Worksheetsதமிழ் மொழி -திருக்குறள்
Total questions: 10
Worksheet time: 10mins
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்- எனும் குறளில் புண்ணுடையார் எனும் சொல் யாரை குறிக்கிறது?
கற்றவர்களை
கல்லாதவர்கள்
கண்ணில் காயம் உள்ளவரை
நன்றல்லது அன்றே மறப்பது நன்று எனும் வரிகளின் பொருள் யாது?
ஒருவர் நமக்கு செய்த நன்றியை மறப்பது நல்லது.
ஒருவர் நமக்கு செய்த தீமையை உடனே மறந்து விடுவது நல்லது
ஒருவர் நமக்கு செய்த தீமையை மறக்கக் கூடாது
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் _______________
தெய்வத்துள் வைக்கப் படும்.
வான்உறையும்
வையம்
வான் உலகத்தில்
அன்பின் மேன்மையை உணர்த்தும் குறள் யாது?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக
நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், கற்ற கல்விக்குத் தகுந்த படி நடந்து கொள்ள வேண்டும்
நூல்களைக் கற்றால் மட்டும் போதும்
கல்வி கற்கும்போது கவனமாக கற்க வேண்டியதில்லை.
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கூடாது என வலியுறுத்தும் குறள் யாது?
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
___________________________.
தீயினும் அஞ்சப் படும்
உயிரினும் ஓம்பப் படும்
நோக்கக் குழையும் விருந்து
வாய்மை எனப்படுவது என்ன?
பொய் கூறுதல்
யாருக்கும் தீங்கு விளைவிக்காத சொல்
அஞ்சப்படும் ஒரு செயல்
ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து - குறளின் பொருள் என்ன?
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் உதவும் தன்மை உடையது
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுடைய நண்பர்களுக்கும் ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் எனும் குறளை விளக்கும் சூழல் யாது?
கமலா யாருக்கும் தெரியாமல் தன் தோழியின் தொலைப்பேசியைத் திருடினாள்.
அம்மா நெருப்பில் கை வைத்தால் சுடும் என்று குழந்தையிடம் கூறினார்.
விமலன் பொய் பேசுவது தவறு என்பதால் தன் தந்தையிடம் உண்மையைக் கூறினான்.
