NEW
Font size
Worksheetsதிருவாசகம் ஆண்டு 5 ஆக்கம்: திரு.சா.விஸ்வம்,
Total questions: 10
Worksheet time: 6mins
திருவாசகத்தை அருளியவர் யார்?
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்
வள்ளலார்
குமரகுருபர சுவாமிகள்
வானாகி என்பதன் பொருள் என்ன?
காற்றாகவும்
வெளிச்சமாகவும்
மண்ணாகவும்
ஆகாயமாகவும்
வானாகி மண்ணாகி வளியாகி ___________
விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.
ஒலியாகி
ஒழியாகி
ஒளியாகி
சுடராகி
உடலாகவும் அந்த உடலில் உறையும் ஆன்மாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான். தன்னை உணர்ந்தவர்களுக்கும் உள்ளவனாகவும் நம்பாதவர்களுக்கும் இல்லாதவனாகவும் விளங்குகின்றான். இப்பொருளுக்கு ஏற்ற செய்யுளடியைத் தெரிவு செய்க.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
திருவாசகப் பாடலுக்குத் தொடர்பில்லாத வாக்கியத்தைத் தெரிவு செய்க.
இறைவன் ஆகாயமாகவும் நிலமாகவும் இருக்கின்றார்.
இறைவன் காற்றாகவும் வெளிச்சமாகவும் தென்படுவதில்லை
இறைவன் உடலில் உறையும் ஆன்மாவாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்.
இறைவனின் தன்மையைப் போற்றிப் புகழ்வதற்குச் சொற்களே கிடையாது.
நான், எனது என்ற செருக்குடையவரை அவரவர் விருப்பம்போல் ஆடவிட்டு, கோடிடப்பட்ட சொல்லின் பொருள் என்ன?
ஆணவமிக்கவர்
ஆனந்தமிக்கவர்
ஆத்மாமிக்கவர்
ஆபத்துமிக்கவர்
இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் என்ன?
திருமுறை
திருமந்திரம்
திருவருட்பா
திருவாசகம்
வானாகி ________ வளியாகி ஒளியாகி
விடுப்பட்ட இடத்தைப் பூர்த்தி செய்க.
மண்ணாகி
மரமாகி
மன்னனாகி
மந்திரமாகி
இறைவன் செருக்குள்ளவர்களுக்கு இறுதியில் எவ்வாறு இறையாற்றலை உணரச் செய்கிறான்?
இறைவழிபாட்டின் மூலம்
உறக்கத்தின் மூலம்
துன்பத்தின் மூலம்
அவரவர் விருப்பம் போல ஆடவிட்டு
திருவாசகப் பாடலுக்குப் பொருந்தி வரும் கூற்றைத் தெரிவு செய்க.
இறைவன் நீராக இருக்கின்றார்.
இறைவன் தம்மை உணர்ந்தவர்களுக்கு இல்லாதவராக விளங்குகின்றார்.
இறைவனின் புகழைப் பாடுவதற்குக் குறைந்த சொற்களே உள்ளன.
இறைவன் உடலாகவும் எங்கும் நீக்கமற இருக்கிறார்.
