wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 26

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

"குழந்தை பசியால் அழுதது." எனும் வாக்கியத்தில் எழுவாய்

a)

பசி

b)

குழந்தை

c)

அழுதது

2.

"நான் நாளை பாடம் படிப்பேன்". எனும் வாக்கியம் உணர்த்தும் காலம்

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

3.

கனி என்பதன் பொருள் என்ன ?

a)

மிகுதி

b)

காய்

c)

பழம்

4.

பனி+மலர்-என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

பனிம்மலர்

b)

பணிமலர்

c)

பனிமலர்

5.

என்னுயிர்-என்பதைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

என்+உயிர்

b)

என்+னுயிர்

c)

என்னு+யிர்

6.

து,தை,தொ எனும் எழுத்துகள் _______________ வகையைச் சார்ந்தவை.

a)

மெல்லின உயிர்மெய்

b)

வல்லின உயிர்மெய்

c)

உயிர்மெய்க் குறில்

d)

வல்லினமெய் எழுத்து

7.

ய,_____,_____,வ,____,ள - காலி இடத்தில் இருக்க வேண்டிய எழுத்துகள் யாவை ?

a)

ற,ழ,ல

b)

ர,ல,ழ

c)

ர,ழ,ல

d)

ற,ல,ழ

8.

கிரந்த எழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்

a)

b)

ஞௌ

c)

d)

9.

கொடுக்கப்பட்டுள்ள ஆத்திசூடியின் பொருள் என்ன

ஈவது விலக்கேல்

a)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறுக்கக்கூடாது.

b)

கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்.

c)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

10.

படம் காட்டும் சரியான புதிய ஆத்திசூடி எது ?

a)

ஔடதம் குறை

b)

ஊண்மிக விரும்பு

c)

உடலினை உறுதி செய்

d)

ஓய்தல் ஒழி

11.

பல்வகைச் செய்யுளை நிறைவு செய்க.

_____________ வீணையும் மாலை மதியமும்

வீசு ___________ வீங்(கு) இள வேனிலும்

மூசு வண்டறை ___________ போன்றதே

ஈசன் எந்தை இணையடி ______________.

a)

மாலை , தென்றலும் , மாசில் , பொய்கையும்

b)

நீழலே , மாசில் , பொய்கையும் ,தென்றலும்

c)

மாசீல் , தென்றலும் , பொய்கையும் , நீழலே

12.

'மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார்... '

மேற்குறிப்பிடப்பட்டுள்ள செய்யுளடி இடம்பெற்றுள்ள பகுதி என்ன ?

a)

நல்வழி

b)

நாலடியார்

c)

மூதுரை

d)

நீதிநெறி விளக்கம்

13.

'தங்குதீர் வுள்ளார் தளர்ந்து...',எனத் தொடங்கும் அடிகளை இயற்றியது யார் ?

a)

சிவபிரகாச சுவாமிகள்

b)

குமரகுருபர சுவாமிகள்

c)

சிவசுப்ரமணிய சுவாமிகள்

d)

சமண முனிவர்

14.

அறம் செய்ய விரும்பு. இதை எழுதியது யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

அதிவீரம பாண்டியன்

d)

திருவள்ளுவர்

15.

பெருநாள்கள் வந்து விட்டால் வருடத்திற்கு ஒரு முறைதானே என்று நினைத்து அதிகமாகச் செலவு செய்வோம்; வியர்வை சிந்தி சம்பாதித்ததை வீணாக அழித்து விடுவோம்.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

சிக்கனம் சீரளிக்கும்

d)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

16.

ஓடை நீர் _____ என ஓடியது

a)

மளமள

b)

சலசல

c)

கலகல

d)

குடுகுடு

17.

கதவைத் தட்டும் ஓசை.

a)

தகதக

b)

தடதட

c)

கிடுகிடு

d)

குடுகுடு

18.

தென்னையின் பெருமையை உவமையாய்க் கூறும் செய்யுள் யாது?

a)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

b)

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறா உம்

c)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

d)

ஆன்முதலில் அதிகஞ் செலவானால்

19.

செய்யுளைப் பூர்த்தி செய்க.


நல்லார்க்கும் ________ நடுநின்ற நடுவே

a)

கெட்டவர்க்கும்

b)

கற்றவர்க்கும்

c)

நரர்களுக்கும்

d)

பொல்லார்க்கும்

20.

நுண்ணிய கரும்மும்_____________.

a)

செய்வன செய்

b)

எண்ணித் துணிக.

c)

வேதனை செய்யும்

d)

கண்ணெனத் தகும்

21.

அன்னையர் தினத்தன்று பலர் தங்கள் அன்னையிடம் ஆசி பெற்று அவருக்குப் பரிசுகளைக் கொடுப்பர்.

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

c)

ஆலயம் தொழுவது சாலமும் நன்று

d)

ஏவா மக்கள் மூவா மருந்து

22.

படம் உணர்த்தும் உலகநீதியைத் தெரிவு செய்க.

தம்பி !நீ அந்த போக்கிரிப் பையனோடு ஊர் சுற்றுவதாகக் கேள்விப்பட்டேன். அது நல்லதல்ல ; விட்டுவிடு.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்.

b)

வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்.

c)

போகாத விடத்தனிலே போகவேண்டாம்.

d)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரியவேண்டாம்.

23.

சரியான இணைமொழியைத் தெரிவு செய்க

வீட்டின் வெளியே ஏதோ சத்தம் கேட்டது. ராமையா வெளியே வந்து __________________ பார்த்தார். யாரையும் காணவில்லை.

a)

எலும்பும் தோலும்

b)

அன்றும் இன்றும்

c)

அல்லும் பகலும்

d)

சுற்றும் முற்றும்

24.

2. கொடுக்கப்பட்ட பொருளுக்குக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுத்திடுக.

எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

தனிமரம் தோப்பாகாது

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

d)

வெள்ளம் வருமுன் அணை போடு

25.

கோடிடப்பட்ட சொல்லுக்கு ஏற்ற காலம், திணை , எண் , பால் ஆகியவற்றைத் தெரிவு செய்க.

துர்கா பட்டம் பெற்றாள்

a)

இறந்த காலம், உயர்திணை , ஒருமை, பெண்பால்

b)

நிகழ் காலம், உயர்திணை , ஒருமை, பெண்பால்

c)

எதிர்காலம் காலம், அஃறிணை , பன்மை, ஆண்பால்

d)

இறந்த காலம், உயர்திணை , பன்மை, பெண்பால்

26.

சரியான நிறுத்தக்குறியைத் தெரிவு செய்க.

நீயா எனக்கு உணவுப் பொருள்களை அனுப்பியவர்

a)

.

b)

,

c)

!

d)

?