wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகும்

Total questions: 33

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் __________ வழங்குகின்றன.

a)

தனிசிறப்பினை

b)

தன்ச்சிறப்பினை

c)

தனிச்சிறப்பினை

d)

தனிச்றப்பினை

2.

கோடிட்ட சொற்றொடருக்கான சரியான இலக்கண விதியைத் தெரிவு செய்க.


அரைத்தூக்கத்தில் இருந்த பசுபதி ஆசிரியரின் கேள்விக்குப் பதில் தெரியாமல் விழித்தான்.

a)

அரை, பாதி எனும் எண்ணுப் பெயர்களின் பின் வலிமிகும்.

b)

அரை, பாதி எனும் எண்ணுப் பெயர்களின் பின் வலிமிகாது.

c)

இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ இன் பின் வலிமிகும்.

d)

இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ இன் பின் வலிமிகாது.

3.

கீழ்க்காண்பவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

இத்துணை + சிறிய = இத்துணைசிறிய

b)

மற்ற + பொருள் = மற்பொருள்

c)

பாதி + நாள் = பாதிந் நாள்

d)

அத்துணை + பாரம் = அத்துணைப் பாரம்

4.

சேர்த்து எழுதுக


இத்துணை + சிரமம் =

a)

இத்தணைசிரமம்

b)

இத்துணைசிரமம்

c)

இத்துணைச் சிரமம்

d)

இத்துனைச்சிரமம்

5.

முருகனோடு வெளிநாட்டிற்குச் சென்று பாதி பணத்தைச் செலவழித்து விட்டேன்.

a)

சரி

b)

தவறு

6.

சேர்த்தெழுதுக :


ஏது + பெரியது

a)

ஏதுப்பெரியது

b)

ஏது பெரியது

c)

எது பெரியது

d)

எதுப்பெரியது

7.

வலிமிகா சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

ஏது + பாடம்

b)

மற்ற + பாடம்

c)

தனி + பாடம்

d)

இனி + பாடம்

8.

கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

“சரியான விடையை இவனா சொன்னான்?”

b)

“ஒவ்வொரு பழமும் தலா பத்து ரிங்கிட்”

c)

“ஓய்வுக்கு முன் அந்த பயிற்சிகளைச் செய்யச் சொல்”

d)

“ பூதமே, இத்துணைச் சிறிய விளக்கினுள் நீ எப்படி நுழைந்தாய்?”

9.

சிறுவனது பசிக்கு உணவளித்துக் கனிவோடுப் பேசினாள் தாயம்மாள்.

a)

தவறு

b)

சரி

10.

வான்முகிலோடுச் சென்றதில் எனக்கு யாது பயனும் கிட்டவில்லை.

a)

சரி

b)

தவறு

11.

அன்று + சமைத்தார் =

a)

அன்று சமைத்தார்

b)

அன்றுச்சமைத்தார்

12.

அத்தனை + பெரிய கோபுரம்

a)

அத்தனைப் பெரிய கோபுரம்

b)

அத்தனை பெரிய கோபுரம்

13.

கலைவாணி எழுதிய அத்தனை+கட்டுரைகளையும் ஆசிரியர் வாசித்தார்.

a)

கலைவாணி எழுதிய அத்தனைக் கட்டுரைகளையும் ஆசிரியர் வாசித்தார்

b)

கலைவாணி எழுதிய அத்தனை கட்டுரைகளையும் ஆசிரியர் வாசித்தார்.

14.

கடைக்கு + சென்ற அப்பா பொருள் எதுவும் வாங்காமல் வீடு திரும்பினார்.

a)

கடைக்கு சென்ற அப்பா பொருள் ஏதும் வாங்காமல் வீடு திரும்பினார்.

b)

கடைக்குச் சென்ற அப்பா பொருள் ஏதும் வாங்காமல் வீடு திரும்பினார்.

15.

அக்கா இன்று + செய்த சமையல் மிக அருமையாக இருந்தது.

a)

அக்கா இன்றுச் செய்த சமையல் மிக அருமையாக இருந்தது.

b)

அக்கா இன்று செய்த சமையல் மிக அருமையாக இருந்தது.

16.

கலைமாறன் எத்தனை + சட்டிகளுக்கு வண்ணம் தீட்டினான்?

a)

கலைமாறன் எத்தனைச் சட்டிகளுக்கு வண்ணம் தீட்டினான்?

b)

கலைமாறன் எத்தனை சட்டிகளுக்கு வண்ணம் தீட்டினான்?

17.

இன்று + படித்த பாடம் எனக்கு நன்றாக புரிந்தது.

a)

இன்றுப் படித்த பாடம் எனக்கு நன்றாக புரிந்தது.

b)

இன்று படித்த பாடம் எனக்கு நன்றாக புரிந்தது.

18.

தோழி ஒருத்தி இன்று + தங்கையைக் காண வந்தாள்.

a)

தோழி ஒருத்தி இன்றுத் தங்கையைக் காண வந்தாள்.

b)

தோழி ஒருத்தி இன்று தங்கையைக் காண வந்தாள்.

19.

இ+தோட்டம் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது.

a)

இத்தோட்டம் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது.

b)

இதோட்டாம் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது.

20.

இவை + சிறப்பான சிறுகதைகள் என ஆசிரியர் பாராட்டினார்.

a)

இவைச் சிறப்பான சிறுகதைகள் என ஆசிரியர் பாரட்டினார்.

b)

இவை சிறப்பான சிறுகதைகள் என ஆசிரியர் பாராட்டினார்.

21.

அந்த,இந்த,எந்த என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

a)

பிழை

b)

சரி

22.

சரியாக வலிமிகும் இடங்களைத் தேர்வு செய்க.

a)

அந்தக் குடை

b)

எந்தக் குழந்தை

c)

இந்த குறிப்பு

d)

எந்த பறவை

23.

இந்த புத்தகம் என்னுடையது.

a)

சரி

b)

பிழை

24.

இனி + கொடு = இனிக்கொடு

a)

சரி

b)

தவறு

25.

முழு + பாடல் =

a)

முழு பாடல்

b)

முழுப்பாடல் =

26.

பொது + கூட்டம் = பொது கூட்டம்

a)

சரி

b)

தவறு

27.

கனா + கண்டான் = கனாக் கண்டான்

a)

சரி

b)

தவறு

28.

ஓடா + குதிரை = ஓடாக்குதிரை

a)

சரி

b)

தவறு

29.

தம்பி + சட்டை = தம்பிச்சட்டை

a)

தவறு

b)

சரி

30.

இனிமையாக + பேசினாள் =

a)

இனிமையாக பேசினாள்

b)

இனிமையாகப் பேசினாள்

31.

அரை + படம் =

a)

அரை படம்

b)

அரைப் படம்

32.

முழு + பாடல் =

a)

முழுப்பாடல்

b)

முழு பாடல்

33.

தனி + படம் = தனி படம்

a)

சரி

b)

தவறு