WorksheetsGrade 6th LR - Tamil Aug 17th 2021
Total questions: 20
Worksheet time: 11mins
1. முயற்சி உடையவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
வறுமையானவர்கள்
துன்பத்தைப் போக்க கூடியவர்கள்
தோல்வியாளர்கள்
முயற்சி இல்லாதவன் எதற்கு ஒப்பாக கருதப்படுகிறான் ?
*கடவுள்
*பிணம்
*ஞானிகள்
முயற்சி இல்லாதவர் பெறும் துன்பம் யாது ?
வறுமை
செழுமை
உயர்பதவி
1.தந்தையின் கடமை என்ன ?
அ) உணவு தருவது
ஆ) உடை தருவது
இ) கல்வி தருவது
ஈ) அனைத்தும் தருவது
மாணவர்கள் யாருக்கெல்லாம் கடமைப்பட்டவர்கள் ?
அரசிற்கு
நாட்டிற்கு
வீட்டிற்கு
அருகில் இருப்பவர்களுக்கு
எவ்வெவ் இடங்களில் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் ?
அ)வகுப்பறை
ஆ)சந்தை
இ)விழாக்கள்
ஈ)பேருந்து நிறுத்தம்
நீங்கள் எப்படிப்பட்ட
மாணவர்களாக இருக்க விரும்புகிறீர்கள்?
அ)சிறந்த மாணவர்கள்
ஆ)பயனற்ற மாணவர்கள்
ஆண்டவன் வழங்கியுள்ள அருட்கொடைகளில் சிறந்தது?
அறிவு
அழகு
பொருள்
வலிமை
ஒருவனது அழிவு எப்பொழுது தெளிவு படும்?
கற்கும் போது
கல்லாதபோது
பிறருக்கு கற்பிக்கும் போது
பிறர் போற்றும்
தணல் என்ற சொல்லிக் பொருள்
தண்ணீர் நீதி
வெந்நீர்
நெருப்பு
ஊற்று நீர்
கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி செய்யும் முகமாகவும் மனித உரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படுத்தும் முகமாக இருத்தல் வேண்டும். அது சகல நாடுகள் இடையேயும் இனம் அல்லது மத குழுக்களிடையே மன ஒத்திசைவு மன உணர்வு தோழமை ஆகியவற்றை மேம்படுத்துதல் வேண்டும்.
1) கல்வி சகல நாடுகள் இடையேயு என்ன வளர்க்க வேண்டும்?
மரியாதை
நற்பண்பு
தோழமை
கல்வி என்பது மனிதனின் ___________ முழுவதுமாக விருத்தி செய்யும்
ஆளுமை
பண்பு
நன்மை
புறநானூறு சங்க கால அரசியல் பண்பாடு குறித்த வரலாற்றை எழுத பெரிதும் துணைபுரிகிறது. இது சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். தமிழ் மன்னர்கள் நடத்திய போர்கள் மக்களின் ஒழுக்க நிலை மன்னர்களின் செயல்கள் குறித்த பல்வேறு செய்திகளை இந்நூலில் காணப்படுகின்றன. புலவர்களுக்கும் அரசர்களுக்குமான உறவு மிக நெருக்கமாக இருந்தது சங்ககால மக்கள் சிவன் கண்ணன் முருகன் ஆகிய தெய்வங்களை வணங்கினர்.
தமிழ் மன்னர்கள் நிகழ்த்திய போர்கள் பற்றி குறிப்பிடும் நூல் எது?
மதுரைக்காஞ்சி
புறநானூறு
பதிற்றுப்பத்து
புறநானூறு எந்த வகை இலக்கியம்?
காப்பியம்
பக்தி இலக்கியம்
சங்ககால இலக்கியம்
புலவர்களுக்கும் மன்னர்களுக்கும் இடையே உறவு எப்படி இருந்தது
நெருக்கமாக
எதிராக
சுமுகமாக
சங்ககால மக்கள் எந்த தெய்வத்தை வழிபட்டனர்?
சிவன்
இயேசு
புத்தர்
பொங்கல் விழாவானது தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இது மூன்று நாள் கொண்டாடப்படும் விழாவாகும். பண்டிகையின் முதல் நாள் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபடுவர். இரண்டாம் நாள் நமக்கு உணவு தரும் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கின்ற மாடுகளை கடவுளாக நினைத்து பொங்கலிட்டு வழிபடுவர் பொங்கலின் முன்றாம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் விழா எது?
போகி
பொங்கல்
தீபாவளி
மூன்றாம் நாள் கொண்டாடப்படும் பொங்கலின் பெயர் என்ன
காணும் பொங்கல்
சூரியன் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
பொங்கல் விழாவின் இரண்டாம் நாள் எதற்கு பொங்கலிட்டு வழிபடுவர்
யானை
கரடி
மாடு
பொங்கல் திருநாள் எத்தனை நாள் கொண்டாடப்படும் விழாவாகும்
4
5
3
