Worksheetsஇலக்கியம் படிவம் 5
Total questions: 30
Worksheet time: 6mins
அகல்விளக்கு நாவலாசிரியர் மு.வரதராசன் பெற்ற உயரிய விருது யாது?
தமிழ்நாட்டு அரசின் விருது
சமூகக் கலைமணி விருது
சாகித்திய அகாடெமி விருது
பாவேந்தர் விருது
அகல்விளக்கு நாவலின் முதன்மைக் கதைப்பாத்திரம் யார்?
சந்திரன்
வேலய்யன்
மாலன்
சாந்தலிங்கம்
கீழ்க்காண்பவற்றுள் எது வேலய்யனின் பண்புநலன்கள் அல்ல
நட்பைப் போன்றுபவன்
பொறுப்புணர்ச்சி கொண்டவன்
மூடநம்பிக்கை உடையவன்
மனக்கட்டுப்பாடு உடையவன்
அகல்விளக்கு நாவலில் இடம்பெற்ற கதைப்பாத்திரத்தோடு தொடர்புடைய சரியான இடப்பின்னணியைத் தேர்ந்தெடு
வேலய்யன் பிறந்த ஊர் - பெருங்காஞ்சி
சந்திரன் தலைமறைவாகியது - ஈரோடு
பாக்கிய அம்மையார் இருப்பிடம் - வாலாசாப்பேட்டை
மாலன் பிறந்த ஊர்- கோவை
அகல்விளக்கு நாவலின் காலப்பின்னணி யாது?
காந்தியடிகள் காலம்
சுதந்திரப் போராட்ட காலம்
12ஆம் நூற்றாண்டு
இந்திய சுதந்திரப் போராட்ட காலம்
அகல்விளக்கு நாவலில் இடம்பெறாத சமுதாயப் பின்னணியைத் தேர்ந்தெடு
மாணவர்கள்
மேல்தட்டு மக்கள்
மன்னர்கள்
மூடநம்பிக்கை உடையவர்கள்
இவருடன் குடும்பம் நடத்துவது பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. பள்ளிக்கூடமோ இராணுவப் பள்ளிக்கூடமாக இருக்கிறது. தாய் வீட்டுக்கு வந்தது சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுபோல் இருக்கிறது
(அத்தியாயம் 22, பக்கம் 294)
மேற்காணும் கூற்றில் இடம்பெற்ற இருவர் யார்?
மணிமேகலை - பாக்கிய அம்மையார்
கற்பகம் - மாலன்
வள்ளி - சந்திரன்
வேலய்யன்- கயற்கண்ணி
இவருடன் குடும்பம் நடத்துவது பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. பள்ளிக்கூடமோ இராணுவப் பள்ளிக்கூடமாக இருக்கிறது. தாய் வீட்டுக்கு வந்தது சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுபோல் இருக்கிறது
(அத்தியாயம் 22, பக்கம் 294)
இக்கூற்றைக் கூறியவரின் பண்புநலன் யாது?
கல்வியில் ஆர்வம் கொண்டவர்
கணவரின் மீது அதிருப்தி கொண்டவர்
சிறையில் இருந்து வந்தவர்
இல்லற வாழ்க்கையில் மனநிறைவு கொண்டவர்
இவருடன் குடும்பம் நடத்துவது பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. பள்ளிக்கூடமோ இராணுவப் பள்ளிக்கூடமாக இருக்கிறது. தாய் வீட்டுக்கு வந்தது சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுபோல் இருக்கிறது
(அத்தியாயம் 22, பக்கம் 294)
இக்கூற்றைக் கூற நேர்ந்ததற்கான காரணம் யாது?
கணவனுடன் சண்டையிட்டு தாய் வீட்டுக்கு வந்துவிட்டதால்
கணவனுடன் குடும்பம் நடத்த முடியாததால்
கணவன் மீது கொண்ட அதிருப்தியை வெளியிடுவதால்
கணவன் சிறைக்குச் சென்றுவிட்டதால்
இவருடன் குடும்பம் நடத்துவது பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. பள்ளிக்கூடமோ இராணுவப் பள்ளிக்கூடமாக இருக்கிறது. தாய் வீட்டுக்கு வந்தது சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுபோல் இருக்கிறது
(அத்தியாயம் 22, பக்கம் 294)
"சிறையிலிருந்து விடுதலையாகி" என்பதன் சூழலுக்கு ஏற்ற பொருள் யாது?
குடும்ப வறுமையிலிருந்து மீண்டு மகிழ்ச்சியாக வாழ்வது
சிறையிலிருந்து மீண்டு தாய் வீட்டுக்கு வந்தது
கணவனின் சிறையிலிருந்து மீண்டது
கணவனின் கட்டுப்பாடான வாழ்க்கைச் சூழலிலிருந்து மீண்டது
அகல்விளக்கு நாவலில் சந்திரன் பாத்திரத்தின்வழி உணர்த்தப்படும் படிப்பினையைத் தேர்ந்தெடு
பாலியல் மோகம் வாழ்க்கையைச் சீரழிக்கும்
மூடநம்பிக்கை வாழ்க்கையைச் சீரழிக்கும்
நல்ல நட்பைப் போற்ற வேண்டும்
மனக் கட்டுப்பாடோடு வாழவேண்டும்
‘அரளிச் செடி’ என்ற குறியீட்டோடு தொடர்புடைய கதைப்பாத்திரம் யார்?
வேலய்யன்
சந்திரன்
மாலன்
சாமண்ணா
கீழ்க்காணும் சமுதாய சிந்தனைகளில் எது பாக்கிய அம்மையாரின் பாத்திரத்தின்வழி உணர்த்தப்படும் சமுதாய சிந்தனை அல்ல?
அறநூல் வாசிப்பு வாழ்க்கையை உயர்த்தும்
துன்பங்களில் துவண்டு போகக்கூடாது
தொண்டுள்ளம் கொண்டிருக்க வேண்டும்
விடாமுயற்சி வெற்றி தரும்
கீழ்க்காணும் கதைப்பாத்திரங்களின் பொருந்தாத இணையைத் தேர்தெடு
வேயய்யன் – கயற்கண்ணி
சந்திரன் – வள்ளி
மாலன் – இமாவதி
மணிமேகலை – ஆசிரியர்
நீலகிரி மலையில் தலைமறைவாக வாழ்ந்த சந்திரனைக் கண்டுப்பிடிக்க வேலய்யனுக்கு உதவியவர் யார்?
மாலன்
சாந்தலிங்கம்
மாசன்
இமாவதி
கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் கருப்பொருள் யாது?
கம்பரின் கவித்துவம்
கம்பரின் தனித்துவம்
கம்பரின் கவித்துவமும் தனித்துவமும்
கம்பரின் சிறப்பு
கீழ்க்காணும் புலவர்களில் அரசவைப் புலவர் யார்?
குணவீர பண்டிதர்
குமாரப் புலவர்
சடையப்ப வள்ளல்
ஒட்டக்கூத்தர்
கீழ்க்காணும் சிறப்புகளில் எது ‘ஏர் எழுபது’ நூலில் இடம்பெற்ற சிறப்பு அல்ல?
போர்ப்படை வெற்றிக்கு உழவுத்தொழில்
அரசியல் நடப்பதற்கு அச்சாணி உழவன்
யாசிப்பவனுக்கும் தோல்வியில்லை
மன்னன் சிறக்க உழவுத்தொழிலே அடிப்படை
சோழ அரசவையில் நாட்டியம் ஆடிய பெண்மணிக்குச் காற்சிலம்பைப் பரிசளித்த கம்பரை ஒட்டக்கூத்தர் கண்டித்தது ஏன்?
காற்சிலம்பைப் பரிசளித்ததால்
அரச மரபை மீறியதால்
சோழனை அவமதித்ததால்
ஓட்டக்கூத்தரின் ஆணையை மீறியதால்
கீழ்க்காணும் பண்புநலன்களில் கம்பர் பாத்திரத்திற்குப் பொருந்தாத பண்புநலன் யாது?
தமிழ்ப்பற்று உடையவர்
வித்யா கர்வம் கொண்டவர்
புகழை விரும்புபவர்
உழவுத்தொழிலைப் போற்றுபவர்
இராமாயணத்தைத் தமிழாக்கம் செய்தல்,
கம்பரின் கவித்திறன் கண்டு அரண்மனையில் இடமளித்தல்,
இராமாயணத்தை இயற்றிய கம்பருக்குப் பரிசுகள் வழங்குதல்.
மேற்காணும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சோழனின் மிகச்சரியான பண்புநலனைத் தேர்ந்தெடு.
தமிழ்ப் புலமை உடையவர்
தமிழ்ப் பற்று உடையவர்
கவிப்புலமை உடையவர்
தனித்துவம் மிக்கவர்
கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் காலப்பின்னணி யாது?
ஒட்டக்கூத்தர் காலம்
9ஆம் நூற்றாண்டு
கம்பர் காலம்
12ஆம் நூற்றாண்டு
கவிச்சக்கரவர்த்தி நாடகத்தில் இடம்பெறாத சமுயாதப் பின்னணியைத் தேர்ந்தேடு
புலவர்கள்
மன்னர்கள்
ஒற்றர்கள்
உழவர்கள்
பாண்டியனை வென்றுவரும் சோழனைக் கம்பர் வாழ்த்திப் பாட மறுத்தற்கான காரணம் யாது?
அரண்மனையை விட்டு வெளியேற முடிவெடுத்ததால்
உழவர்களைப் பாடுவதால்
போரின் துன்பங்களைப் பாடுவது அறமில்லை என்று எண்ணியதால்
ஒட்டக்கூத்தரின்மீது கோபம் கொண்டதால்
‘துமி’ என்ற சொல்லின் பொருள் யாது?
துளியிலும் பெரியது
துளியிலும் சிறியது
தயிர்த் துளி
துளி
இராமாயண அரங்கேற்றம் எங்கு நடந்தது?
திருவழுந்தூர்
திருவெண்ணை நல்லூர்
திருவரங்கம்
திருவண்ணாமலை
‘சரராமர்’ என்ற சிறப்பு யாருக்கு வழங்கப்பட்டது?
கம்பர்
சடையப்ப வள்ளல்
ஒட்டக்கூத்தர்
சோழன்
அம்பிகாபதிக்கும் – அமராவதிக்கும் ஏன் மரண தண்டனை வழங்கப்பட்டது?
காதலித்ததால்
இரவில் யாருக்கும் தெரியாமல் சந்தித்ததால்
காந்தர்வமணம் புரிந்ததால்
சோழனை அவமதித்ததால்
கல்யாண வரி,
சிவிகை செல்லும் வழியெங்கும் வரி விலக்கு, திருவழுந்தூரில் சிறுபகுதிக்குக் கம்ப நாடு எனப் பெயரிடுதல்
மேற்கண்ட பரிசுகள் யாரால் வழங்கப்பட்டன?
பாண்டிய மன்னன்
காகத்தீய மன்னம்
பராக்கிரமபாகு
குலோத்துங்கன்
கம்பர் தன் இறுதி காலத்தில் எங்கு தங்கினார்?
சடையப்ப வள்ளல் வீடு
ஒட்டக்கூத்தர் வீடு
சிங்கன் வீடு
சிங்கராயன் வீடு
