wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 15

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகளில் ஜ - அடங்கும்.

a)

ஆமாம்

b)

இல்லை

c)

உறுதியாக தெரியவில்லை

2.

வன்மையாக ஒலிக்கப்படக்கூடிய எழுத்துகள் யாவை?

a)

ய் , ர் ,ல், வ் ,ழ், ள்

b)

ங் , ஞ் , ண் , ந், ம், ன்

c)

அ , இ, உ,எ, ஒ, ஒள

d)

க் ,ச், ட், த், ப், ற்

3.

மென்மையாக ஒலிக்கப்படுவன யாவை ?

a)

ங் , ஞ் , ண் , ந் , ம் , ன்

b)

க் , ச், ட், த் , ப் , ற்

c)

ஆ , ஈ, ஊ , ஏ, ஐ , ஓ, ஒள

4.

உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

a)

72

b)

90

c)

126

d)

12

e)

216

5.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்வதால் பிறக்கின்ற எழுத்தே ..................

a)

வல்லினம்

b)

மெல்லினம்

c)

இடையினம்

d)

உயிர்மெய் குறில்

e)

உயிர் எழுத்துகள்

6.

இடையின உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

18

c)

72

d)

90

e)

126

7.

பேசுபவர் முன்னால் நின்று கேட்பவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் குறிக்கும் பெயர்கள் _________ எனப்படும்

a)

தன்னிலை

b)

முன்னிலை

c)

படர்க்கை

8.

பெயர்ச்சொல்லின் வகைகளில் அடங்காதது எது ?

a)

பண்புப் பெயர்

b)

இடப்பெயர்

c)

காலப்பெயர்

d)

தொகுதிப்பெயர்

e)

சினைப்பெயர்

9.

ஆறாம் வேற்றுமை உருபு யாது ?

a)

ஆல் , ஆன், ஒடு , ஓடு, உடன்

b)

கு

c)

இன், இருந்து,இல், நின்று

d)

அது , உடைய

e)

உருபு இல்லை

10.

பொருள் முற்றுப்பெறாத வினைச்சொல் _________ எனப்படும்

a)

வினைமுற்று

b)

செய்வினை

c)

அடை

d)

எச்சம்

11.

ஜெய் கீத்தனாவின் அழகான ஓவியம் திருடப்பட்டது. வாக்கியத்தில் இடப்பெற்ற எச்சம் யாது ?

a)

பெயரெச்சம் : அழகான ஓவியம்

b)

வினையெச்சம் : ஓவியம் திருடப்பட்டது

12.

கொடுக்கப்பட்டுள்ள செய்தி வாக்கியத்திற்கு ஏற்ற வினா வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அரண்மனை காவலன் வழிப்போக்கன் ஒருவனைச் சிறையின் அடைத்தான்.

a)

அரண்மனை காவல் ஏன் வழிப்போக்கனைச் சிறையில் அடைத்தான்?

b)

வழிப்போக்கன் எப்படி சிறையில் அடைக்கப்பட்டான்?

c)

அரண்மனை காவலன் யாரைச் சிறையில் அடைத்தான்?

d)

அரண்மனை காவலன் எங்கு அடைக்கப்பட்டான்?

13.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் கோடிடப்பட்ட இடத்திற்கு ஏற்புடைய விடையைத் தெரிவு செய்க.

-------- அடர்ந்த காட்டில் ----- ஆலமரத்தில் ------- கிளி பல ஆண்டுகளாய் வாழ்ந்து வருகிறது.

a)

ஒரு , ஒரு , ஓர்

b)

ஓர் , ஒரு , ஒரு

c)

ஓர் , ஓர் , ஓர்

d)

ஓர் , ஓர் , ஒரு

14.

வடமொழிச்சந்தி இலக்கணத்தைக் குறிக்காத விடையைத் தெரிவு செய்க?

a)

சேனாதிபதி

b)

அறவினை

c)

குணாதிசயம்

d)

வேதாகமம்

15.

கொடுக்கப்பட்ட இலக்கண விதிக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

a)

தேடிச் சென்றான் , போய்ப் பார்த்தான் ; அவனுக்குச் சொல்

b)

மூச்சுப் பயிற்சி , அப்படிச் சொல் ; பாக்குத் தொப்பு

c)

தீச்சட்டி , கைக்குட்டை ; கைப்பை

d)

அச்சுத் தொழில் ; விற்றுத் தந்தான் ; தப்புக் கணக்கு