NEW
Font size
Worksheetsமொழியணிகள்
Total questions: 15
Worksheet time: 8mins
'எந்தக் காலத்திலும்' எனும் கருத்தை விளக்கும் இணைமொழியினைத் தெரிவு செய்க.
அங்கும் இங்கும்
அன்றும் இன்றும்
ஆதி அந்தம்
உருண்டு திரண்டு
பின்வரும் பாடல் வரிக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.
- பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகரில்லையா?
(கவிஞர் கண்ணதாசன்)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
கீழ்க்காணும் அடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
- நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
உலகநீதி
வெற்றி வேற்கை
கொன்றை வேந்தன்
நாலடியார்
வாக்கியத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடரை எழுதுக.
- பொறுப்பின்றி ஊர் சுற்றித் திரிந்த அகிலன், சொந்தமாக ஒரு பேரங்காடியை விலைக்கு வாங்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்று பகல் கனவு காண்கிறான்.
மனக்கோட்டை
தொன்று தொட்டு
கை கொடுத்தல்
ஒரு கை பார்த்தல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பொருத்தமான பழமொழி யாது?
- தாத்தாவின் மூக்குக் கண்ணாடியைத் தம்பி தவறுதலாக உடைத்து விட்டதால் அவன் மனம் வருந்தினான்.
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
பின்வரும் நல்வழியை நிறைவு செய்க.
ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப்- போனதிசை
........................................................................
.......................................................................
கறையிருளை நீக்கக் கருதா துலகில்
நிறையிருளை நீக்குமே நின்று
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்
சூழலுக்குப் பொருத்தமான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
- கடந்த ஆண்டு ஆசிரியர் போதித்த அனைத்துக் கட்டுரைகளும் இன்றும் என் நினைவில் உள்ளன
இலைமறை காய் போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
கீழ்க்காணும் வெற்றி வேற்கையில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
- எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
எழுத்தாளர்
ஆசிரியர்
புலவர்
பாடலாசிரியர்
பின்வரும் செய்யுளை நிறைவு செய்க.
...........................................................................
..........................................................................
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்(கு)இள வேனிலும்
ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு.
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்யுளைப் பூர்த்தி செய்க.
நல்லார் ........................... நனிவிரும்பிக் கொண்டாரை
...................... எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்
நெல்லுக்கு ..........................., நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் ................ உண்டு
எனத்தாம் ,
உமியுண்டு,
பூவிற்கும்,
அல்லார்
எனத்தாம்,
உமியுண்டு,
அல்லார்,
பூவிற்கும்
எனத்தாம்,
அல்லார்,
உமியுண்டு,
பூவிற்கும்
எனத்தாம்,
பூவிற்கும்,
உமியுண்டு,
அல்லார்
கீழ்க்காணும் சரியான இணையைத் தெரிவு செய்க.
கரி பூசுதல் - அவமானம் ஏற்படுத்துதல்
மனக்கோட்டை - பிறவாத ஒன்று
தொன்று தொட்டு - உறுதியாக
கரைத்துக் குடித்தல் - நிறைவேறுதல்
கொடுக்கப்பட்ட படத்திற்கேற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
உன்னைப் பேணி காப்பதே எனது கடமை.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
கண்ணினைக் காக்கும் இமை போல
மலரும் மணமும் போல
நகமும் சதையும் போல
விளக்கத்திற்கு ஏற்ற வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
- உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
கீழ்க்காணும் வெற்றி வேற்கையின் சரியான பொருளைத் தெரிவு செய்க.
- கல்விக் கழகு கசடற மொழிதல்
நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக்கூடாது
ஒரு நாளும் ஒரு பொழுதும் படிக்காமல் இருக்கக் கூடாது
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு
கற்றத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்ற வேண்டும்
கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
தையல் துறையில் ஈடுபட எண்ணம் கொண்டிருந்த திருமதி அமுதா, தன் அண்ணனின் வழிகாட்டலையும் பண உதவியையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி முன்னேற்றம் அடைந்தார்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
