wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தமிழ்மொழி வாழ்த்துபாடலை எழுதியவர் யார்?

a)

கவிஞர் வாலி

b)

வைரமுத்து

c)

பாரதியார்

d)

வாணிதாசன்

2.

பாரதியார் எழுதிய இதழ்களின் பெயர் என்ன?

a)

குமுதம்

b)

தினமலர்

c)

இந்தியா

d)

மாலைமலர்

3.

'சிந்துக்குத் தந்தை' என்று பாரதியாரை பாராட்டியவர் யார்?

a)

ம. பொ. சிவஞானம்

b)

தேசிக விநாயகனார்

c)

சுரதா

d)

பாரதிதாசன்

4.

'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________

a)

வான + மளந்தது

b)

வான் + அளந்தது

c)

வானம் + அளந்தது

d)

வான் + மளந்தது

5.

மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _______

a)

வைப்பு

b)

கடல்

c)

பரவை

d)

ஆழி

6.

'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

a)

என் + றென்றும்

b)

என்று + என்றும்

c)

என்றும் + என்றும்

d)

என் + என்றும்

7.

அறிந்தது + அனைத்தும் - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________

a)

அறிந்ததுஅனைத்தும்

b)

அறிந்தனைத்தும்

c)

அறிந்ததனைத்தும்

d)

அறிந்துனைத்தும்

8.

வானம் + அறிந்த என்பதைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________.

a)

வானம்அறிந்து

b)

வான்அறிந்த

c)

வானமறிந்த

d)

வான்மறிந்த

9.

மொழிக்குரிய ஒழுங்குமுறை ________ எனப்படும்.

a)

சொல்

b)

தொடர்

c)

ஒழுக்கம்

d)

மரபு

10.

தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்?

a)

பரஞ்சோதி

b)

நக்கீரனார்

c)

தொல்காப்பியர்

d)

அப்பர்

11.

நெருப்பாக சிவபெருமான் காட்சியளிக்கும் இடம் _______

a)

திருவண்ணாமலை

b)

தில்லை

c)

காஞ்சிபுரம்

d)

திருவானைக்காவல்

12.

பறவைகள் ______________ பறந்து செல்கின்றன.

a)

நிலத்தில்

b)

விசும்பில்

c)

மரத்தில்

d)

நீரில்

13.

இயற்கையை போற்றுதல் தமிழர் ________

a)

மரபு

b)

பொழுது

c)

வரவு

d)

தகவு

14.

'ஐம்பால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

a)

ஐம் + பால்

b)

ஐந்து + பால்

c)

ஐம்பது + பால்

d)

ஐ + பால்

15.

புலியின் இளமைப் பெயர் ________

a)

குட்டி

b)

கன்று

c)

பறழ்

d)

குருளை

16.

மயிலின் ஒலி மரபு ______

a)

கூவும்

b)

கரையும்

c)

கீச்கீச்சிடும்

d)

அகவும்

17.

யானையின் ஒலி மரபு _______

a)

பிளிறும்

b)

கதறும்

c)

கத்தும்

d)

உறுமும்

18.

தொல்காப்பியரின் ஆசிரியர் யார்?

a)

பெருஞ்சித்திரனார்

b)

அகத்தியர்

c)

கம்பர்

d)

கபிலர்

19.

திணை எத்தனை வகைப்படும்?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

நாங்கு

20.

தொல்காப்பியம் __________ நூலாகும்.

a)

இலக்கண

b)

செய்யுள்

c)

கவிதை

d)

உரைநடை