NEW
Font size
Worksheetsஒலி வேறுபாடு (11.7.2020)
Total questions: 10
Worksheet time: 5mins
நேற்று அம்மா கோழி கறி சமைத்தார். ஆனால் மறுநாள் கறி ___________ ஆகி விட்டதால் அதை
எறிந்துவிட்டார்.
பால்
பாழ்
காலையில் திடீரென்று கனத்த __________ பெய்தது.அதனால் பள்ளிக்கு நடந்து சென்ற மாணவர்கள் நனைந்து விட்டனர்.
மழை
மலை
அனைவரும் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறோம். எச்சூழ்நிலையிலும் ___________ தவறாமல் படிபடியாக முன்னேறுவதே சிறப்பாகும்.
நெரி
நெறி
வீரன் ஒருவன் மரத்தடியில் அயர்ந்து உறங்கினான். அப்போது _____________ ஒன்று அவன் தலையில்
விழுந்ததால் அவன் திடுக்கிட்டு எழுந்தான்.
கணி
கனி
எனக்கு ____________ சாப்பிட ஆசையாக இருந்தது. அதனால் என் பாட்டி எனக்காக அதைச் செய்தார்.
அவல்
அவள்
அமுதாவின் வீட்டின் அருகில் எலி _____________ ஒன்று இருக்கின்றது. அங்கு நிறைய எலிகள் வாழ்கின்றன.
வலை
வளை
அக்காலத்தில் அரசர்கள் போருக்குச் செல்வது வழக்கம். அப்போரின் போது அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட மிருகங்களில் ஒன்று ____________.
பரி
பறி
பருமனாக இருந்த பாலு அதிக நோயால் அவதிப்பட்டான். அவனைப் பரிசோத்த மருத்துவர் அவன் கட்டாயமாக உடல் _____________ வேண்டும் என்று கூறினார்.
இழைக்க
இளைக்க
தொட்டிலில் படுத்திருந்த ___________ திடீரென்று
சத்தமாக அலறத் தொடங்கியது. சத்தம் கேட்ட அம்மா அவ்விடத்தை நோக்கி விரைந்தார்.
குழவி
குளவி
இம்மாதம் முழுவதும் மழைக் காலமாக இருக்கும்
என்று _____________. அதனால் மக்கள் வெளியே செல்லும் போதெல்லாம் குடை எடுத்துச் சென்றார்கள்.
கனிக்கப்பட்டது
கணிக்கப்பட்டது
