NEW
Font size
Worksheetsஉவமைத்தொடர் மரபுத்தொடர்
Total questions: 16
Worksheet time: 16mins
வளர்ந்து வரும் நாடுகளிடையே, நம் நாட்டின் ஒற்றைக் கோபுரமும் இரட்டை கோபுரமும் மலேசியர்களின் திறமையை ___________ மிளிரச் செய்துள்ளன.
இலைமறைக் காய் போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
வேலியே பயிரை மேய்ந்தது போல
சூரியனைக் கண்ட பனி போல
இலைமறைக் காய் போல என்ற உவமைத்தொடருக்கு எதிரான பொருள் தரும் உவமைத்தொடர் யாது?
பசுத்தோல் போர்த்திய புலி போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
அனலில் இட்ட மெழுகு போல
கீழேயுள்ள படங்களில் ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை என்பதை விளக்கும் உவமைத்தொடருக்குத் தொடர்புடைய படம் எது?
____________ இருந்த மாலதியும் ரேவதியும் சிறு பிரச்சனையால் இன்று ______________ ஆகிவிட்டனர்.
நகமும் சதையும் போல, எலியும் பூனையும் போல
எலியும் பூனையும் போல, நகமும் சதையும் போல
நகமும் சதையும் போல, மலரும் மணமும் போல
எலியும் பூனையும் போல, மலரும் மணமும் போல
ரகு ; மணி உனக்கு ஒன்று தெரியுமா? நேற்று நள்ளிரவு நமது குடியிருப்புப் பகுதியில் திருடன் ஒருவன் நுழைந்து விட்டான்.
மணி ; ஆம் தெரியுமே!
ரகு ; அப்படியா! இந்தச் செய்தி எப்படி இவ்வளவு விரைவாகப் பரவியது?
குன்றின் மேலிட்ட விளக்கு போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
காட்டுத் தீ போல
இலைமறைக் காய் போல
ஏழ்மை குடும்பத்தில் பிறந்தாலும் வறுமை ஒரு தடையல்ல என்பதை நிருபீத்து விட்டாயே!
மேற்கண்ட கூற்றுக்கு ஏற்ற உவமைத்தொடர் என்ன?
சூரியனைக் கண்ட பனி போல
காட்டுத் தீ போல
சேற்றில் மலர்ந்த செந்தாமைரைப் போல
சிலை மேல் எழுத்துப் போல
'நீ அந்தப் பணத்தை ஏமாற்றி எடுத்ததும் இல்லாமல் அதை இவ்வளவு நேரம விசாரித்தும் ஒப்புக்கொள்ளாமல் பல பொய்களைச் சொல்லி தப்பித்து ஓடப் பார்க்கிறாயா?'
சூழலுக்குப் பொருந்தாத மரபுத்தொடர் எது?
கங்கணம் கட்டுதல்
கடுக்காய் கொடுத்தல்
காது குத்துதல்
கம்பி நீட்டுதல்
படத்தில் மறைந்திருக்கும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
உறுதி பூணல்
பிறவாத ஒன்று
முழுக் கவனத்துடன்
விடாப்பிடியாக நிற்றல்
கணித் மேதையான ராமானுஜன் அவர்கள் கணிதத் தொடர்பான எல்லா நுணுக்கங்களையும் _________________.
கங்கணம் கட்டியுள்ளார்
மனப்பால் குடித்துள்ளார்
தட்டிக் கழித்துள்ளார்
கரைத்துக் குடித்துள்ளார்
யார் என்ன சொன்னாலும் உடனே ஓடிச் செய்து விடுவாயா?
சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடர் எது?
தோள் கொடுத்தல்
எடுப்பார் கைப்பிள்ளை
கைக் கொடுத்தல்
மனப்பால் குடித்தல்
ஆன முதலில் அதிகஞ் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டு - போனதிசை
செய்யுளின் முதல் அடியை விளக்கும் மரபுத்தொடர் யாது?
அள்ளி இறைத்தல்
மனப்பால் குடித்தல்
தலை முழுகுதல்
வெளுத்து வாங்குதல்
கல்வியில் சிறந்த மாணவனாக வர வேண்டும் என்று _________ கொண்டு அல்லும் பகலும் படித்துக் கொண்டிருக்கும் தன் மகனைக் கண்டு திரு.ராமு ______________.
கங்கணம் கட்டிக், செவி சாய்த்தார்
கரைத்துக் குடித்துக், கைக் கொடுத்தார்
ஒரு கைப் பார்த்துக், கடுக்காய கொடுத்தார்
கங்கணம் கட்டிக், உச்சிக் குளிர்ந்தார்
அடக்கமுடையாரை அறிவிலாற் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா.....
கருமையாக்கப்பட்ட சொல்லுக்குப் பொருந்தும் மரபுத்தொடர் என்ன?
கீள்ளுக் கீரை
ஓட்டை வாய்
எடுப்பார் கைப்பிள்ளை
கிணற்றுத் தவளை
யாரிடமும் சொல்லாதே என்று எவ்வளவோ சொல்லியும் நீ அந்த விஷயத்தைச் சொல்லி விட்டாயே. இப்பொழுது என்ன செய்வது?
சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடர் என்ன?
குரங்குப் பிடி
ஓட்டை வாய்
கிணற்றுத் தவளை
ஏட்டுச் சுரைக்காய்
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட இலட்சியம்
என்னை மதித்தால் என் உயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்.
பாடல் வரிகளில் கருமையாக்கப்பட்ட சொற்றொடருக்கு ஏற்ற மரபுத்தொடர் என்ன?
ஒற்றைக் காலில் நிற்றல்
கம்பி நீட்டுதல்
ஓட்டை வாய்
ஒரு கை பார்த்தல்
தந்தை வீட்டில் இல்லாத தருணத்தில் அவருடைய பணத்தைத் திருடினான் அகிலன். அவன் அன்னையிடம் __________________ அகப்பட்டான்.
திட்ட வட்டமாக
கையும் களவுமாய்
கடுக்காய் கொடுத்து
அரக்கப் பரக்க
