wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 4: மனிதர்களின் வாழ்க்கைச் செயற்பாங்கு

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

படத்தில் காணும் உறுப்பு வெளியிடும் கழிவு யாது?

a)

வியர்வை

b)

சிறுநீர்

c)

கரிவளி

d)

உயிர்வளி

2.

படம் வெளியாக்கும் கழிவுப்பொருள் யாது?

a)

வியர்வை

b)

சிறுநீர்

c)

உயிர்வளி

d)

கரிவளி

3.

மனிதன் உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறான். இச்செயற்பாங்கு நடைபெறவில்லை என்றால் என்ன நிகழும்?

a)

உடலில் பல நோய்கள் ஏற்படும்.

b)

உடல் அக்கழிவுகளை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளும்.

c)

உடல் பருமன் ஏற்படும்.

d)

உடல் மெலிந்து காணப்படும்.

4.

நீர், தாது உப்புகள் மற்றும் யூரியா ஆகியவற்றைக் கொண்டிருக்கும் கழிவுகள் யாவை?

a)

சிறுநீர் மட்டும்

b)

சிறுநீர் மற்றும் வியர்வை

c)

சுவாசக் காற்று

d)

வியர்வை மட்டும்

5.

படத்தில் காணும் உறுப்பிலிருந்து அகற்றப்படும் கழிவுகள் யாவை?

a)

யூரியா

b)

கரிவளி

c)

நீராவி

d)

உயிர்வளி

6.

எது படத்தோடு தொடர்புடைய சரியான கூற்று?

a)

காற்றை உள்ளிழுத்தல்

b)

காற்றை வெளியிடுதல்

c)

காற்றை உள்ளிழுக்கும் போது நுரையீரல் மேல் எழும்பி விரிவடையும்.

d)

காற்றை உள்ளிழுக்கும் போது நுரையீரல் சுருங்கும்.

7.

நாம் காற்றை உள்ளிழுக்கும் போது பொருத்தமான உறுப்புகளை அடையாளம் இடுக.

a)

மூக்கு ---> வாய் ---> நுரையீரல்

b)

மூக்கு ---> மூச்சுக்குழாய் ---> நுரையீரல்

c)

நுரையீரல்---> மூச்சுக்குழாய் ---> வாய்

d)

நுரையீரல் ---> வாய் ---> மூக்கு

8.

படத்தில் உள்ள உறுப்பு எதனை விளக்குகிறது?

a)

மலம் கழித்தல்

b)

கழிவுகளை அகற்றுதல்

c)

சுவாசித்தல்

d)

தூண்டலுக்குத் துலங்குதல்

9.

மலத்தை அதிக நேரம் அடக்குவதால் ஏற்படும் விளைவு என்ன?

a)

மலச்சிக்கல்

b)

குடல் புற்றுநோய்

c)

வயிற்றுவலி

d)

கண் வலி

10.

நமது குடலில் என்ன நடக்கின்றது?

a)

உணவில் உள்ள சத்துகள் உறிஞ்சப்படும்.

b)

உணவு அரைக்கப்படும்

c)

உணவைச் சேமிக்கும்

d)

உணவில் உள்ள சக்கைகள் மேலும் அரைக்கப்படும்.

11.

எந்நடவடிக்கையை மேற்கொள்ளும் போது சுவாச விகிதம் அதிகமாக இருக்கும்?

a)

நடத்தல்

b)

தூங்குதல்

c)

படித்தல்

d)

மெதுவோட்டம் ஓடுதல்

12.

"நமக்கு அதிக உயிர்வளி தேவைப்படும் போது சுவாச விகிதம் அதிகரிக்கும்"


மேற்காணும் கூற்றிற்குப் பொருத்தமான கருதுகோள் என்ன?

a)

சுவாச விகிதம் அதிகரித்தால் அதிக உயிர்வளி தேவைப்படும்.

b)

தேவைப்படும் உயிர்வளி அதிகரித்தால் சுவாச விகிதமும் அதிகரிக்கும்.

c)

கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் சுவாச விகிதம் அதிகரிக்கும்.

d)

சக்தி அதிக தேவைப்பட்டால் சுவாச விகிதம் அதிகரிக்கும்.

13.

விலா எலும்புகளின் பயன் என்ன?

a)

நுரையீரல் மற்றும் பிற உறுப்புகளைப் பாதுகாக்கின்றது.

b)

சிறுநீரகத்தைப் பாதுகாக்கின்றது.

c)

மூளையைப் பாதுகாக்கின்றது.

d)

நாம் நிலைத்தன்மையோடு நடக்க உதவுகிறது.

14.

நுரையீரலுக்குக் கீழ்ப்பகுதியில் உள்ள மென்றகடின் (diaphragm) பயன் என்ன?

a)

நுரையீரலின் கீழ்ப்பகுதியைப் பாதுகாக்கின்றது.

b)

நுரையீரலின் காற்றழுத்தத்தைப் பாதுகாக்கிறது.

c)

இருதயத்தைப் பாதுகாக்கிறது.

d)

இரத்த அழுத்தத்தைப் பாதுகாக்கிறது.

15.

எவ்வாறு மலச்சிக்கலைத் தடுக்கலாம்?

a)

அதிக புரதச் சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

b)

அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

c)

அதிக மாவுச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

d)

கொழுப்புச்சத்துள்ள உணவுகளை அதிக உண்ண வேண்டும்.

16.

கீழ்க்காணும் பழக்கங்களில் எது நாம் தவிர்க்க வேண்டியது அல்ல?

a)

புகைப்பிடித்தல்

b)

மது அருந்துதல்

c)

போதைப்பொருளுக்கு அடிமையாகுதல்.

d)

சத்துள்ள உணவை உண்ணுதல்

17.

கீழ்க்காண்பனவற்றுள் எது பரம்பரைக் கூறு அல்ல?

a)
b)
c)
d)
18.

பரம்பரைக் கூறுகள் என்றால் என்ன?

a)

தாய் தந்தையிடமிருந்து மாறுபட்ட கூறுகள்

b)

பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியிடமிருந்து கிடைக்கப்பட்ட கூறுகள்

c)

மரபணு பிறழ்வால் (mutation) ஏற்படும் கூறுகள்

d)

சுற்றுச் சூழலுக்கு ஏற்ப மாறும் கூறுகள்

19.

அசாரின் தாய் தந்தைக்குச் சுருள் முடி இல்லை. ஆனால் அசாருக்குச் சுருள் முடி உள்ளது. இது எவ்வாறு சாத்தியமாகும்?

a)

மரபணு பிறழ்வு ஏற்பட்டு இருக்கலாம்.

b)

தாத்தா பாட்டியிடம் இருந்து பெற்றிருக்கலாம்.

c)

சுற்றுச் சூழலின் தாக்கம்

d)

இரசாயனத்தின் தாக்கம்.

20.

படம் புகைப்பவரின் நுரையீரலையும் புகைக்காதவரின் நுரையீரலையும் காட்டுகின்றது. ஏன் புகைப்பவரின் நுரையீரல் கருப்பாக தென்படுகிறது?

a)

தார் படிந்துள்ளதால்

b)

நெருப்பில் கருகி விட்டது

c)

பழுதடைந்ததால்

d)

கரி படிந்துள்ளது

21.

X என அடையாளமிடப்பட்ட உறுப்பு என்ன?

a)

மூக்கு

b)

வாய்

c)

மூச்சுக்குழாய்

d)

நுரையீரல்

22.

படம் எதனை உணர்த்துகிறது?

a)

மனிதன் வெப்பத்தைத் தாங்க மாட்டான்.

b)

மனிதன் தூண்டலுக்குத் துலங்குகிறான்.

c)

மனிதன் வெப்பத்தைத் தொடுகிறான்.

d)

சட்டியின் பிடி இரும்பால் ஆனது.

23.

எப்படம் மனிதன் தூண்டலுக்குத் துலங்குகிறான் என்பதை உணர்த்தவில்லை?

a)
b)
c)
d)
24.

வெண்சுருட்டு புகையில் 7000 ஆபத்தான இரசாயனப் பொருட்கள் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. கீழ்க்காண்பனவற்றுள் எவை வெண்சுருட்டில் உள்ள ஆபத்தான பொருட்கள்?

a)

நிக்கோத்தின் (nicotine)

b)

தார் (tar)

c)

அம்மோனியா (ammonia)

d)

பென்சின் (benzene)

e)

அர்செனிக் (arsenic)

25.

மதுபானம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் யாவை?

a)

நேராக நடக்க இயலாது

b)

தூண்டலுக்குத் தாமதமாகத் துலங்குதல்

c)

பார்வை மங்களாகி விடும்

d)

நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்.

26.

எவை போதைப்பொருள் வகை அல்ல?

a)

கொக்கைன்

b)

ஹெராயின்

c)

மீதாம்பெட்டமின்

d)

தர்பூசனிச்சாறு

e)

பீட்சா

27.

படத்தில் காட்டப்படும் பழக்கம் எவ்வகையான பாதிப்பை ஏற்படுத்தும்?

a)

கற்பனை உலகில் வாழ்வர்.

b)

நுரையீரல் புற்றுநோய்

c)

உடல் பருமன்

d)

பல் சொத்தை

28.

மதுபானம் அருந்துபவர்கள் ஏன் அதிகம் விபத்தை ஏற்படுத்துகின்றனர்?

a)

வாகனத்தில் உறங்கிவிடுதல்

b)

கருணை உள்ளம் இல்லை

c)

தூண்டலுக்குத் தாமதமாக துலங்குவதால்

d)

இருமல் வருவதால்

29.

அதிக வெப்பத்தில் ஏன் வியர்க்கின்றது?

a)

உடலைக் குளிரச் செய்ய

b)

கழிவை அகற்ற

c)

உடலில் உள்ள உப்பை அகற்ற

d)

உடலில் உள்ள நீரை அகற்ற

30.

உடல் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

a)

உடற்பயிற்சி செய்தல்

b)

மதுபானம் அருந்துதல்

c)

சமசத்துணவு உண்ணுதல்

d)

அதிகம் காப்பி அருந்துதல்