wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ரகர,றகர சொற்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சகுந்தலை குளக்_________________ ஓரமாக அமர்ந்து பனிக்கூழ் உண்டாள்.

a)

கரை

b)

கறை

2.

அம்மா வாழைக்_________________ பட்ட சட்டையைத் துவைத்தார்.

a)

கரை

b)

கறை

3.

ஆசிரியர்_________________ அறிவுரைகளைக் கடைப்பிடித்தேன்.

a)

கூரிய

b)

கூறிய

4.

வியாபாரி இறைச்சியைக் _________________ கத்தியால் வெட்டினார்.

a)

கூரிய

b)

கூறிய

5.

வனிதை இனிமையான _________________ பாட்டுப் பாடினாள்.

a)

குரலில்

b)

குறலில்

6.

நாள்தோறும் _________________ படித்தல் நன்மை பயக்கும்.

a)

குரல்

b)

குறள்

7.

கட்டுரையில் கூறப்பட்ட கருத்துகளை வாசித்து _________________ கொண்டேன்.

a)

அறிந்து

b)

அரிந்து

8.

அத்தை காய்கறிகளைக் கத்தியால் _________________ .

a)

அறிந்தாள்

b)

அரிந்தாள்.

9.

தம்பியின் கையில் முள் _________________காயம் ஏற்பட்டது .

a)

கீறியதால்

b)

கீரியதால்

10.

_________________பாம்பும் சண்டையிட்டுக் கொண்டன.

a)

கீரியும்

b)

கீறியும்

11.

வீட்டை அலங்கரிக்க அம்மா புதிய _________________ச்சீலைகளை வாங்கினார்.

a)

திறை

b)

திரை

12.

கப்பல் எனும்_________________செலுத்தும் முறை ஆங்கிலேயர் ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்டது.

a)

திறை

b)

திரை

13.

அந்நாளில் தோட்டத் தொழிலாளர்களின் தலைவனாக_________________எனும் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

a)

துறை

b)

துரை

14.

சரக்குக் கப்பல் ஒன்று கிள்ளான்_________________ முகத்தை அடைந்தது.

a)

துறை

b)

துரை

15.

_________________நிறைந்த வீரர்கள் வாட்போர் புரிந்தனர்.

a)

மறம்

b)

மரம்