NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
ஐம்புலன்களைக் கொண்டு நன்மைச் சுற்றி நிகழும்
சம்பவங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுதல்.
1.மேற்காணும் கூற்று எந்த அறிவியல் திறனைக் குறிக்கின்றது ?
A. ஊகித்தல்
B. தொடர்புக் கொள்ளுதல்
C. முன் அனுமானித்தல்
D. உற்றறிதல்
Ø நேரத்தை அளத்தல்
Ø திரவத்தை அளத்தல்
Ø எடையை அளத்தல்
2.மேற்காணும் கூற்றுகள் எந்த அறிவியல் செயற்பாங்கு திறனைக் குறிக்கின்றது ?
A. வகைப்படுத்துதல்
B. தொடர்பு கொள்ளுதல்
C. அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
3. கீழ்காணும் பொருள்கள் நீளத்தை அளக்க உதவுகின்றன.ஒன்றைத் தவிர
A. நூல்
B. காகிதச் செருகி
C. சோதனைக் குழாய்
D. அடிக்கோல்
4. இவற்றுள் எது உயிரற்றவைக் குழுவில் பொருந்தவில்லை ?
A. ஆணி
B. மேசை
C. பூனை
D. பந்து
5. வேதியல் பொருள்களை இப்படியும் அழைப்பர்?
A. இரசாயனப் பொருள்கள்
B. கேமிக்கல் பொருள்கள்
C. நச்சு பொருள்கள்
6. மனிதனுக்கு 3 வகைப் பற்கள் உள்ளன.அவை...
A. மேல்வாய்ப்பகுதி, கீழ்வாய்ப்பகுதி, வெட்டுப்பல்
B. கடைவாய்ப்பல், வெட்டுப்பல், கீழ்வாய்ப்பகுதி
C. கோரைப்பல், வெட்டுப்பல், கடைவாய்ப்பல்
7. கீழ்காண்பவை அறிவியல் அறை விதிமுறைகள் ஆகும்.ஒன்றைத் தவிர
A. குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுதல்.
B. அறிவியல் அறை பொருள்களை வெளியில் எடுத்துச் செல்லுதல்.
C. ஆசிரியர் வழிகாட்டுதலைப் பின்பற்றி ஆய்வைச் செய்தல்.
8. கோரைப்பல்லின் பயனைத் தேர்ந்தெடு.
A. உணவுப் பண்டங்களைக் கடித்து கிழிக்க
B. உணவைக் கடித்து சிறு துண்டுகளாக்க
C. உணவை மென்று அரைக்க
9. எது நமது பல்லில் மிக உறுதியான பகுதி ?
A.தந்தினி
B. ஈறு
C. பற்சிப்பி
10. பற்களை குறைந்தது எத்தனை நிமிடம் துலக்க வேண்டும்?
A. 3 நிமிடம்
B. 5 நிமிடம்
C. 7 நிமிடம்
