NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் மீள்பார்வை நடவடிக்கை
Total questions: 11
Worksheet time: 11mins
Name
Class
Date
1.
கூற்றை வாசிக்கவும்.
நிறைய மிருகங்கள் பெரிய கூட்டமாகவும் சிறிய கூட்டமாகவும் வாழ்கின்றது, அவை நலமுடன் வாழ ஒற்றுமையாக செயல்படுகிறது.
மேலே உள்ள கூற்று மிருகங்கள் கூட்டமாக வாழ்வதற்கான காரணத்தை உணர்த்துகிறது. கீழ்காண்பவனவற்றுள் எந்த மிருகம் மேலே உள்ள கரணத்தின்படி சிறு கூட்டமாக வாழ்கின்றது.
நிறைய மிருகங்கள் பெரிய கூட்டமாகவும் சிறிய கூட்டமாகவும் வாழ்கின்றது, அவை நலமுடன் வாழ ஒற்றுமையாக செயல்படுகிறது.
மேலே உள்ள கூற்று மிருகங்கள் கூட்டமாக வாழ்வதற்கான காரணத்தை உணர்த்துகிறது. கீழ்காண்பவனவற்றுள் எந்த மிருகம் மேலே உள்ள கரணத்தின்படி சிறு கூட்டமாக வாழ்கின்றது.
a)
சிங்கம்
b)
வரிக் குதிரை
c)
கிளை மான்
d)
கடற்சிங்கம்
2.
பின்வருவனவற்றுள் எது உடை மாட்டியைத் துருப்பிடிப்பதலிருந்து தவிர்க்கச் சிறந்த வழியாகும்?
a)
சாயம் பூசுதல்
b)
ஈய முலாம் பூசுதல்
c)
எண்ணெய் பூசுதல்
d)
நெகிழி உறையிடுதல்
3.
இரவு பகல் ஏற்படுவதன் காரணம்...
a)
பூமி தன் அச்சில் முழுமையாய் சுற்றிவர 24 மணி நேரம் ஆகும்.
b)
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் நிலவின் கலைகள் ஏற்படுகின்றன.
c)
பூமி தன் அச்சில் சுழன்று கொண்டே சூரியனைச் சுற்றி வருவதால்.
d)
நிலவு பூமியின் இயற்கைத் துணைக்கோள்.
4.
பின்வரும் நிகழ்வுகளில், எது நிலவு பூமியைச் சுற்றி வருவதால் ஏற்படுகிறது?
a)
இரவு பகல்
b)
நிலவின் கலைகள்
c)
நிலவு பூமியின் அருகில்
d)
பூமியின் இருப்பிடத்திலிருந்து சூரியன் மற்றும் நிலவின் தூரம் ஒரே அளவில் இருப்பதால்
5.
ஏன் வண்ணத்துப்பூச்சி இலைக்கடியில் முட்டை இடுகிறது.
a)
சூரிய ஒளியிலிருந்து தவிர்க்க
b)
பிராணிகள் சாப்பிடுவதிலிருந்து தவிர்க்க
c)
இலையிலிருந்து உணவைப் பெறுவதற்கு
d)
அனைத்து முட்டைகளும் குஞ்சுப் பொரிப்பதை உறுதிச் செய்ய
6.
வெப்பநிலை என்றால் என்ன?
a)
ஒரு வகை சக்தி
b)
ஒரு பொருளின் வெப்பம் மற்றும் குளிர் நிலையின் அளவு
c)
பொருளை வெப்பப்படுத்தும்போது விரிவடைதல்
d)
பொருளை குளிர்ப்படுத்தும்போது சுருங்குதல்
7.
பின்வருவனவற்றுள் எது தரப்படுத்தப்பட்ட அளவின் பயன்பாட்டின் நோக்கமாகாது?
a)
ஒரே அளவான முடிவைப் பெருவதற்கு
b)
ஒரு பொருளின் நீளத்தைச் சரியாக அளப்பதற்கு
c)
போட்டியின் நேரத்தை நியாயமாக அளப்பதற்கு
d)
பொருட்களை பல வடிவங்களில் பெருவதற்கு
8.
தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்' என்பதன் பொருள் என்ன?
a)
ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணுதல்
b)
உயிரினங்கள் தங்கள் இணைகளுக்கு ஏற்ப துலங்குதல்
c)
தூண்டல் ஏற்படும் போது உயிரினங்கள் துலங்குவது
d)
உயிரினங்கள் கழிவுப் பொருட்களை அகற்றுவது
9.
காவியா சூரிய ஒளியுள்ள ஓர் இடத்தில் செடி ஒன்றை வளர்க்கவிரும்பினாள். ஆனால் மிகக்குறைந்த நீர்வளமே இருந்தது. எந்தத் தன்மைகொண்ட செடி அவ்விடத்தில் நடுவதற்கு பொருத்தமில்லை?
a)
நீண்ட வேர்
b)
அதிக இலைகள்
c)
சிறிய அளவைக்கொண்ட இலைகள்
d)
நீரைச் சேகரிக்கக்கூடிய தண்டு
10.
உணவு வலை என்றால் ________________________ .
a)
ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத வெவ்வேறு உணவுச்சங்கிலி
b)
இருக்கின்ற பலவகை உணவு மூலங்களிலிருந்து உருவானது
c)
இணைக்கப்பட்ட பல உணவுச்சங்கிலிகள்
d)
விலங்குகளும் தாவரங்களும் உயிர் வாழ்வதற்கான தொடர்பு
11.
மன்மத ஈப்பொறிச் செடி என்ன தூண்டலுக்குத் துலங்கும்?
a)
காற்று
b)
முகர்தல்
c)
தொடும்
d)
ஒளி
Reset
