wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

UPSR Sains (தொகுதி 8) - உமா பதிப்பகம்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

பின்வரும் விலங்குகள் தமது இனத்தின் நீடுநிலவலை உறுதிசெய்ய மேற்கொள்ளும் முறை யாது?


* தவளை * கொசு * மீன்

a)

ஒரு வகை திரவத்திலான முட்டைகளை இடுதல்.

b)

மிதக்கும் முட்டைகளை இடுதல்.

c)

முட்டைகளை மறைத்து வைத்தல்.

d)

அதிகமான முட்டைகளை இடுதல்.

2.

பின்வரும் தாவரங்களுள் எது, இலைகளைச் சுருட்டிக் கொள்வதன் மூலம் நீரை இழக்காமல் பாதுகாக்கும்?

a)

கரும்பு

b)

கள்ளிச்செடி

c)

வாழைமரம்

d)

செம்பனை மரம்

3.
கீழ்க்காண்பனவற்றுள் எதைப் பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் பெறக்கூடிய பரம்பரைக் கூறாகும்?
a)
சிந்தனையாற்றல்
b)
முக வடிவம்
c)
கண்ணின் நிறம்
d)
முடியின் நீளம்
4.

பின்வருபவை சில உணவு வகைகளாகும்.


P - ரொட்டி

Q - பனிக்கூழ்

R - அனிச்சல்

S - மீ


நுண்ணுயிர்களின் துணையோடு தயாரிக்கப்பட்ட உணவுகள் யாவை?

a)

P, Q

b)

P, R

c)

Q, S

d)

R, S

5.
பின்வரும் நோய்களில் எது ஒரு தொற்றுநோயாகும்?
a)
சொத்தைப் பல்
b)
வயிற்றுப் போக்கு
c)
உணவு ஒவ்வாமை
d)
சின்னம்மை
6.
பின்வரும் பாலூட்டிகளுள் எது முட்டையிடும்?
a)
எலி
b)
தாப்பீர்
c)
பிளாட்டிபஸ்
d)
அணில்
7.
ஒரு டென்னிஸ் பந்தின் விட்டத்தை அளக்கப் பொருத்தமான அளவைக் கருவி எது?
a)
அடிக்கோல் – நூல்
b)
அடிக்கோல் – வரைகலைத் தாள்
c)
நூல் – வரைகலைத் தாள்
d)
குச்சி – அடிக்கோல்
8.
ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் வெளியேற்றும் காற்றில் அதிகமாக இருப்பது என்ன?
a)
கரிவளி
b)
உயிர்வளி
c)
ஹைட்ரோஜன் வளி
d)
கிரிப்டோன் வளி
9.
காண்டாமிருகம் கடுமையான வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யும்?
a)
இடம் பெயரும்.
b)
தன் கொம்பை நீண்ட நேரம் நீரில் வைத்திருக்கும்.
c)
நீண்ட நேரம் சேற்றில் புரளும்.
d)
மண்ணுக்குள் புதைந்து கொள்ளும்.
10.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், உணவைக் கலனில் அடைக்கும் முறையைக் காட்டுகிறது.

* W - கலனை மூடுதல்

* X - உணவை வெப்பப்படுத்துதல்

* Y - உணவைக் கழுவிச் சுத்தப்படுத்துதல்

* Z - உணவைக் கலனில் அடைத்தல்

a)

W, X, Y, Z

b)

X, Y, Z, W

c)

Y, X, Z, W

d)

Z, Y, X, W