாள் கமலா
கிடு கிடு
வெட வெட
கட கட
நச நச
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம் எனும் பழமொழிக்கு பொருள் யாது?
ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுய முயற்சியும் தேவை
ஆடத்தெரியாவிடில் ஆடக்கூடாது.
தன்னுடைய இயலாமையை மறைக்கப் பிறரைக் குறைச் சொல்லக்கூடாது.
ஆடுவதற்கு முன் கூடம் சரியாக உள்ளதா என பார்க்க வேண்டும்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான் எனும் பழமொழிக்குப் பொருள் யாது?
பல நூல்களைப் படிப்பதால் அறிஞனாகலாம்
ஒவ்வொருவரும் பல்வகை நூல்களைப் படித்தல் வேண்டும்
படிப்பதால் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் உருவாகும்
பண்டிதன் என்பவன் கண்டதையும் படித்தவன் ஆவான்
தன் கையே தனக்கு உதவி என்ற பழமொழிக்குப் பொருந்தும் சூழலை அடையாளம் காண்க.
கயல் ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாடங்களை விரைவாகச் செய்து முடித்தாள்
கனிமலர் பள்ளி விடுமுறையில் சமையலறையில் தன் தாய்க்கு உதவியாக
இருப்பாள்
கவின்முல்லை தன் வேலைகளுக்காக பிறரை எதிர்பார்க்காமல் சுயமாகச் செய்வாள்
கல்பனா தன் வீட்டுத் தோட்டத்தில்
பூச்செடிகளை நட்டு அலங்கரித்தாள்
கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருந்தும் பழமொழியைத் தெரிவு செய்க.
வாசிப்புப் பழக்கத்தைத் தன் பொழுதுபோக்காக கொண்டுள்ள சுகிர்தன் __________________________ என்பது போல பல விஷயங்களை அறிந்து வைத்துள்ளான்.
.
தன் கையே தனக்கு உதவி
கண்டதைக் கற்க பண்டிதனாவான்
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க
மணியும் ஒலியும் போல – மிகவும் பாதுகாப்பாக
இலைமறைகாய் போல – ஆற்றல் மறைந்திருத்தல்
பசுமரத்தாணிபோல – மிகவும் தெளிவாக
கீழ்க்காணும் சூழலுக்குப் பொருந்தும் உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
கல்பனாவும் கீர்த்தனாவும் நெருங்கிய தோழிகள். இருவரும் எங்குச் சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.
இலைமறைகாய் போல
பசுமரத்தாணிபோல
மணியும் ஒலியும் போல
