wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சக்தி@ப.துளசி

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

பின்வருபவைகளுள் எது சக்தியினால் ஏற்படும் மாற்றம் அல்ல?

a)

பொருள்களின் வடிவம்

b)

பொருள்களின் எடை

c)

பொருள்களின் நகரும் வேகம்

d)

பொருள்களின் நகரும் திசை

2.

பின்வருபவைகளுள் எது உராய்வினால் ஏற்படும் நன்மை அல்ல?

a)

பொருளின் நகர்ச்சியைத் தாமதப்படுத்துகின்றது

b)

பொருளின் தேய்மானத்தை ஏற்படுத்துகிறது

c)

பொருளின் வெப்பத்தை உண்டாக்குகிறது

d)

பொருளின் நகரும் திசையை மாற்றுகிறது

3.

காலணிகளில் பூப்போன்ற அமைப்பு இருப்பதனால் என்ன நன்மை?

a)

எளிதாக நடக்க முடிகிறது

b)

வேகமாக நடக்க முடிகிறது

c)

வழுக்கி விழாமல் நடக்க முடிகிறது

d)

இதமாக நடக்க முடிகிறது

4.

மேலே தூக்கி எறியப்படும் பந்து மீண்டும் தரையில் வந்து விழுவதற்கு எந்தச் சக்தி காரணமாகிறது?

a)

காந்த சக்தி

b)

இழுக்கும் சக்தி

c)

உராய்வுச் சக்தி

d)

புவி ஈர்ப்புச் சக்தி

5.

பின்வரும் நடவடிக்கைகளில் எது சக்தியின் வகையினைச் சேராது?

a)

மரத்தைத் தூக்குதல்

b)

கதவைத் திறத்தல்

c)

பல்லைப் பிடுங்குதல்

d)

குப்பைகளை எரித்தல்

6.

கண்ணாடி போன்ற மேற்பரப்புகளில் நகரும் பொருள் மிக எளிதாக நகருகிறது. காரணம்...

a)

அது மிகவும் வழவழப்பாக இருக்கும்

b)

அது மிகவும் பளபளப்பாக இருக்கும்

c)

அதன் மேற்பரப்பில் உராய்வு குறைவு

d)

அதன் மேற்பரப்பில் உராய்வு அதிகம்

7.

மோட்டார் வண்டிகளின் சக்கரங்களின் உராய்வை அதிகரிக்க, பின்வருமாறு அமைக்கப்படுகின்றன.

a)

சக்கரத்தின் மேற்பரப்பு வழவழப்பாக இருக்கும்

b)

சக்கரத்தில் மேடு பள்ளங்கள் இருக்கும்

c)

தரை வழவழப்பாக இருக்கும்

d)

சக்கரம் உருண்டையாக இருக்கும்

8.

பின்வருபவைகளுள் எவை உராய்வினைக் குறைக்க உதவும்?

a)

எண்ணெய்

b)

மசகு

c)

இரும்பு

d)

திருகு ஆணி

9.

எவை தள்ளும் சக்தியைக் குறிக்கின்றன?

a)

பந்து உதைத்தல்

b)

துணியைப் பிழிதல்

c)

சைக்கிளோட்டுதல்

d)

கதவைத் திறத்தல்

10.

உராய்வுச் சக்தி எவற்றைச் சார்ந்துள்ளது?

a)

பொருளின் வடிவம்

b)

பொருளின் எடை

c)

பொருளின் மேற்பரப்பு

d)

பொருளின் நிலை

11.

உருண்டோடும் பந்தை நிறுத்த, சக்தியை எங்குப் பயன்படுத்த வேண்டும்?

a)

பந்து உருண்டோடும் திசையை நோக்கி

b)

பந்து உருண்டோடி வரும் திசைக்கு எதிராக

c)

பந்தின் எல்லாத் திசைகளிலும்

d)

பந்தின் நடுப்பாகத்தில்

12.

தேசன் 2400 மீட்டர் தூரத்தை, 30 நிமிடத்தில் ஓடி முடித்தான். அவனின் வேகத்தைக் கண்டுபிடி.

a)

80மீ/நி

b)

800மீ/நி

c)

60மீ/நி

d)

600மீ/நி

13.

பின்வரும் நடவடிக்கைகளுள் எதற்கு உராய்வு தேவைப்படாது?

a)

ஓடும் சைக்கிளை நிறுத்துவதற்கு

b)

பளிங்கு தரையில் நடப்பதற்கு

c)

தீக்குச்சி எரிவதற்கு

d)

சாலையில் வாகனம் செல்ல

14.

பின்வருபவைகளில் எது சரியாக ஜோடி சேர்க்கப்பட்டுள்ளது?

a)

மேசையைத் தட்டுதல் - இழுக்கும் சக்தி

b)

ஆணியைப் பிடுங்குதல் - தள்ளும் சக்தி

c)

கயிற்றை இழுத்தல் - தள்ளும் சக்தி

d)

கல்லைத் தூக்குதல் - இழுக்கும் சக்தி

15.

சொரசொரப்பான மேசையின் மேற்பரப்பைப் பின்வரும் ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம் வழவழப்பாகலாம்.

a)

பசை தடவுதல்

b)

நீரை ஊற்றுதல்

c)

மணலைக் கொட்டுதல்

d)

எண்ணெய் தடவுதல்