Worksheetsஆத்திசூடி
Total questions: 15
Worksheet time: 15mins
கீதா பயன்படுத்தாமல் வைத்திருக்கும் தன் உடையை ஏழ்மையில் வாடும் தன் அண்டை வீட்டுச் சிறுமிக்குக் கொடுப்பதை அவள் அம்மா வேண்டாமெனத் தடுத்தார்.
இச்சூழலுக்கு ஏற்ற ஆத்திசூடி என்ன?
அறம் செய்ய விரும்பு
ஏற்பது இகழ்ச்சி
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
கற்கக் கசடற கற்பவைக் கற்றப்பின் நிற்க அதற்கு தக எனும் திருக்குறளுக்கு ஒப்பாக பொருள் தரும் ஆத்திசூடி என்ன?
எண்ணுவது உயர்வு
கற்றது ஒழுகு
ஓய்தல் ஒழி
இளைத்தல் இகழ்ச்சி
தம்பி : நான் எத்தனை முறை போராடியும் என்னால் ஓட்டப்பந்தையத்தில் முதலிடம் பிடிக்கவே முடியவில்லை.
அண்ணன் : கவலைப்படாதே, தம்பி, நீ _______________ என்பதற்கேற்ப மேலும் முயற்சி செய். நிச்சயம் வெற்றி வெறுவாய்.
ஊக்கமது கைவிடேல்
எண்ணெழுத் திகழேல்
ஓதுவ தொழியேல்
உடையது விளம்பேல்
படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்.
ஐம்பொறி ஆட்சிகொள்
ஔடதம் குறை
ஊண்மிக விரும்பு
உடலினை உறுதி செய்.
ஈவது விலக்கேல்
கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
கொடுக்கக்கூடாது
கூறக்கூடாது
தடுக்கக்கூடாது
செல்லக்கூடாது
தன் வீட்டில் பலவகையான உணவு இருந்தும் வாசலில் பசி என்று வந்த நின்ற முதியவரை இரக்கமே இல்லாமல் விரட்டியடித்தாள் மாலா.
மேற்காணும் சூழலுக்குப் பொருத்தமான ஆத்திசூடி யாது?
இயல்வது கரவேல்
அறம் செய்ய விரும்பு
ஏற்பது இகழ்ச்சி
ஐயமிட்டு உண்
தர்மம் என்ற சொல்லுக்குப் பொருத்தமில்லாத ஆத்திசூடியைத் தேர்ந்தெடு.
அறம் செய்ய விரும்பு
ஐயமிட்டு உண்
இயல்வது கரவேல்
ஒப்புர ஒழுகு
'ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு' எனும் பழமொழியின் பொருளை உணர்த்தும் ஔவையாரின் வாக்கு யாது?
அறம் செய்ய விரும்பு
உடையது விளம்பேல்
ஆறுவது சினம்
ஈவது விளக்கேல்
"நான் இளம்வயதிலேயே எனக்கென்று பெரிய வீடு, மோட்டார் வண்டி, வங்கியில் சேமிப்பு அனைத்தும் வைத்துள்ளேன். என்னைப்போல் என்னைச் சுற்றி உள்ளவர் யாராலும் வாழ முடியாது'' என்றான் கதிரவன்.
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்.
ஊக்கமது கைவிடேல்
உடையது விளம்பேல்
ஔவியம் பேசேல்
ஓதுவ தொழியேல்
ஓய்தல் ஒழி
மேற்காணும் புதிய ஆத்திசூடியின் பொருள் என்ன?
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பதைத் தவிர்த்து விடு
கற்றவற்றிற்கேற்ப வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும்
அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்
பயத்தை விட்டொழிக்க வேண்டும்
ஆரம்ப பள்ளியில் கணினி போதனை முக்கியமான ஒரு பாடமாகப் போதிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் வலியுறுத்தினார்.
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்.
ஒப்புர ஒழுகு
ஔவியல் பேசேல்
ஓதுவ தொழியேல்
கற்றது ஒழுக
நான் என் இளமை காலத்தில் கற்காமல் நண்பர்களுடன் சுற்றித் திரிந்து வீண்டித்து விட்டேன். இப்போழுது அதற்காக வருந்துகிறேன்.
மேற்கண்ட சூழலுக்கு ஏற்ற ஆத்திசூடியைத் தேர்தெடு.
ஏறுபோல் நட
ஓய்தல் ஒழி
ஓதுவ தொழியேல்
காலம் அழியேல்
"வேற்றி வேண்டுமா போடுப் பாரடா எதிர்நீச்சல்"
இப்பாடல் வரிகள் விளக்கும் ஆத்திச்சூடி என்ன?
உடையது விளம்பேல்
ஏறுபோல் நட
ஓய்தல் ஒழி
ஊக்கமது கைவிடேல்
மற்றவரின் வளர்ச்சியைக் கொண்டு பொறாமைக் கொண்டு அதைத் தடுக்க எண்ணக் கூடாது
உடையது விளம்பேல்
ஔவியம் பேசேல்
ஈவது விலக்கேல்
இயல்வது கரவேல்
கொடுக்கப்பட்டுள்ள படத்திற்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியை தேர்ந்தெடு.
ஊண்மிக விரும்பு
எண்ணுவது உயர்வு
இளைத்தல் இகழ்ச்சி
ஓய்தல் ஒழி
