wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Bahasa Tamil

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
சொல்லுக்கு ஏற்ற சரியான பொருளை எழுதுக .
பூரிப்பு
a)
மகிழ்ச்சி
b)
கோபம் 
c)
உள்ளம் 
d)
மெய்
2.
உலகநீதியின்  பொருளைக் கண்டறிக .
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
a)
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலை நிறுத்த முயல வேண்டாம் 
b)
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது
3.
இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ 'சேர்த்து எழுதுக .
மீனவன் + ஐ =
a)
மீனவன் 
b)
மீனவனன்
c)
மீனவனை
d)
மீனவனுக்கு
4.
பின்வரும் சொல் எவ்வகை வேற்றுமையைக் கொண்டுள்ளன .
சொல்லை 
a)
முதலாம் வேற்றுமை 
b)
இரண்டாம் வேற்றுமை 
5.
ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டறிக .
பூமி 
a)
பார் 
b)
கடவுள் 
c)
திங்கள் 
d)
மகிழ்ச்சி 
6.
'இன்னாச்சொல் ' என்ற சொல்லுக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.
a)
பேராசை 
b)
கடுஞ்சொல் 
c)
கோபம்
d)
பேராசை 
7.
சேர்த்து எழுதுக 
குயவன் + ஆல்
a)
குயவனின் 
b)
குயவனால் 
c)
குயவன் 
d)
குயவனுக்கு 
8.
விருகதைக்கு ஏற்ற பதிலைக் கண்டறிக .
கயிற்றைச் சுற்றி வீசினால் நடனம் ஆடுவான் ?
a)
நரி 
b)
பம்பரம் 
c)
தேங்காய் 
d)
வளையல் 
9.
ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க .
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
a)
ஆனால்
b)
ஏனெனில் 
c)
ஏனென்றால் 
d)
ஆகையால் 
10.
சரியான ர,ற கரச் சொல்லைத் தெரிவு செய்க.
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
a)
இறை 
b)
இரை
11.

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.


பலத்த காற்றினால் மரம் சாய்ந்தது.

a)

பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்தன.

b)

பலத்த காற்றினால் மரம்கள் சாய்ந்தன

c)

பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்தது.

12.

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.


இளைஞன் பேரங்காடி சென்றான்.

a)

இளைஞர்கள் பேரங்காடிக்குச் சென்றனர்.

b)

இளைஞர்கள் பேரங்காடிக்குச் சென்றான்.

c)

இளைஞன் பேரங்காடிக்குச் சென்றார்கள்.

13.

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.


ஆசிரியர் அழ. வள்ளியப்பாவின் குழந்தை பாடலைப் பாடினார்.

a)

ஆசிரியர்கள் அழ.வள்ளியப்பாவின் குழந்தை பாடலைப் பாடினார்.

b)

ஆசிரியர்கள் அழ.வள்ளியப்பாவின் குழந்தை பாடல்களைப் பாடினார்.

c)

ஆசிரியர்கள் அழ.வள்ளியப்பாவின் குழந்தை பாடல்களைப் பாடினர்.

14.

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.


சிங்கம் மானை வேட்டையாடியது.

a)

சிங்கம்கள் மானை வேட்டையாடின.

b)

சிங்கங்கள் மானை வேட்டையாடின.

c)

சிங்கங்கள் மானை வேட்டையாடியது.

15.

படத்தின் துணையுடன் சரியான ஒருமை பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

பூனைகள் வரிசையாக நின்றது.

b)

பூனைகள் வரிசையாக நின்றன.

c)

பூனை வரிசையாக நின்றன.