wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி - ஆண்டு 6 (மீள்பார்வை) பாகம் 2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அருணா காலையில் வாசலில் அழகிய ____________ போட்டாள்.

a)

கோளம்

b)

கோலம்

2.

மதிவாணன் வங்கிக்குச் செல்லும் ________ தெரியாமல் தடுமாறினான்.

a)

வழி

b)

வலி

3.

மீனவன் கடலில் ___________ வீசி மீன் பிடித்தான்.

a)

வளை

b)

வலை

4.

கோபியின் காலில் _______________ குத்தியதால் அவன் கத்தினான்.

a)

முல்

b)

முள்

5.

தினமும் _____________ உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

a)

குழித்து

b)

குளித்து

6.

பொங்கல் இனிப்பாக இருக்க அம்மா அதில் _______________ சேர்த்தார்.

a)

வெள்ளம்

b)

வெல்லம்

7.

நேற்று சிரம்பானில் கனத்த __________ பெய்தது.

a)

மலை

b)

மழை

8.

திருவள்ளுவர் இயற்றிய __________________ மிகவும் பயனுள்ளவை.

a)

குறல்கள்

b)

குறள்கள்

9.

திருடன் கம்பியை________________ வீட்டினுள் நுழைந்தான்.

a)

வலைத்து

b)

வளைத்து

10.

வீட்டின் சுவரில் ______________ ஒன்று இருந்தது.

a)

பல்லி

b)

பள்ளி

11.

______________ இலையில் உணவு உண்ணலாம்.

a)

வாலை

b)

வாழை

12.

கொக்கு தனது _________________ மீனைக் கொத்தித் தின்றது.

a)

அழகால்

b)

அலகால்

13.

_______________ மாடு வண்டி இழுக்கும்.

a)

காலை

b)

காளை

14.

கபிலன் ________________ கிடந்த புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்தான்.

a)

களைந்து

b)

கலைந்து

15.

தோட்டக்காரர் செடி நடுவதற்குக்_______________ தோண்டினார்.

a)

குளி

b)

குழி

16.

_________________ மலர் குளத்தில் பூக்கும்.

a)

அல்லி

b)

அள்ளி

17.

அம்மா ________________ செய்து இறைவனுக்குப் படைத்தார்.

a)

பொங்கல்

b)

பொங்கள்

18.

உடல் நலமில்லாத வேலன் உடல்_____________த்துக் காணப்பட்டான்.

a)

இழை

b)

இளை

19.

மாமரத்தின்_____________யில் ஓர் அணில் ஓடியது.

a)

கிலை

b)

கிளை

20.

அரசர்___________ ஏந்திப் போருக்குப் புறப்பட்டார்.

a)

வால்

b)

வாள்