Font size
Worksheetsநமது சமயத்தை அறிவோம்-பாக்யா 20
Total questions: 10
Worksheet time: 5mins
சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார் இவர்.
அப்பர்
திருமூலர்
அகத்தியர்
வள்ளலார்
தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார். இவரே ....................... எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், இந்நூல் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார்.
ஆரம்பம்
அகத்தியம்
தேவாரம்
குறளோவியம்
இவர் தினை மாவு, பயனளிக்கும் தானியங்கள், விசம் தோய்ந்த அம்புகள், தர்ப்பைப்புல் ஆகியவைகள் பற்றி கூறியுள்ளார் (ரிக்வேதம் 1-189-10; 1-191-30) இவர்...
ரிஷி
மருத்துவர்
குரு
அவதாரம்
இராமாயணக் காப்பியத்தில், ........................ வன வாச காலத்தில், அகத்தியர் சந்தித்து மந்திர பல மிக்க ஆயுதங்களை அருளினார்.
அகத்தியர், இந்துக் கடவுள்களைப் போல் தீயவர்களை அடக்கினார்
லட்சுமணன்
இராமன்
பீமன்
வியாசர்
அகத்தியரைப் பற்றி சரியான தகவல்கள் குறிப்பிடுக...
தமிழ் முனிவர் (தமிழ் இலக்கணம் அருளியதால்)
மாதவ முனிவர் (அதிக தவம் செய்ததால்)
குருமுனி (முனிவர்களுக்கெல்லாம் குருவானவர்)
முதல் சித்தர் (18 சித்தர்களில் முதன்மையானவர்)
அகத்தியரை அமரமுனிவர் என்று குறிப்பிடுவதன் காரணம் ....
பலருக்கு குருவாக இருந்ததால்
புகழ் பெற்ற முனிவர் என்ற பொருளில்
அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் முனிவர் என்ற பொருளில்
இன்றுவரை பேசப்படும் முனிவர் என்ற பொருளில்
குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் , ......................., ............................. என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
குடமுனி
கும்பயோகி
பொதியவரை முனிவன்
திருமுனி
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி ............... கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார். இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர்.
கிருஷ்ணக்
முருகக்
பைரவக்
விநாயகக்
சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை ............... காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது
சிவபெருமான்
முருகர்
விநாயகர்
வாயுப்புத்திரன்
பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான ..................... பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.
மனநோய்
தோல் நோய்
இருதய நோய்
உடல் நோய்
