NEW
Font size
Worksheetsவேற்றுமை
Total questions: 10
Worksheet time: 5mins
‘பாலி’ தீவின் இயற்கைக்காட்சிகள் ____________________ மனத்தை ஈர்க்கும்.
காண்போரே
காண்போரின்
காண்போரை
காண்போரில்
அழகான _______________ அமைந்த தங்க நகை பார்க்க மிகவும் அற்புதமாக இருந்தது.
வேலைபாடுகளுக்கு
வேலைபாடுகளிடம்
வேலைபாடுகள்
வேலைபாடுகளோடு
ராமுவின் ____________________ அவனுடைய பெற்றோர் மிகவும் வேதனையடைந்தனர்
கவனக்குறைவால்
கவனக்குறைவுக்கு
கவனக்குறைவிடம்
கவனக்குறைவோடு
ஆசிரியரின் ________________ மாணவர்கள் மதிப்பு கொடுத்து நடந்து கொள்ளவேண்டும்.
பேச்சுக்கு
பேச்சில்
பேச்சால்
பேச்சை
கோபுர _______________ பார்த்தபோது தென்பட்ட காட்சி மனதைக் கவர்ந்தது.
உச்சிக்கு
உச்சி
உச்சியில்
உச்சியிலிருந்து
வெளிநாட்டினர் பலர் _____________________ வேலை தேடி வருகிறார்கள்.
சிங்கப்பூரில்
சிங்கப்பூரை
சிங்கப்பூருக்கு
சிங்கப்பூரோடு
திருமதி பார்வதி __________ தேவையான பொருள்களைச் சந்தையிலிருந்து வாங்கி வந்தார்.
விருந்தில்
விருந்துக்கு
விருந்தை
விருந்திலிருந்து
கீழே தடுக்கி விழுந்த பாட்டி மீண்டும் எழுந்து நிற்க அவருடைய __________ உதவியை நாடினார்.
பேத்தியால்
பேத்திக்கு
பேத்தியிடம்
பேத்தியின்
வேலைக்குச் செல்லும் திருமதி லலிதா தன் கைக்குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பைத் தன் மூத்த __________ ஒப்படைத்தார்.
மகளோடு
மகளுக்கு
மகளிடம்
மகளை
மின்தூக்கியில் மாட்டிக்கொண்ட என் தங்கை உடனே மீட்கப்பட்டாலும் அந்த _________ அவள் மீண்டு வரவில்லை.
அதிர்ச்சியிலிருந்து
அதிர்ச்சியை
அதிர்ச்சியுடன்
அதிர்ச்சிக்கு
